திரக்ஃசு.காம்

திரக்ஃசு.காம் (Drugs.com) என்பது இணைய தற்கால அறிவியல் மருந்துகள் கலைக்களஞ்சியம். ஏறத்தாழ 24,000 மருந்துகளைப்பற்றி, பெரும்பாலும் அமெரிக்காவில் மருந்து உட்கொள்வோர்களுக்காகவும் நலத்துறைத் தொழிலியர்களுக்காகவும் குறிப்புகளும் விளக்கங்களும் தரும் இணையத்தளம்.

Drugs.com
வகைதனியார் நிறுவனம்
நிறுவுகைசெப்டம்பர் 2001
தொழில்துறைநலம்சார்
இணையத்தளம்drugs.com

வரலாறு தொகு

"Drugs.com" (திரக்ஃசு.காம்) என்னும் இணையத்தள முகவரி முதலில் பான்னி நாய்பெக்கு (Bonnie Neubeck) பெயரில் 1994 இல் பதிவுசெய்யப்பட்டது[1]. "டாட்காம்" என்றழைக்கப்பட்ட இணையத்தள நிறுவனங்களின் விரைந்த எழுச்சியின் உச்ச காலகட்டத்தில், 1999 காலப்பகுதியில் எரிக்கு மெக்கைவர் (Eric MacIver) நாய்பெக்கிடம் இருந்து விலைக்கு வாங்கும் உரிமையைப் பெற்றார்[2]. 1999 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் மெக்கைவர் இந்த இணையத்தள தொமைன் பெயரை (domain name) அமெரிக்க $823,666 உக்கு ஏலம் விட்டு வென்ச்சர் ஃபிராகிசு (Venture Frogs) என்னும் நிறுவனத்துக்கு விற்றார். இது ஓரு புதுத்தொடக்கத் தொழில் வளர்ப்பகம் (நாற்றகம், incubator); இதனை தோனி இசீ (Tony Hsieh) என்பாரும், ஆல்ஃபிரடு இலின் (Alfred Lin) என்பாரும் நடத்தி வந்தனர். இவர்கள் இலிங்க்-எக்ஃசுச்சேஞ்சு (LinkExchange), பின்னர் ஃசாப்போசு.காம் (Zappos.com) ஆகிய நிறுவங்களோடு தொடர்புடையவர்கள்[3]. வெஞ்ச்சர் ஃபிராகிசு நிறுவனம் சூன் 2001 இல் திரக்ஃசு.காம் பெயரை தனியார் நிறுவனம் ஒன்றிற்கு விற்றுவிட்டார்கள்[4].

இப்பொழுது திரக்ஃசு.காம் வலைத்தளம் திரக்ஃசைட்டுட் டிரசுட்டு (Drugsite Trust) என்னும் நிறுவனத்துக்குச் சொந்தம், அவர்களே இதனை நடத்துகின்றார்கள். இது நியூசிலாந்து மருந்தாளர்களா நடத்தப்படும் ஒரு தனியார் நிறுவனம், ஆனால் அமெரிக்காவில் வெச்சீனியா மாநிலத்தில் தரவுத்த்ளம் அமைத்து இயங்குகின்றது ref>"About Drugs.com". பார்க்கப்பட்ட நாள் 30 June 2013.</ref>

வலைத்தளம் தொகு

செப்டம்பர் 200மில் திரக்ஃசு.காம் (Drugs.com) வலைத்தளம் தொடங்கப்பெற்றது[5]. இத்தளத்தில் கீழ்க்காணும் நிறுவனங்களில் இருந்து மருந்துகள் பற்றிய தரவுகளுக்கான குறிப்புகள் உள்ளன செர்னெர் மல்ட்டம் (Cerner Multum), மைக்குரோமெடிக்ஃசு (Micromedex), வோல்ட்டெர்சு குளூவர் ஃகெல்த்து (Wolters Kluwer Health), அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ( U.S. Food and Drug Administration), மருத்துவர் பெரு உசாத்துணை )Physicians' Desk Reference), ஏ.டி.ஏ.எம் (A.D.A.M)., இசுட்டெடுமனின் மருத்துவ அகரமுதலி (Stedman's Medical Dictionary), அமெரிக்க நல அமைப்பு மருந்தாளர் குமுகம் (American Society of Health-System Pharmacists, AHFS), ஆர்வர்டு மருத்துவப் பீட வெளியீடுகள் (Harvard Medical School Health Publications), வட அமெரிக்க தொகுப்புகள் ஃபார்ம்லைவ் (North American Compendiums, PharmaLive]] மற்றும் ஃகெல்த்துடே (Healthday).[6]

