மெண்டோசைட்டு

சல்பேட்டு கனிமம்

மெண்டோசைட்டு (Mendozite) என்பது NaAl(SO4)2·11H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். படிகாரம் வரிசை தொடர்களில் ஒன்றான சல்பேட்டு கனிமமாக இது வகைப்படுத்தப்படுகிறது. சோடியம் அலுமினியம் சல்பேட்டின் (சோடா ஆலம்) நீரேற்றப்பட்ட வடிவமாக மெண்டோசைட்டு அறியப்படுகிறது.

மெண்டோசைட்டு
Mendozite
பொதுவானாவை
வகைசல்பேட்டு கனிமங்கள், படிகாரம் வகை
வேதி வாய்பாடுNaAl(SO4)2·11H2O
இனங்காணல்
மோலார் நிறை440.26 கி/மோல்
நிறம்நிறமற்றது
படிக இயல்புபட்டகம், போலி-சாய்சதுரம்
படிக அமைப்புஒற்றைசரிவச்சு
பிளப்பு{100} சிறப்பு
{001} தெளிவற்றது
{010} தெளிவற்றது
மோவின் அளவுகோல் வலிமை3
மிளிர்வுகண்ணாடி
கீற்றுவண்ணம்வெண்மை
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகும் மற்றும் கசியும்
அடர்த்தி1.74 கி/செ.மீ3
ஒளியியல் பண்புகள்ஈரச்சு (-)
ஒளிவிலகல் எண்nα = 1.449
nβ = 1.461
nγ = 1.463
இரட்டை ஒளிவிலகல்δ = 0.014
2V கோணம்56° (அளக்கப்பட்டது)
கரைதிறன்நீரில் கரையும்
Alters toதமருகைட்டு
மேற்கோள்கள்[1][2][3][4]

1868 ஆம் ஆண்டு மேற்கு அர்கெந்தினாவில் கண்டுபிடிக்கப்பட்டது, சான் இயூவான் அருகே மெண்டோசைட்டு கண்டுபிடிக்கப்பட்டது. சரியான இடம் அறியப்படாமல் ஆனால் "சான் இய்யுவானின் மெண்டோசாவிற்கு அருகில் கிடைத்ததாக பின்னாளில் விவரிக்கப்பட்டது. மெண்டோசா நகரத்தில் கிடைத்ததால் கனிமத்திற்கும் மெண்டோசைட்டு என பெயரிடப்பட்டது. களிமண் முன்னிலையில் சல்பைடு தாதுக்களின் ஆக்சிசனேற்றமடையும் கனிம ஆவியாக்கிகளில் இக்கனிமம் காணப்படுகிறது.[2] தண்ணீரில் மிகவும் நன்றாகக் கரையும். எனவே வறண்ட பகுதிகளில் மட்டுமே இதை காண முடியும். மிகவும் வறண்ட காலநிலையில் அறுநீரேற்றான தம்ருகைட்டு கனிமமாக மாறுகிறது.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. Mineralienatlas
  2. 2.0 2.1 வார்ப்புரு:WebMineral.
  3. 3.0 3.1 வார்ப்புரு:Mindat.
  4. Fang, J. H.; Robinson, P. D. (1972), "Crystal structures and mineral chemistry of double-salt hydrates: II. The crystal structure of mendozite, NaAl(SO4)2·11H2O", American Mineralogist, 57: 1081–88.

நூற் பட்டியல்

தொகு
  • Palache, P.; Berman H.; Frondel, C. (1960). "Dana's System of Mineralogy, Volume II: Halides, Nitrates, Borates, Carbonates, Sulfates, Phosphates, Arsenates, Tungstates, Molybdates, Etc. (Seventh Edition)" John Wiley and Sons, Inc., New York, pp. 469-471.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெண்டோசைட்டு&oldid=3795127" இலிருந்து மீள்விக்கப்பட்டது