மேக்ரோபிராக்கியம் கிராண்டிமேனசு

மேக்ரோபிராக்கியம் கிராண்டிமேனசு
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
துணைத்தொகுதி:
கிறசுடேடியா
வகுப்பு:
மலக்கோஸ்டிரக்கா
வரிசை:
உள்வரிசை:
கரிடியா
குடும்பம்:
பேரினம்:
இனம்:
மே கிராண்டிமேனசு
இருசொற் பெயரீடு
மேக்ரோபிராக்கியம் கிராண்டிமேனசு
ரண்டால், 1840

மேக்ரோபிராக்கியம் கிராண்டிமேனசு (Macrobrachium grandimanus), அல்லது ஹவாய்யான் நதி இறால் அல்லது 'opae'oeaha'a என்று ஹவாய் மொழியில் அழைக்கப்படுவது நன்னீர் இறால் சிற்றினமாகும். இதனுடைய இளம் உயிரிகள் உப்புநீருக்கும் பின்னர் நன்னீருக்கும் வலசைப்போகும் ஆம்பிட்ரோமசு வாழ்க்கைச் சுழற்சியைக் கொண்டுள்ளது. இந்த இறால் ஹவாய் தீவுகளில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரியாகும்.

விளக்கம்

தொகு

ஹவாய் நதி இறால் வெளிர் அல்லது அடர் பழுப்பு வண்ணத்தில் காணப்படும். இதன் உடல் நீளம் 8 சென்டிமீட்டர் வரை வளரும். ஹவாயில் உள்ள மற்ற இறால்களைப் போலல்லாமல் இது சமச்சீரற்ற இரண்டாவது மார்பு கால்களைக் கொண்டுள்ளது.[2] இவை விலங்குகள் மற்றும் தாவரப் பொருட்களுக்காக மெதுவாகப் பாயும் நீரோடைகளின் அடிப்பகுதியில் உணவினைத் தேடுகின்றன. இவை ஆண்டு முழுவதும் இனப்பெருக்கம் செய்யும் தன்மையுடையன. அடைகாக்கும் காலம் தோராயமாக மூன்று முதல் நான்கு வாரங்கள் நீடிக்கும். குஞ்சு பொரித்த பிறகு, இளம் உயிரிகள் கடல் பகுதிக்கு ஆற்று நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்படுகின்றன. அங்கு இவை முதிர்ச்சியடைந்து மீண்டும் நீரோடைகளுக்குத் திரும்புகின்றன. இதற்கு ஒரு மாதம் காலம் வரை ஆகும்.

வாழிடமும் பரவலும்

தொகு

ஹவாய் தீவின் அனைத்து நீரோடைகளிலும் இவை காணப்படுகின்றது. தற்போது உயர்தர நீரோடைகளான காவுய், ஓகு, மோலோகாஐ, மாயு மற்றும் ஹவயிலும் ஈரநிலங்கள், சிறிய குளங்கள் மற்றும் மூடப்பட்ட நீர்நிலைகளிலும் காணப்படும்.[3]

பயன்பாடு

தொகு

ஹவாய் நதி இறால் உணவுக்காகப் பிடிக்கப்படுவதில்லை. மேலும் வேறு எந்த வணிக ரீதியானப் பயன்பாட்டினையும் கொண்டிருக்கவில்லை.

மேற்கோள்கள்

தொகு
  1. De Grave, S.; Cai, Y.; Wowor, D. (2013). "Macrobrachium grandimanus". IUCN Red List of Threatened Species 2013: e.T197590A147784025. doi:10.2305/IUCN.UK.2013-1.RLTS.T197590A147784025.en. https://www.iucnredlist.org/species/197590/147784025. பார்த்த நாள்: 19 November 2021. 
  2. Wortham, Jennifer L.; Van Maurik, Lauren N. (2012-01-01). "Morphology and morphotypes of the Hawaiian river shrimp, Macrobrachium grandimanus". Journal of Crustacean Biology. 32 (4): 545–556. doi:10.1163/193724012x637311. ISSN 0278-0372.
  3. Yamamoto M, Tagawa A. 2000. Hawaii’s native and exotic freshwater animals. Honolulu, HI: Mutual Publishing. 200 pp.

மேலும் காண்க

தொகு
  • De Grave, S., Cai, Y. & Wowor, D. 2013. Macrobrachium grandimanus (errata version published in 2019). The IUCN Red List of Threatened Species 2013: e.T197590A147784025. https://dx.doi.org/10.2305/IUCN.UK.2013-1.RLTS.T197590A147784025.en.
  • ffish.asia. (2015, September). Macrobrachium grandimanus [Photograph]. https://ffish.asia/?page=file&pid=56425&lang=e
  • dlnr.hawaii.gov. (2005, October). Freshwater Invertebrates. https://dlnr.hawaii.gov/wildlife/files/2019/03/SWAP-2015-Hawaiian-prawn-Final.pdf