மெனிங்கோகோகல் தடுப்பூசி
மெனிங்கோகோகல் தடுப்பூசி (Meningococcal vaccine) நைசீரியா மெனிங்கிடிடிஸால் ஏற்படும் தொற்றுநோயைத் தடுக்கப் பயன்படுத்தப்படும் எந்தவொரு தடுப்பூசிகளையும் குறிக்கிறது.[1] பின்வரும் சில அல்லது அனைத்து வகையான மெனிங்கோகோகசுக்கு எதிராக வெவ்வேறு பதிப்புகள் பயனுள்ளதாக இருக்கும்: A, C, W135 மற்றும் Y. தடுப்பு மருந்துகள் குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்கு 85 முதல் 100% வரை திறனுள்ளதாக இருக்கும்.[1] அவை பரவலாகப் பயன்படுத்தப்படுவதால், மக்களிடையே மூளையழற்சி மற்றும் சீழ்ப்பிடிப்பு பாதிப்பு குறைகிறது.[2][3] அவை தசை அல்லது தோலின் கீழ் ஊசி மூலம் கொடுக்கப்படுகின்றன.[1]
Vaccine description | |
---|---|
Target disease | Neisseria meningitidis |
வகை | ? |
மருத்துவத் தரவு | |
வணிகப் பெயர்கள் | Menactra, Menveo, Menomune, Others |
AHFS/திரக்ஃசு.காம் | ஆய்வுக் கட்டுரை |
மெட்லைன் ப்ளஸ் | a607020 |
கட்டுப்பாட்டு உரிமத் தரவு | EMA:[[[:வார்ப்புரு:EMA-EPAR]] Link] |
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை | B2(AU) C(US) |
சட்டத் தகுதிநிலை | ?-only (அமெரிக்கா) |
வழிகள் | Intramuscular (conjugate), Subcutaneous (polysaccharide) |
அடையாளக் குறிப்புகள் | |
ATC குறியீடு | J07AH01 J07AH02 J07AH03 J07AH04 J07AH05 J07AH06 J07AH07 J07AH08 J07AH09 |
ChemSpider | none |
மிதமான அல்லது அதிக நோய் தாக்கம் உள்ள அல்லது அடிக்கடி பரவும் நாடுகளில் சீரான இடைவெளியில் தடுப்பூசி போட வேண்டும் என்று உலகச் சுகாதார அமைப்பு பரிந்துரைக்கிறது.[4][5]நோய்த்தாக்கும் ஆபத்து குறைவாக உள்ள நாடுகளில், அதிக ஆபத்துள்ள மக்கள் குழுக்களுக்கு நோய்த்தடுப்பு ஊசி போட வேண்டும் என்றும் அவர்கள் பரிந்துரைக்கின்றனர்.[6] ஆஃப்பிரிக்க மூளைக்காய்ச்சல் பரவல் உள்ள இடங்களில், ஒன்று முதல் முப்பது வயது வரையிலான அனைவருக்கும் மெனிங்கோகோகல் A கான்ஜுகேட் தடுப்பூசி மூலம் நோய்த்தடுப்பு மருந்துகள் வழங்குவதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.[7] கனடா மற்றும் அமெரிக்காவில் நான்கு வகைகளுக்கும் எதிரான தடுப்பூசிகள் பதின்வயதினர் மற்றும் அதிக ஆபத்தில் உள்ள மக்களுக்கு வழக்கமாகப் பரிந்துரைக்கப்படுகின்றன.[8] ஹஜ் யாத்திரைக்காக மெக்காவுக்குச் செல்லும் மக்களுக்கும் அவை வழங்கப்பட வேண்டும்.[9]
பாதுகாப்பாக இருப்பது எப்போதுமே நல்லது. சிலருக்கு ஊசி போட்ட இடத்தில் வலி மற்றும் சிவத்தல் ஏற்படலாம்.[10] கர்ப்பக் காலத்தில் பயன்படுத்துவதும் பாதுகாப்பானதுதான்.[11] பத்து லட்சத்தில் ஒருவருக்கு மட்டுமே கடுமையான ஒவ்வாமை நிகழ்கின்றது.[12]
முதல் மெனிங்கோகோகல் தடுப்புப்பூசி 1970களில் வெளியிடப்பட்டது.[13] இது உலகச் சுகாதார அமைப்பின் அத்தியாவசிய மருந்துகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது, அதாவது ஓர் அடிப்படைச் சுகாதார அமைப்பில் தேவைப்படும் மிகவும் முக்கியமான மருந்தாகும்.[14] மொத்தச் செலவானது 2014 ஆம் ஆண்டு நிலவரப்படி ஒரு மருந்தளவிற்கு 3.23 முதல் 10.77 அமெரிக்க டாலர்கள் ஆகும்.[15] அமெரிக்காவில் ஒரு தொகுதிக்கு 100 முதல் 200 அமெரிக்க டாலர்கள் செலவாகும்.[16]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "Meningococcal vaccines: WHO position paper". Weekly epidemiological record 47 (86): 521-540. Nov 2011. பப்மெட்:22128384. http://www.who.int/wer/2011/wer8647.pdf.
- ↑ Patel, M; Lee, CK (25 January 2005). "Polysaccharide vaccines for preventing serogroup A meningococcal meningitis.". The Cochrane Database of Systematic Reviews (1): CD001093. பப்மெட்:15674874.
- ↑ Conterno, LO; Silva Filho, CR; Rüggeberg, JU; Heath, PT (19 July 2006). "Conjugate vaccines for preventing meningococcal C meningitis and septicaemia.". The Cochrane Database of Systematic Reviews (3): CD001834. பப்மெட்:16855979.
- ↑ "Meningococcal vaccines: WHO position paper". Weekly epidemiological record 47 (86): 521-540. Nov 2011. பப்மெட்:22128384. http://www.who.int/wer/2011/wer8647.pdf.
- ↑ "Meningococcal A conjugate vaccine: updated guidance, February 2015.". Weekly epidemiological record 8 (90): 57-68. 20 Feb 2015. பப்மெட்:25702330. http://www.who.int/wer/2015/wer9008.pdf.

- ↑ Barrett, Alan D.T. (2015). Vaccinology : an essential guide. p. 168. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780470656167.
- ↑ "WHO Model List of EssentialMedicines" (PDF). World Health Organization. October 2013. பார்க்கப்பட்ட நாள் 22 April 2014.
- ↑ "Vaccine, Meningococcal". International Drug Price Indicator Guide. Archived from the original on 10 மே 2017. பார்க்கப்பட்ட நாள் 6 December 2015.
- ↑ Hamilton, Richart (2015). Tarascon Pocket Pharmacopoeia 2015 Deluxe Lab-Coat Edition. Jones & Bartlett Learning. p. 315. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781284057560.