மெத்திலெத்தில் கீட்டோன் ஆக்சைம்
மெத்திலெத்தில் கீட்டோன் ஆக்சைம் (Methylethyl ketone oxime) என்பது C2H5C(NOH)CH3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். மெத்திலெத்தில் கீட்டோனின் ஆக்சைம் வழிப்பொருளான இச்சேர்மம் நிறமற்ற நீர்மமாகக் காணப்படுகிறது. சாயத் தொழிலில், சாயத்தைப் பயன்படுத்துவதற்கு முன் உருவாகும் தோல் போன்ற படலத்தை தடுக்கும் பொருளாக மெத்திலெத்தில் கீட்டோன் ஆக்சைம் பயன்படுத்தப்படுகிறது. மேலும் சாயங்களில் பயன்படுத்தும் உலர்த்தும் முகவர்களை கட்டமைக்கவும் இது பயன்படுத்தப்படுகிறது. உலோக உப்புகளின் வினையூக்கத்தால் உலர்த்தும் எண்ணெய்களை ஆக்சிசனேற்ற குறுக்குப் பிணைப்பாக இணைக்கிறது. மேற்பரப்பில் சாயம் ஒருமுறை பூசப்பட்டவுடன் மெத்திலெத்தில் கீட்டோன் ஆக்சைம் ஆவியாகி உலர்த்தும் செயல்முறையை தொடங்கி வைக்கிறது. இதைத்தவிர பீனால் சார்ந்த எதிர் ஆக்சிசனேற்றிகள் உட்பட வேறு தோல்தடுப்பு முகவர்களும் சாயத்தொழிலில் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இவை சாயத்தை மஞ்சள் நிறமாக்கிவிடுகின்றன[1]
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
(2E)-என்-ஐதராக்சி-2-பியூட்டேனிமைன்
| |
வேறு பெயர்கள்
மெக்கோ
| |
இனங்காட்டிகள் | |
96-29-7 | |
ChemSpider | 4481809 |
EC number | 202-496-6 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 5324275 |
| |
பண்புகள் | |
C4H9NO | |
தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
அடர்த்தி | 0.923 கி/செ.மீ3 |
உருகுநிலை | −15 °C (5 °F; 258 K) |
கொதிநிலை | 152 °C (306 °F; 425 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ J. Bielman "Antiskinning Agents" in "Additives for Coatings" J. H. Bielman, Ed. Wiley-VCH, 2000, Weinheim. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-527-29785-5.