மேடம் கோயி கோயி

நைஜீரியா மற்றும் ஆப்பிரிக்க நகர்ப்புற புராணங்களில் தோன்றும் ஒரு பேய்

மேடம் கோய் கோய் ( Madam Koi Koi ) ( லேடி கோய் கோய், மிஸ் கோய் கோய், கானாவில் மேடம் ஹை ஹீல் அல்லது மேடம் மோக்' மற்றும் தன்சானியாவில் மிஸ் கொன்கோகோ என்றும் அழைக்கப்படுகிறது) என்பது நைஜீரியா மற்றும் ஆப்பிரிக்க நகர்ப்புற புராணங்களில் தோன்றும் ஒரு பேய். இது, இரவு நேரங்களில் உறைவிடப் பள்ளிகளில் தங்கும் அறைகள், நடைபாதைகள் மற்றும் கழிப்பறைகளை வேட்டையாடும். பகல் பள்ளிகளில் இவள் கழிப்பறைகளையும், பள்ளிக்கு சீக்கிரம் வரும் அல்லது பள்ளியைவிட்டு தாமதமாகச் செல்லும் மாணவர்களையும் வேட்டையாடுகிறாள். இவள் பெரும்பாலும் சிவப்பு குதிகால் செருப்பு அணிந்தவளாகவோ அல்லது ஒற்றை குதிகால் செருப்பு அணிந்தவளாகவோ சித்தரிக்கப்படுகிறாள். நைஜீரியா, கானா மற்றும் தென்னாப்பிரிக்காவில் மிகவும் பிரபலமான உறைவிடப் பள்ளி பேய்களில் இவளும் ஒருத்தி. [1] [2]

சொற்பிறப்பியல் தொகு

"மேடம் கோய் கோய்" என்ற பெயர், அவள் இரவு நேரங்களில் மாணவர்களை வேட்டையாட வரும்போதெல்லாம் அவளது குதிகால் எழுப்பும் ஒலியிலிருந்து எடுக்கப்பட்டது. [3] [4] கானாவில் "மேடம் மோக்" என்ற பெயர் உயரமான குதிகால் செருப்பு என்ற கானா மொழியில் இருந்து எடுக்கப்பட்டது.

தோற்றம் தொகு

மேடம் கோயி கோயின் தோற்றத்தைக் கூறும் பல கதைகள் உள்ளன. [5]

நைஜீரியா தொகு

நைஜீரியாவில், இவள் தனது அழகு மற்றும் சிவப்பு குதிகால்களுக்கு பெயர் பெற்ற பள்ளியில் பணிபுரிந்த ஒரு ஆசிரியராக சித்தரிக்கப்படுகிறாள். இவள் பள்ளியின் நடைபாதையில் நடக்கும் போதெல்லாம், இவளுடைய காலணிகள் "கோய் கோய்" என்று ஒலி எழுப்பும். அதிலிருந்து "மேடம் கோய் கோய்" என்ற பெயர் வந்தது. மாணவிகளிடம் மிகவும் கேவலமாக நடந்து கொள்வதாகவும், காரணமின்றி அடிப்பதாகவும் கூறப்படுகிறது. மாணவி ஒருவரை அறைந்து காதில் காயம் ஏற்பட்டதால் இவர் பணி நீக்கம் செய்யப்பட்டதாகவும், வீடு திரும்பும் வழியில் விபத்தில் சிக்கி இறந்ததாகவும் கூறப்படுகிறாது. இவள் இறப்பதற்கு முன் பள்ளி மற்றும் அதன் மாணவர்களை பழிவாங்குவேன் என்று சத்தியம் செய்கிறாள்.

மற்றொரு கதையில், இவள் மிகவும் பொல்லாத ஆசிரியை என்றும், தனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தன் மாணவர்களை மிகவும் கொடூரமாக தண்டிப்பாள் என்றும் கூறப்படுகிறாது. சிலர் இவள் பிறரது துன்பத்தில் இன்பம் காண்பவள் என்றும், தான் விரும்பும் போதெல்லாம் கடுமையான வலியையும் சித்திரவதையையும் ஏற்படுத்துவாள் என்றும் கூறப்படுகிறது. பள்ளி நிர்வாகம் இவளை கண்டிக்காததால் சோர்வடைந்த இவளது மாணவர்கள், ஒரு நாள் இரவு, இவள் பள்ளியை விட்டு வெளியேறும் போது, இவளை அடித்து, அவளைக் கொன்று விடுகின்றனர். பின்னர், அவர்கள் பள்ளியின் பின்புற வேலியின் மீது இவளது உடலை எறிந்துவிட்டு ஓடிவிடுகின்றனர்.

