மெத்தில் புளோரோ அசிட்டேட்டு
மெத்தில் புளோரோ அசிட்டேட்டு (Methyl fluoroacetate) என்பது C3H5FO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிமச் சேர்மமாகும். புளோரோ அசிட்டிக் அமிலத்தினுடைய மிகவும் நச்சு மிக்க மெத்தில் எசுத்தராக மெத்தில் புளோரோ அசிட்டேட்டு கருதப்படுகிறது. அறை வெப்பநிலையில் நிறமற்று மணமற்று இச்சேர்மம் காணப்படுகிறது. உயர் நச்சு காரணமாக இச்சேர்மத்தை ஒரு போர் ஆயுதமாகப் பயன்படுத்துவதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன[1].
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
மெ.பு.அ, எம்.எப்.ஏ
| |
இனங்காட்டிகள் | |
453-18-9 | |
ChemSpider | 9565 |
EC number | 207-218-7 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 9959 |
| |
UNII | MO8U9H1FAS |
பண்புகள் | |
C3H5FO2 | |
வாய்ப்பாட்டு எடை | 92.07 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
உருகுநிலை | −40 °C (−40 °F; 233 K) |
கொதிநிலை | 104 °C (219 °F; 377 K) |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | உயர் நச்சு |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H226, H300, H315, H319, H335, H400 | |
P210, P233, P240, P241, P242, P243, P261, P264, P270, P271, P273, P280, P301+310, P302+352 | |
தீப்பற்றும் வெப்பநிலை | −32 °C (−26 °F; 241 K) |
Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose)
|
6 மி.கி/கி.கி (சுண்டெலி) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுமெத்தில் அயோடோ அசிட்டேட்டுடன் வெள்ளிபுளோரைடைச் சேர்த்து வினைபுரியச் செய்து 1896 ஆம் ஆண்டு முதன்முதலில் மெத்தில் புளோரோ அசிட்டேட்டு தயாரிக்கப்பட்டது. மெத்தில் குளோரோ அசிட்டேட்டுடன் பொட்டாசியம் புளோரைடைச் சேர்த்து வினைபுரியச் செய்தும் இதைத் தயாரிக்க இயலும்[1].
நச்சுத்தன்மை
தொகுமெத்தில் புளோரோ அசிட்டேட்டு ஒரு வலிப்பூக்கும் நச்சு ஆகும்[2]. இந்நச்சுக்கு ஆட்பட்டவர்களிடம் கடுமையான வலிப்புகள் தோன்றுகின்றன. சுவாசக் குறைபாடு காரணமாக மரணம் கூட சம்பவிக்கலாம்[3].
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Gribble, Gordon W. (July 1973). "Fluoroacetate toxicity". Journal of Chemical Education 50 (7): 460–2. doi:10.1021/ed050p460. பப்மெட்:4711243. http://wadingo.com/1080development.pdf.
- ↑ Saunders, B. C.; Stacey, G. J. (1948). "358. Toxic fluorine compounds containing the C–F link. Part I. Methyl Fluoroacetate and Related Compounds". J. Chem. Soc. 0: 1773–1779. doi:10.1039/jr9480001773.
- ↑ FOSS, G. L. (June 1948). "THE TOXICOLOGY AND PHARMACOLOGY OF METHYL FLUOROACETATE (MFA) IN ANIMALS, WITH SOME NOTES ON EXPERIMENTAL THERAPY". British Journal of Pharmacology and Chemotherapy 3 (2): 118–127. doi:10.1111/j.1476-5381.1948.tb00362.x. பப்மெட்:18866990.