மெர்சர் கவுன்ட்டி, நியூ செர்சி
மெர்சர் கவுன்ட்டி (Mercer County) ஐக்கிய அமெரிக்க மாநிலமான நியூ செர்சியிலுள்ள கவுன்ட்டி அல்லது மாவட்டம் ஆகும். மாநிலத் தலைநகரமான இட்ரென்டனே இதற்கும் தலைநகரம் ஆகும்.[2][3] இந்த கவுன்ட்டி இட்ரென்டன் பெருநகரப் புள்ளியியல் நிலப்பரப்பில் அமைந்துள்ளது.[4] தவிரவும் ஐக்கிய அமெரிக்க கணக்கெடுப்புத் துறையின் நியூயார்க் பெருநகரப் பகுதியிலும் அடங்குகின்றது.[5] பிலடெல்பியா பெருநகரப் பகுதியின் எல்லையில் உள்ளது; கூட்டரசு தொலைத்தொடர்பு ஆணையத்தின் பிலடெல்பியா வரையறுத்த சந்தைப் பகுதியின் அங்கமாகவும் உள்ளது.[6] 2015இல் மெர்சர் மாவட்ட மக்கள்தொகை 371,398 ஆகும்; இது 2010 கணக்கெடுப்பின் தொகையைவிட 1.3% கூடுதலாகும். மாநிலத்தில் மிகக்கூடிய மக்கள்தொகை கொண்ட மாவட்டங்களில் 12வதாக உள்ளது.[7] ஐக்கிய அமெரிக்காவில் மிகவும் கூடுதலான வருமானம் உள்ள மாவட்டங்களில் ஒன்றாக மெர்சர் மாவட்டம் விளங்குகின்றது; நாட்டிலுள்ள 3,113 மாவட்டங்களில் 78ஆம் இடத்திலும் மாநிலத்தில் ஆறாம் நிலையிலும் உள்ளது.[8] இந்த மாவட்டம் 1838ஆம் ஆண்டு பெப்ரவரி 22 அன்று நியூ செர்சி சட்டப்பேரவையின் சட்டத்தால் உருவானது.
மெர்சர் மாவட்டம், நியூ செர்சி | |
---|---|
2006இல் தங்க மாடத்துடன் கூடிய நியூ செர்சி மாநில சட்டப்பேரவை மாளிகை, இட்ரென்டன். | |
Nickname(s): தலைநகர மாவட்டம்[1] | |
நியூ செர்சி மாகாணத்தின் அமைவிடம் | |
ஐக்கிய அமெரிக்காவில் நியூ செர்சி மாகாணத்தின் அமைவிடம் | |
உருவாக்கப்பட்ட நாள் | 1838 |
named for | அமெரிக்க விடுதலைப் படை தளபதி இயூ மெர்சர் |
இருக்கை | இட்ரென்டன்[2] |
பெரிய நகரம் | ஆமில்டன் நகரியம் (மக்கள்தொகையால்) ஓப்வெல் நகரியம் (பரப்பளவில்) |
பரப்பளவு | |
• மொத்தம் | 228.89 sq mi (593 km2) |
• நிலப்பரப்பு | 224.56 sq mi (582 km2) |
• நீர்ப்பரப்பு | 4.33 sq mi (11 km2), 1.89% |
மக்கள் தொகை | |
• (2010) | 3,66,513 3,71,398 (2015 est.) |
• அடர்த்தி | 1,623/sq mi (626.5/km²) |
காங்கிரஸின் மாவட்டங்கள்s | 4வது, 12வது |
இணையத்தளம் | www |
மெர்சர் மாவட்டத்தில் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம், பிரின்சுடன் இறையியல் குருத்துவக் கல்லூரி, இரைடர் பல்கலைக்கழகம், நியூ செர்சி கல்லூரி, தாமசு எடிசன் மாநிலக் கல்லூரி, மெர்சர் கவுன்ட்டி கம்யூனிட்டிக் கல்லூரி ஆகியன அமைந்துள்ளன.[9]
மேற்சான்றுகள்
தொகு- ↑ "Mercer County "The Capital County"". County of Mercer, New Jersey. Archived from the original on மார்ச் 24, 2016. பார்க்கப்பட்ட நாள் March 25, 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ 2.0 2.1 Mercer County, NJ பரணிடப்பட்டது 2013-04-16 at Archive.today, National Association of Counties. Accessed January 20, 2013.
- ↑ "Find a County". National Association of Counties. பார்க்கப்பட்ட நாள் 2011-06-07.
- ↑ May 2012 Metropolitan and Nonmetropolitan Area Definitions, Bureau of Labor Statistics. Accessed October 5, 2013.
- ↑ Revised Delineations of Metropolitan Statistical Areas, Micropolitan Statistical Areas, and Combined Statistical Areas, and Guidance on Uses of the Delineations of These Areas பரணிடப்பட்டது 2013-03-19 at the வந்தவழி இயந்திரம், Office of Management and Budget, February 28, 2013. Accessed October 3, 2013.
- ↑ - Philadelphia Market Area Coverage Maps, Federal Communications Commission. Accessed December 28, 2014.
- ↑ NJ Labor Market Views பரணிடப்பட்டது 2013-09-20 at the வந்தவழி இயந்திரம், New Jersey Department of Labor and Workforce Development, March 15, 2011. Accessed October 6, 2013.
- ↑ 250 Highest Per Capita Personal Incomes of the 3113 Counties in the United States, 2009 பரணிடப்பட்டது 2011-07-22 at the வந்தவழி இயந்திரம், Bureau of Economic Analysis. Accessed April 9, 2012.
- ↑ About Mercer County, Mercer County. Accessed January 11, 2015.