மெத்திலமோனியம் புரோமைடு
வேதிச் சேர்மம்
மெத்திலமோனியம் புரோமைடு (Methylammonium bromide) என்பது CH3NH3Br என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம ஆலைடாகும். மெத்திலமீனும் ஐதரசன் புரோமைடும் சேர்ந்து இந்த அமோனியம் உப்பு உருவாகிறது. பெரோவ்சிகைட்டு படிகத்திலான சூரிய செல்களில் பயன்படுத்தப்படுவதே மெத்திலமோனியம் புரோமைடு சேர்மத்தின் முதன்மை பயனாகும்.[3]பெரும்பாலும் மெத்திலமோனியம் புரோமைடுக்குப் பதிலாக பொதுவாக மெத்திலமோனியம் அயோடைடு இப்போதெல்லாம் பயன்படுத்தப்படுகிறது. உறிஞ்சுதல், கடத்துத்திறன் மற்றும் வெளிப்படையான ஆற்றல் இடைவெளி ஆகியவற்றைப் பெறுவதற்காக மெத்திலமோனியம் புரோமைடுடன் சிறிய அளவு மெத்திலமோனியம் அயோடைடும் சேர்க்கப்படுவதுண்டு.
| |||
மெத்திலமோனியம் புரோமைடு படிகங்கள்
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
மெத்திலமோனியம் புரோமைடு
| |||
முறையான ஐயூபிஏசி பெயர்
மெத்திலமோனியம் புரோமைடு | |||
வேறு பெயர்கள்
| |||
இனங்காட்டிகள் | |||
6876-37-5 | |||
ChemSpider | 2282899 | ||
EC number | 229-981-5 | ||
InChI
| |||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 3014526 | ||
| |||
பண்புகள் | |||
CH3NH3Br | |||
வாய்ப்பாட்டு எடை | 111.96904 கி/மோல் | ||
தோற்றம் | வெண் படிகங்கள் [1] | ||
உருகுநிலை | 296[2] °C (565 °F; 569 K) | ||
தீங்குகள் | |||
முதன்மையான தீநிகழ்தகவுகள் | எரிச்சலூட்டும் | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
மேற்கோள்கள்
தொகு- ↑ "Methylammoniumbromide". Greatcell Solar Materials. பார்க்கப்பட்ட நாள் 7 May 2021.
- ↑ "Sigma-Aldrich". Sigma-Aldrich. பார்க்கப்பட்ட நாள் 5 February 2017.
- ↑ Li, Hangqian. (2016). "A modified sequential deposition method for fabrication of perovskite solar cells". Solar Energy 126: 243–251. doi:10.1016/j.solener.2015.12.045. Bibcode: 2016SoEn..126..243L.