மார்ச்சு 2008 இல் திரக்ஃசு.காம் (Drugs.com) மெடுநோட்ஃசு (Mednotes) வெளியீட்டை அறிவித்தது[7]—இது இணையவழி கூகுள்-ஃகெல்த்து (Google Health) உடன் தொடர்பு கொண்ட தனிமாந்த மருந்துகொள்ளும் பதிவேடு (சனவரி 1, 2012 இல் அன்று கூகுள் ஃகெல்த்தை மூடுவதாக கூகுள் நிறுவனம் சூன் 24, 2011 தெரிவித்தது[8]).

மே 2010 இல், அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் திரக்.சு.காம் உடன் சேர்ந்து மருந்து எடுத்துக்கொள்வோருக்கான இற்றைப்படுத்தப்பட்ட தரவுகளை வலைத்தளத்திலும் கைக்கருவிகளிலும் கிடைக்கச்செய்யும் என்று அறிவித்தது.[9]

திரக்ஃசு.காம் தளம் நலம் சம்பந்தமான வலைகளில் 8.2 மில்லியன் தனித்தனி வருகையாளர்கள் கொண்ட ஒன்பதாவதாக வரிசையில் நிற்கும் தளம் என்று திசம்பர் 2012 இல் காம்சுக்கோர் (comScore) நிறுவனம் தெரிவித்தது, ஆனால் குவான்ட்காசுட்டு (Quantcast) நிருவனம் அமெரிக்காவில் உள்ள எல்லா வலைத்தளங்களிலுமாகச் சேர்த்து 217 ஆவது தளமாக அறிவித்தது [10]

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும் தொகு

  1. "A Prescription for Riches?". Wired.com. November 21, 1999. Archived from the original on 1 ஜூலை 2010. பார்க்கப்பட்ட நாள் 2 July 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "The best domain names in the world... ever!". Internet Magazine. November 1, 1999. Archived from the original on 3 ஜூலை 2010. பார்க்கப்பட்ட நாள் 2 July 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Drugs.com Fetches Nearly a Mil". Wired.com. August 9, 1999. https://archive.today/20120918144103/http://www.wired.com/techbiz/media/news/1999/08/21190 from the original on 18 செப்டம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 2 July 2010. {{cite web}}: |archiveurl= missing title (help); Check date values in: |archivedate= (help)
  4. "Drugs.com Kicks Domain Habit". Wired.com. 1 June 2001. https://archive.today/20120918112546/http://www.wired.com/techbiz/media/news/2001/06/44215 from the original on 18 செப்டம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 2 July 2010. {{cite web}}: |archiveurl= missing title (help); Check date values in: |archivedate= (help)
  5. "Internet Archive Wayback Machine". Archived from the original on 5 அக்டோபர் 2001. பார்க்கப்பட்ட நாள் 2 July 2010. {{cite web}}: Cite uses generic title (help)CS1 maint: unfit URL (link)
  6. "Editorial Policy". பார்க்கப்பட்ட நாள் 2 July 2010.
  7. "Drugs.com Unveils the Next Generation Medication Safety Tool to Help Consumers Avoid Dangerous Drug Interactions". Reuters. 24 November 2008. Archived from the original on 5 ஜூலை 2010. பார்க்கப்பட்ட நாள் 2 July 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  8. "An update on Google Health and Google PowerMeter". பார்க்கப்பட்ட நாள் 24 June 2011.
  9. "FDA Announces Collaboration with Drugs.com". Food and Drug Administration. 26 May 2010. பார்க்கப்பட்ட நாள் 2 July 2010.
  10. "Quantcast top sites for United States". Archived from the original on 2018-11-07. பார்க்கப்பட்ட நாள் January 31st, 2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=திரக்ஃசு.காம்&oldid=3577487" இலிருந்து மீள்விக்கப்பட்டது