மேக்ரோமியா இராடா
மைக்ரோசாலசு இராடா | |
---|---|
ஆண் | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | ஓடோனேட்டா
|
குடும்பம்: | மேக்ரோமிடே
|
பேரினம்: | மேக்ரோமியா
|
இனம்: | மே. இராடா
|
இருசொற் பெயரீடு | |
மேக்ரோமியா இராடா பிரேசர், 2014 |
மேக்ரோமியா இராடா (Macromia irata) என்பது மேக்ரோமிடே குடும்பத்தில் உள்ள தட்டாரப்பூச்சி சிற்றினமாகும்.[2] இது இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி ஆகும்.[3]
விளக்கம்
தொகுமே. இராடா மரகத-பச்சை நிற கண்கள் கொண்ட நடுத்தர அளவிலான தட்டாரப்பூச்சி ஆகும். இதன் மார்பு முதுகு அடர் பச்சை உலோக நிறத்திலும், பக்கவாட்டுப் பகுதி அடர் சிவப்பு-பழுப்பு நிறமாகவும், எலுமிச்சை-மஞ்சளால் குறிகளுடன் காணப்படும். கருப்பு வயிற்றுப்பகுதியானது எலுமிச்சை மஞ்சளால் குறிகளுடன் காணப்படும். உடலின் இரண்டாவது கண்டத்தின் மையத்தில் ஓரீணை வைர வடிவ புள்ளிகள் முத்துக்குப்பகுதியில் கண்டத்தினை இரண்டாகப் பிரித்துக் காட்டுகின்றன. இந்தப் பிரிவின் வயிற்றுப் பகுதி ஓரங்கள் அடிவாரத்தில் பரந்த மஞ்சள் நிறத்திலிருக்கும். மூன்றாவது கண்டத்தில் ஓரீணை முக்கோணப் புள்ளிகள் முதுகுபுற மையத்தில் காணப்படும். கண்டங்கள் 4 முதல் 6 வரை, ஓரிணை புள்ளிகள் நடு முதுகில் உள்ளன. ஏழாவது கண்டத்தின் அடித்தளத்தில் மூன்றில் ஒரு பங்கிலிருந்து பாதி வரை மஞ்சள் நிறத்திலானது. கண்டம் 8 குறுகிய அடித்தள வளையத்தைக் கொண்டுள்ளது. கண்டங்கள் 9 மற்றும் 10-இல் எவ்வித குறியீடுகளும் இல்லை. குத இணைப்புகள் கருப்பு நிறத்திலானது.[4]
வாழிடம்
தொகுஇது பொதுவாக நீரோடைகளுக்கு அருகில் வனச் சாலைகளில் காணப்படும். இது மற்ற மேக்ரோமியா சிற்றினங்களிலிருந்து கண்டம் இரண்டில் காணப்படும் இரட்டை வைர வடிவ சேணம் மூலம் வேறுபடுகிறது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 C FC Lt. Fraser (1924). A Survey of the Odonate (Dragonfly) Fauna of Western India and Descriptions of Thirty New Species (PDF). pp. 454–455.
- ↑ Paulson, D.; Schorr, M.; Abbott, J.; Bota-Sierra, C.; Deliry, C.; Dijkstra, K.-D.; Lozano, F. (2023). "World Odonata List". OdonataCentral, University of Alabama. Retrieved 14 March 2023
- ↑ K.A., Subramanian; K.G., Emiliyamma; R., Babu; C., Radhakrishnan; S.S., Talmale (2018). Atlas of Odonata (Insecta) of the Western Ghats, India. Zoological Survey of India. p. 296. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788181714954.
- ↑ C FC Lt. Fraser (1936). The Fauna of British India, including Ceylon and Burma, Odonata Vol. III. Red Lion Court, Fleet Street, London: Taylor and Francis. pp. 190-191.