மெல்வில் தீவு, ஆஸ்திரேலியா

(மெல்வில் தீவு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மெல்வில் தீவு (Melville Island) ஆஸ்திரேலியாவின் வட மண்டலத்தில் கிழக்குத் திமோர் கடலில் அமைந்துள்ளது.

மெல்வில் தீவு
Melville Island
உள்ளூர் பெயர்: யெர்மால்னர்
Australia Melville Island.png
டிவி தீவுகள்
புவியியல்
அமைவிடம்திமோர் கடல்
ஆள்கூறுகள்11°33′S 130°56′E / 11.550°S 130.933°E / -11.550; 130.933
தீவுக்கூட்டம்டிவி தீவுகள்
முக்கிய தீவுகள்மெல்வில், இரிட்டிட்டு
நிர்வாகம்
ஆஸ்திரேலியா
ஆட்சிப்பகுதி வட ஆட்புலம்
பெரிய குடியிருப்புமிலிகபிட்டி (மக். 559)
மக்கள்
மக்கள்தொகைca. 1030
இனக்குழுக்கள்டிவி மக்கள்

இத்தீவின் பெரிய நகரம் மிலிகபிட்டி, இதன் மக்கள் தொகை 559 பேர். இரண்டாவது பெரிய நகரம் பிலான்கிம்பி, இங்கு 440 பேர் வசிக்கிறார்கள். இவர்களை கிட்டத்தட்ட 30 பேர் வெவ்வேறு இடங்களில் வசிக்கிறார்கள்.

மெல்வில் தீவு டாஸ்மானியாவுக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய தீவாகும். இதன் பரப்பு 2,234 மைல்² (5,786 கிமீ²). டிவி மொழியில் இது யெர்மால்னர் என அழைக்கப்படுகிறது. இத்தீவின் தென் முனையில் 55 மீட்டர்கள் தொலைவில் இரிட்டிட்டு தீவு உள்ளது. இதன் பரப்பளவு 1.7 கிமீ².

மெல்வில் தீவும், பாத்தர்ஸ்ட் தீவும் இணைந்து டிவி தீவுகள் என அழைக்கப்படுகின்றது.

1644 ஆம் ஆண்டு இத்தீவைக் கண்டுபிடித்த ஐரோப்பியர் ஏபெல் டாஸ்மான் எனக் கருதப்படுகிறது.

இதன் காலநிலை வெப்பவலயத்தைச் சேர்ந்தது.

வெளி இணைப்புகள்தொகு