மெத்தாக்சைடு

மெத்தாக்சைடுகள் (Methoxides) என்பவை கரிம வேதியல் உப்புக்கள் மற்றும் எளிய ஆல்காக்சைடுகள் ஆகும். இலித்தியம் மெத்தாக்சைடு, ருபீடியம் மெத்தாக்சைடு, சீசியம் மெத்தாக்சைடு, பிரான்சியம் மெத்தாக்சைடு போன்ற பல மெத்தாக்சைடுகள் அறியப்பட்டாலும் சோடியம் மெத்தாக்சைடும் பொட்டாசியம் மெத்தாக்சைடும் மட்டுமே பரவலாக அறியப்படுகின்றன.

மெத்தாக்சைடு அயனியின் அமைப்பு

மெத்தாக்சைடு அயனி

தொகு

மெத்தாக்சைடு அயனியின் மூலக்கூற்று வாய்ப்பாடு CH3O− ஆகும். இது மெத்தனாலின் இணைக் காரமாகும். கரிம வேதியியல் காரமான இது கனிம வேதியியலின் ஐதராக்சைடுகளை விடவும் வலிமையான காரமாகச் செயல்படுகிறது. எனவே மெத்தாக்சைடு கரைசல்கள் தண்ணீர்|தண்ணீரிடமிருந்து]] விலக்கி வைத்தப்பட்டிருக்க வேண்டும். தண்ணிருடன் தொடர்பு கொள்ள நேர்ந்தால் மெத்தாக்சைடானது ஒரு புரோட்டானை அதில் இருந்து நீக்கி மெத்தனால் மற்றும் ஐதராக்சைடைக் கொடுக்கும்.

சோடியம் மெத்தாக்சைடு

தொகு

சோடியம் மெத்தாக்சைடு, சோடியம் மெத்திலேட்டு என்றும் சோடியம் மெத்தானோலேட்டு என்றும் அழைக்கப்படுகிறது. தூய்மையான நிலையில் இருக்கும் போது இது வெண்மை நிறத் துகளாக இருக்கிறது[1]. உயர் மூலக்கூற்று எடை கொண்ட பல்லீத்தர் உருவாக்க எத்திலீன் ஆக்சைடுடன் சேர்க்கப்பட்டு எதிரயனிக் கூட்டு பலபடியாக்கல் வினைகளை முன்னெடுக்கப் பயன்படுத்தப்படுகிறது. சோடியம் மெத்தாக்சைடு மற்றும் பொட்டாசியம் மெத்தாக்சைடு இரண்டுமே பெரும்பாலும் வணிக ரீதியிலான உயிரி எரிபொருள் தயாரிப்பில் வினையூக்கிகளாகப் பயன்படுகின்றன. இச்செயல்முறையில் வேதியியலில் முக்கிளிசரைடுகள் என அழைக்கப்படும் தாவர எண்ணெய்கள் அல்லது விலங்கு கொழுப்புகள், ஆல்ககால் ஈதர் பரிமாற்ற முறையில் மெத்தனால் கொழுப்பு அமில மெத்தில் எசுத்தராக மாற்றப்படுகிறது. தொழிற்சாலைகளில் சோடியம் மெத்தாக்சைடை பெருமளவில் தயாரித்து பல நிறுவனங்கள் விற்பனைக்காக வைத்துள்ளன. .

பொட்டாசியம் மெத்தாக்சைடு

தொகு

உயிரி எரிபொருள் தயாரிக்கும் ஆல்ககால் ஈதர் பரிமாற்ற முறையில் வினையூக்கியாக பொட்டாசியம் மெத்தாக்சைடு பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Sodium Methoxide Material Safety Data Sheet (MSDS)". NOAA.gov.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெத்தாக்சைடு&oldid=2747329" இலிருந்து மீள்விக்கப்பட்டது