மெய்நிகர் விசைப்பலகை


மெய்நிகர் விசைப்பலகை என்பது பயனர் வரியுருக்களை உள்ளீடாகச் செலுத்த அனுமதிக்கும் ஒரு மென்பொருள் அல்லது வன்பொருள் ஆகும். மெய்நிகர் விசைப்பலகை பல்வேறு உள்ளீட்டு சாதனங்கள் மூலம் இயக்கப்படுகிறது, குறிப்பாக உண்மையான விசைப்பலகை, கணினிச் சுட்டி, தலைச் சுட்டி மற்றும் கண் சுட்டி ஆகியவற்றை உள்ளடக்கியது.

பருநிலை விசைப்பலகையை இயக்க இயலாத, உடலில் குறைபாடுகள் கொண்ட பயனர்கள் மேசைக் கணினிகளில் உள்ளீடு செய்வதற்காக கண்டுபிடிக்கபட்ட மாற்றுவழி உள்ளீட்டு இயங்கமைப்பாகும். வேறுபட்ட வரியுரு வகைகள் அல்லது எழுத்துக்களுக்கு இடையே தொடர்ச்சியாக மாற வேண்டிய இரண்டு அல்லது பலமொழி பேசும் பயனர்களுக்காக பயன்படுத்தப்படுவது இந்த திரை விசைப்பலகைகளின் மற்றொரு முக்கிய பயன்பாடாகும். வன்பொருள் விசைப்பலகைகள் இருமுக திட்ட அமைப்புகளுடன் இருக்கும் போதிலும் (எடுத்துக்காட்டு பல்வேறு நாட்டின் திட்ட அமைப்புகளிலுள்ள சிரிலிக்/இலத்தீன் எழுத்துகள்), பல்வேறு கணினி அமைப்புகள் அல்லது மடிக்கணினிகளில் வேலை செய்யும் போது இந்த திரை விசைப்பலகைகள் மாற்றுப் பொருளாக உள்ளன மேலும் எப்போதாவது இருமுக திட்ட அமைப்புகளுடன் வருகின்றன.

விண்டோஸ் இயக்க முறைமைகளில் உள்ள தரநிலையான திரை விசைப்பலகைப் பயன்பாடுகளில் பருநிலை விசைப்பலகையிலிருந்து திட்ட அமைப்புகளை மாற்ற முடிகிறது (இதற்கு பொதுவாக alt-shift விசை பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இதை பயனர்கள் தம் விருப்பப்படியும் அமைத்துக்கொள்ளலாம்). இதன் மூலம் ஒரே நேரத்தில் விசைப்பலகையின் வன்பொருள் மற்றும் மென்பொருள் திட்ட அமைப்புகளும் மாற்றப்படுகின்றன. பயனர் தற்போது எந்த திட்ட அமைப்பில் உள்ளார் என்பதை கணினித் தட்டிலுள்ள குறியீடு காண்பிக்கும். லினக்ஸ் இயக்க முறைமையும் விசைப்பலகை-திட்ட அமைப்புகளை வேகமாக கைமுறையாக மாற்றும் முறையை ஆதரிக்கிறது, லினக்ஸ் இயக்க அமைப்பின் பிரபலமான திரை விசைப்பலகைகளான ஜிடிகீபோர்ட் (gtkeyboard), மேட்ச்பாக்ஸ்-கீபோர்ட் அல்லது கேவிகேபிடி (Matchbox-keyboard or Kvkbd) போன்றவை இந்த செயல்முறையில் சரியாக செயல்படுவதில்லை. எடுத்துக்காட்டாக, கேவிகேபிடி இந்த திட்ட அமைப்பை விசைப்பலகை முன்னுரிமைகளில் இயல்பான திட்ட அமைப்பின்படி அல்லாமல் முதலில் வரையறுக்கப்பட்ட திட்ட அமைப்பின் படி வரையறுக்கிறது. இதனால் பட்டியலில் முதலில் இருக்கும் திட்ட அமைப்பு இயல்பானதாக இல்லாவிட்டால் பயன்பாடு தவறான வரியுருக்களைக் காண்பிக்கிறது. சுருக்க விசை திட்ட அமைப்பை செயல்படுத்தினால், பயன்பாடானது மற்றொரு விசைப்பலகை திட்ட அமைப்பு முறையில் வெளியீடுகளை மாற்றிவிடும், ஆனால் திரையில் உள்ள திட்ட அமைப்பு மாறாது. இதன் காரணமாக பயனர் தான் எந்த விசைப்பலகை திட்ட அமைப்பை தற்போது பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் என்று அறியாத நிலை ஏற்படும். இந்த சிக்கல்கள் சரிசெய்யப்படாத வரையில், பல-மொழி / பல-எழுத்துக்களை பயன்படுத்தும் பயனர்களிடம் இந்த லினக்ஸ் விசைப்பலகைகள் பயனற்றதாகவே இருக்கும்.

