மென்செதில் மலைச் சாரைப் பாம்பு
மென்செதில் மலைச் சாரைப் பாம்பு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | கோலுபிரிடே
|
பேரினம்: | |
இனம்: | தை. லூசோனென்சிசு
|
இருசொற் பெயரீடு | |
தையாசு லூசோனென்சிசு (குந்தர், 1873) | |
வேறு பெயர்கள் | |
சாசைசூ லூசோனென்சிசு குந்தர், 1873[2] |
மென்செதில் மலைச் சாரைப் பாம்பு (smooth-scaled mountain rat snake) என்று அழைக்கப்படும் தையாசு லூசோனென்சிசு (Ptyas luzonensis), கொலுப்ரிடே குடும்பத்தைச் சேர்ந்த சாரைப்பாம்பு சிற்றினமாகும்.[3] இந்தப் பாம்பு மலைப்பாங்கான பகுதியில் வாழ்கிறது. ஆனால் இவை வேட்டையாடவும் தண்ணீர் குடிக்கவும் நீரோடைகளுக்கும் ஆறுகளுக்கும் செல்கின்றன. இவற்றின் விருப்பமான அல்லது பொதுவான இரையாகத் தவளைகள் உள்ளன. ஆனால் இவை கொறித்துண்ணிகள், வெளவால்கள், பல்லிகளையும் உண்ணுகின்றன. இந்த வகைப் பாம்பு 6 முதல் 8 அடி நீளம் வரை வளரக்கூடியது.
சொற்பிறப்பியல்
தொகுலூசோனென்சிசு என்ற குறிப்பிட்ட பெயர், இதன் கண்டுபிடிப்பு இடமான லூசோனைக் குறிக்கும் வகையில் வழங்கப்பட்டது.
புவியியல் வரம்பு
தொகுதையாசு லூசோனென்சிசு பிலிப்பீன்சு தீவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி ஆகும். அங்கு இது நீக்ரோசு, லூசோன், பனாய், பொலில்லோ தீவுகளில் காணப்படுகிறது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Brown, R., Gonzalez, J.C. & Gaulke, M. 2009. Ptyas luzonensis. The IUCN Red List of Threatened Species 2017: e.T96251357A96251360. https://dx.doi.org/10.2305/IUCN.UK.2009-2.RLTS.T169846A6681627.en. Downloaded on 9 June 2020.
- ↑ Boulenger, G.A. 1893. Catalogue of the snakes in the British Museum (Nat. Hist.) I. London (Taylor & Francis), 448 pp
- ↑ 3.0 3.1 Ptyas luzonensis at the Reptarium.cz Reptile Database. Accessed 9 June 2020.
மேலும் வாசிக்க
தொகு- Günther, 1873 : Notes on some reptiles and batrachians obtained by Dr. Adolf Bernhard Meyer in Celebes and the Philippine Islands. Proceedings of the Zoological Society of London, vol. 1873, p.165-17 (Full text).