மென் டென்னிசு
மென் டென்னிசு (Soft tennis) வழமையான டென்னிசு போலவே ஓர் வலைத்தடுப்பால் இரண்டாக பிரிக்கப்பட்ட ஆடுகளத்தில் கைமட்டைகளைக் கொண்டு ஆடப்படும் விளையாட்டாகும். இதிலும் ஒற்றையராகவோ இரட்டையராகவோ ஆட இயலும். இதில் விளையாடப்படும் பந்து டென்னிசின் கடின மஞ்சள் பந்துகளைப் போலன்றி மென்மையான மீள்மத்தினால் ஆனவை.[1] இந்த விளையாட்டின் நோக்கம் வலைக்கு மேலாக அடுத்த பாதி ஆடுகளத்தின் எல்லைகளுக்குள்ளும் எதிராளியை திரும்ப அடிக்க விடாதவாறும் பந்தை அடிப்பதாகும். இந்த விளையாட்டு முதன்மையாக ஆசிய நாடுகளில், குறிப்பாக ஜப்பான், சீனக் குடியரசு, தென் கொரியா, தாய்லாந்து, பிலிப்பீன்சில் ஆடப்படுகிறது. 2004இல் மென் டென்னிசு ஐரோப்பாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது. பெல்ஜியம், நெதர்லாந்து, போலந்து, அங்கேரி, செக் குடியரசு, ஐக்கிய இராச்சியம், மற்றும் இந்தியாவில் இந்த விளையாட்டிற்கான சங்கங்கள் உருவாகியுள்ளன.இவை அனைத்தும் ஐரோப்பிய மென் டென்னிசு கூட்டமைப்பு மற்றும் பன்னாட்டு மென் டென்னிசு கூட்டமைப்புக்களில் உறுப்பினராக உள்ளன.
வரலாறு
தொகுபத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் சப்பானில் மேற்கத்திய பாதிரிகளால் டென்னிசு அறிமுகப்படுத்தப்பட்டது. தரமான டென்னிசுப் பந்துகளின் இறக்குமதி மிகுந்த செலவானதாலும் உள்ளூரில் தயாரிக்க இயலாமையாலும் தங்களுக்கேற்ற வகையில் கைமட்டையையும் பந்தையும் வடிவமைத்துக் கொண்டு சப்பானியர்கள் ஆடத் தொடங்கினர். இது soft tennis (ソフトテニス sofutotenisu?) என அழைக்கப்பட்டது.
மென் டென்னிசு ஆடுகளத்தின் அளவைகள்
தொகுகோட்டின் பெயர் | கோட்டின் நீளம் |
---|---|
ஒற்றையருக்கான அடித்தளக் கோடு | 8.23 மீ |
இரட்டையருக்கான அடித்தளக் கோடு | 10.97 மீ |
ஒற்றையருக்கான பக்கவாட்டுக் கோடு | 23.77 மீ |
இரட்டையருக்கான பக்கவாட்டுக் கோடு | 23.77 மீ |
துவக்க அடிக் கோடு | 6.40 மீ |
துவக்க அடிக்கான பக்கவாட்டுக் கோடு | 12.80 மீ |
நடுவண் துவக்க அடிக் கோடு | 12.80 மீ |
நடுவண் குறி | 0.15 மீ |
வலைத்தடுப்பு | 12.65 மீ |