பருநிலை விசைப்பலகைகள் இல்லாத கருவிகளில் (தனிநபர் டிஜிட்டல் உதவிப்பொருள் (personal digital assistant) அல்லது தொடுதிரை கொண்ட அலைபேசிகள் (touchscreen equipped cell phones) பயனர் உள்ளீடு அளிப்பதற்காக இந்த கருவிகளின் இயக்க அமைப்புகளுடன் தொடர்புடைய மெய்நிகர் விசைப்பலகைகள் பொருத்தப்பட்டிருக்கும். கணினி விசைப்பலகை கொண்டுள்ள பொத்தான்களை விட குறைவான பொத்தான்களைக் கொண்டுள்ள அமைப்புகளுக்காக இந்த மெய்நிகர் விசைப்பலகைகள் முன்மாதிரி மென்பொருள் என்ற முறையிலும் பயன்படுத்தப்படுகிறது.

பின்வரும் பண்புகளின் படி மெய்நிகர் விசைப்பலகைகள் வகைப்படுத்தப்படும்:

  • பருநிலை விசைப்பலகைகளுடன் மின்னணுவியல் முறையில் மாறக்கூடிய காட்சி அமைப்புகளைக் கொண்டுள்ள வேறுபட்ட பொத்தான்களைக் கொண்ட விசை அட்டைகள்.
  • தொடுதிரை விசைப்பலகை திட்ட அமைப்புகள் அல்லது உணர்தல் பகுதிகளுடன் கூடிய மெய்நிகர் விசைப்பலகைகள்
  • ஒளிவழி மூலம் உருவாக்கப்பட்ட விசைப்பலகை திட்ட அமைப்புகள் அல்லது அதே போல் அமைக்கப்பட்ட "பொத்தான்களின்" வரிசை அல்லது உணர்தல் பகுதிகள்
  • ஒளிவழி மூலம் கண்டறியப்படும் மனிதனின் கை அல்லது விரல் இயக்கங்கள்
  • கணினிச் சுட்டி, ஸ்விட்ச்சு அல்லது மற்ற உதவு தொழில்நுட்பக் கருவிகள் போன்ற பல்வேறு உள்ளீட்டு கருவிகள் மூலம் உள்ளீட்டை அளிக்க மெய்நிகர் விசைப்பலகைகள் அனுமதிக்கின்றன.

2008 ஆம் ஆண்டில் IBM நிறுவனத்தின் தொழில்நுட்ப வல்லுநர்கள் மூலம் ஒளியியல் மெய்நிகர் விசைப்பலகை உருவாக்கப்பட்டு காப்புரிமை பெறப்பட்டது. இது மனிதனின் கை மற்றும் விரல் இயக்கங்களை ஒளியியல் முறையில் கண்டறிந்து பகுப்பாய்வு செய்து ஒரு பரப்பில் வரையப்பட்ட பொத்தான்கள் போன்ற, உண்மையில் இல்லாத உள்ளீட்டு கருவியில் செயல்களாக செயல்படுத்துகிறது. சுட்டி அல்லது விசைப்பலகை போன்ற மனிதனால் அதிகமாக இயக்கப்படும் உள்ளீட்டு கருவிகளை உருவாக்க அனுமதிக்கிறது. அனைத்து இயந்திர உள்ளீட்டுக் கருவிக் கூறுகளுக்குப் பதிலாகவும் நடப்பு பயன்பாட்டுக்கும் பயனர்களின் உடற்கூறியல் பராமரிப்பு வேகத்திற்கும் எளிமைக்கும் குழப்பமற்ற தன்மைக்கும் உகந்ததாக்கப்பட்ட இதுபோன்ற மெய்நிகர் சாதனங்களைப் பயன்படுத்தலாம்.

