மெனாய் விரிகுடா
இந்தியப் பெருங்கடலில் உள்ள ஒரு விரிகுடா
மெனாய் விரிகுடா (Menai Bay) தான்சானியாவின் சான்சிபார் தீவுக் கூட்டத்தின் மிகப்பெரிய உங்குயா தீவின் தென் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ளது.
மெனாய் விரிகுடா Menai Bay | |
---|---|
ஆள்கூறுகள் | 6°23′S 39°22′E / 6.383°S 39.367°E |
பெருங்கடல்/கடல் மூலங்கள் | இந்தியப் பெருங்கடல் |
வடிநில நாடுகள் | தன்சானியா |
அதிகபட்ச நீளம் | 15 km (9.3 mi) |
அதிகபட்ச அகலம் | 9 km (5.6 mi) |
Islands | பல |
புவியியல்
தொகுமேற்கு இந்தியப் பெருங்கடலின் சான்சிபார் நீரிணையில் 8 கிமீ அகலத்தில் இவ்விரிகுடா அமைந்துள்ளது.
மெனாய் விரிகுடாவின் நீண்ட கடற்கரையில் பத்தொன்பது கிராமங்கள் உள்ளன. மொத்த மக்கள் தொகை சுமார் 17,000 ஆகும். இந்த கிராமங்கள் சான்சிபாரின் உங்குயா தீவின் தெற்குப் பகுதியில் உள்ளன. 1998 ஆம் ஆண்டு சுமார் 20,000 சுற்றுலாப் பயணிகள் இப்பகுதிக்கு வருகை தந்துள்ளனர்[1]
மெனாய் வளைகுடா பாதுகாப்புப் பகுதி என்பது வளைகுடா பகுதியின் வாழ்விடங்கள் மற்றும் தாவர விலங்கினங்களைப் பாதுகாக்கும் ஒரு கடல் அமைப்பு ஆகும். [2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Zeppel, Heather (2006). Indigenous ecotourism: sustainable development and management. CABI. pp. 139–140. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84593-124-7. பார்க்கப்பட்ட நாள் 22 June 2011.
- ↑ WWF: story on Menai Bay Conservation Area
புற இணைப்புகள்
தொகு- Jocara.net: info and map பரணிடப்பட்டது 2016-03-03 at the வந்தவழி இயந்திரம்