மெட்டா சின்னபார்
மெட்டா சின்னபார் (Metacinnabar) என்பது HgS என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கனசதுரப் படிகவடிவத்திலுள்ள பாதரச சல்பைடு ஆகும். உயர் வெப்பநிலை வடிவம், சின்னபார் (முக்கோண அமைப்பு), உயர் வெப்பநிலை மிகைசின்னபார் (அறுகோண அமைப்பு) என முப்படிக அமைப்பில் காணப்படுகிறது. பாதரச படிவுகளில் சின்னபார் கனிமத்துடன் பாதரசம், ஊர்ட்சைட்டு, சிடிப்னைட்டு, மார்கசைட்டு, இரியல்கர், கால்சைட்டு, பாரைட்டு, சால்கோடோனி மற்றும் ஐதரோகார்பன்களுடன் சேர்ந்து காணப்படுகிறது.[1]
மெட்டா சின்னபார் Metacinnabar | |
---|---|
பொதுவானாவை | |
வகை | சல்பைடு கனிமம் |
வேதி வாய்பாடு | HgS |
இனங்காணல் | |
நிறம் | சாம்பல் கருப்பு |
படிக இயல்பு | திண்ணிய, அரிதாக நாற்கோண படிகங்களாக, செதிற்படிவுப் படலங்கள் |
படிக அமைப்பு | கனசதுரம் |
இரட்டைப் படிகமுறல் | நுண்செதிலில் பொதுவாக {111} மீது |
பிளப்பு | இல்லை |
முறிவு | துணைசங்குருவம் |
விகுவுத் தன்மை | நொறுங்கும் |
மோவின் அளவுகோல் வலிமை | 3 |
மிளிர்வு | உலோகம் |
கீற்றுவண்ணம் | கருப்பு |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளிபுகாது |
ஒப்படர்த்தி | 7.7–7.8 |
மேற்கோள்கள் | [1][2][3] |
மெட்டா சின்னபார் முதன்முதலில் 1870 ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் சான் பப்லோ விரிகுடாவிற்கு வடக்கே அமைந்துள்ள நாபா மாகாணத்தின் உள்ளூர் நகராட்சி ஆணையத்தால் ஆளப்படாத ஒரு பிராந்தியமான நாக்சுவில்லியில் உள்ள ரெடிங்டன் சுரங்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.[2][3]
பன்னாட்டு கனிமவியல் சங்கம் மெட்டா சின்னபார் கனிமத்தை Mcin[4] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Metacinnabar in the Handbook of Mineralogy
- ↑ 2.0 2.1 Metacinnabar on Mindat.org
- ↑ 3.0 3.1 Metacinnabar data on Webmineral
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.