இணையதளத்தில் குறிப்பாக இணையகங்களில் அயல்நாட்டு விசைப்பலகையில் பயனர்கள் தங்களது சொந்த மொழியில் உள்ளீடு அளிப்பதற்காக சில ஜாவாஸ்கிரிப்ட் மெய்நிகர் விசைப்பலகைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு தொடர்பான அக்கறைகள்

தொகு

விசை அமுக்கல்களைப் பதிவு செய்தல் (keystroke logging) போன்ற சில ஆபத்துகளைக் குறைப்பதற்காக மெய்நிகர் விசைப்பலகைகள் பயன்படுத்தப்படுகின்றன. எடுத்துக்காட்டாக வெஸ்ட்பாக்'ஸ் online banking service பரணிடப்பட்டது 2009-10-28 at the வந்தவழி இயந்திரம் நிறுவனம் ஒரு கடவுச்சொல்லை அளிப்பதற்காக ட்ரெசரிடைரக்ட் (TreasuryDirect) போன்ற ஒரு மெய்நிகர் விசைப்பலகையைப் பயன்படுத்துகிறது. வழக்கமான விசை அமுக்கல்களைக் கண்காணிப்பதை விடவும் இந்த மெய்நிகர் விசைப்பலகை மூலம் உள்ளீடாக கொடுக்கப்பட்ட தரவைப் பெற சுட்டி மற்றும் காட்சியை தீங்கு விளைவிக்கும் மென்பொருள்கள் (malware) கண்காணிப்பது மிகவும் கடினம். இருப்பினும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் திரைப்பிடிப்புகளைப் பதிவு செய்தல் அல்லது ஒவ்வொரு முறை சுட்டி சொடுக்கும் போதும் பதிவு செய்தல் போன்ற முறைகளின் மூலம் இது சாத்தியம்.

ஏதேனும் வகையில் பயன்பட வேண்டுமானால் இந்த மெய்நிகர் விசைப்பலகைகள் பயன்பாடு அல்லது வலைப் பக்கத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். இந்த குறிப்பிட்ட செய்நிரலுக்காக வடிவமைக்கப்பட்டதல்லாத மெய்நிகர் விசைப்பலகைகள் உட்பட அனைத்து நிரல்களிலும் வேலை செய்யும் வண்ணம் உருவாக்கப்பட்ட பொதுப்படையான மெய்நிகர் விசைப்பலகையால் சாதாரண விசைப்பலகைகளில் ஏற்படும் விசை அமுக்கல்களைப் போன்ற அதே அமுக்கல்களையே இந்த மெய்நிகர் விசைப்பலகைகளும் உருவாக்கும் என்பதால் அவற்றால் இவ்வகையான அமுக்கப் பதிவு நிரலைத் தோற்கடிக்க முடியாது. அதனால் சாதாரண விசைப்பலகை உள்ளீடுகளைக் கண்டறிவது போல் இவற்றையும் கண்டறிய முடியும்.[1][2]

திரை விசைப்பலகைகள் மூலம் பயனர் பயன்படுத்தும் சுட்டிச் சொடுக்குகள் கடவுச்சொல்லை ஆதார உலாவுதல் மூலம் வெளிப்படையாக அறிவிக்கும், ஏனென்றால்:

  • விசைப்பலகையைப் பார்ப்பதை விட எளிதாக (மற்றும் சந்தேகமற்ற வகையில்) பார்வையாளர் திரையைக் காண இயலும், மற்றும் சுட்டி எந்த வரியுருக்கு நகர்கிறது என்பதையும் பார்வையாளர் எளிதாகக் காண இயலும்.
  • திரை விசைப்பலகைகளின் சில வகைகள் எந்த பொத்தான் சொடுக்கப்பட்டதோ அதற்கான பின்னூட்டத்தைக் கொடுக்கலாம், எ.கா. பொத்தான்களின் நிறத்தை லேசாக மாற்றிக் காட்டுதல். இதனால் பார்வையாளர் திரையிலிருக்கும் தரவுகளை அறிந்து கொள்ளக்கூடும். இந்த வகைகள் அடுத்த பொத்தான் சொடுக்கும் வரை சமீபத்தில் அதற்கு முன்பு சொடுக்கிய "பொத்தானில்" கவன மையத்தை வைத்திருக்கலாம். இதனால் சுட்டி அடுத்த வரியுருவிற்கு பார்வையாளரால் ஒவ்வொரு வரியுருவையும் எளிதாக வாசிக்க முடிகிறது.
  • ஒரு பயனர் விசைப்பலகையில் தட்டச்சு செய்யும் அளவு வேகத்தில் "சுட்டி சொடுக்க" முடியாது. இதனால் பார்ப்பவருக்கு தரவைப் பெறும் செயல் எளிதாகிறது.

குறிப்புகள்

தொகு
  1. http://cnt.lakefolks.com/keylogger-no.htm பரணிடப்பட்டது 2011-08-13 at the வந்தவழி இயந்திரம் from the Click-N-Type Virtual Keyboard
  2. Smith, David A. (2006-06-21), Outsmarting Keyloggers, PC Magazine, பார்க்கப்பட்ட நாள் 2009-11-16

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெய்நிகர்_விசைப்பலகை&oldid=3635827" இலிருந்து மீள்விக்கப்பட்டது