பின்னர், படிப்படியாக, இவளை காலணியால் அடித்த மாணவனைத் தவிர ஒவ்வொரு மாணவரும் காணாமல் போகிறார்கள். கடைசியாக அந்த மாணவனும் அடித்துக் கொல்லப்படுகிறான்.

இதனால் பள்ளி மூடப்படுகிறது. அனைத்து குழந்தைகளும் புதிய பள்ளிகளுக்கு மாற்றப்படுகின்றனர். இந்த குழந்தைகள் பின்னர் இவள் இரவு நேரங்களில் விடுதிகளின் அரங்குகளில் மாணவர்களை துன்புறுத்தி, தன்னைப் பார்ப்பவர்கள் அனைவரையும் காணாமல் போகச் செய்கிறாள் என தங்கள் புதிய பள்ளிகளில் இந்தக் கதையை கூறுகின்றனர்.[6] [7]

மற்ற நாடுகளில் தொகு

கானா, கமரூன், தென்னாப்பிரிக்கா மற்றும் பிற ஆபிரிக்க நாடுகளில் மேடம் கோய் கோயியைப் போன்ற ஒத்த எழுத்துக்களைக் காணலாம்.

செயல்பாடுகள் தொகு

மேடம் கோய் கோய், முக்கியமாக பள்ளிக் கதவுகளைத் திறப்பது, பாடுவது, விசில் அடிப்பது, கழிவறைகள் அல்லது குளியலறையில் உள்ளவர்களைத் தாக்குவது அல்லது மாணவர்களை அறைவது போன்ற செயல்களுடன் பள்ளி வளாகத்தை வேட்டையாடுவதற்குப் பெயர் பெற்றவள். இவளுடைய இருப்பு எப்போதும் இவளது காலடிச் சுவடுகளுடன் இருக்கும். இவள் குதிகால் செருப்புடன் இருப்பது தவிர கண்ணுக்கு தெரியாதவளாகவும் இருக்கலாம். சில கதைகளில், காணாமல் போன தனது குதிகால் செருப்பைத் தேடி இவள் அடிக்கடி இரவு நேரங்களில் மாணவர்களை தொந்தரவு செய்கிறாள்.

ஊடகங்களில் தொகு

சிமிசாயோ பிரவுன்ஸ்டோனின் குழந்தைகள் புத்தகமான ஃபேயி ஃபே மற்றும் தி கேஸ் ஆஃப் தி மிஸ்டீரியஸ் மேடம் கோய் கோய் ஆகியவற்றில் மேடம் கோயி கோய் எதிரியாகச் சித்தரிக்கப்படுகிறாள். [8]

நெட்பிளிக்சில் ஒளிப்பரப்பான தி ஆரிஜின்: மேடம் கோய்-கோய் என்ற திகில் தொடர் இவளது கதையை அடிப்படையாகக் கொண்டது. [5]

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "The legend of the dead teacher who haunts secondary school students". 2016-10-17. பார்க்கப்பட்ட நாள் 2021-09-29.
  2. "Lady Koi-Koi & Other Crazy Secondary School Stories – StyleVitae". பார்க்கப்பட்ட நாள் 2021-09-29.
  3. "Popular Nigerian Urban Legends (Madam koi koi, Bush baby, Mami Water…)" (in ஆங்கிலம்). 2020-06-02. பார்க்கப்பட்ட நாள் 2021-09-29.
  4. "Scary Nigerian Urban Legends- Madam Koi Koi" (in ஆங்கிலம்). 2017-10-26. பார்க்கப்பட்ட நாள் 2021-09-29.
  5. 5.0 5.1 "The Origin: Madam Koi Koi, Nollywood's first Netflix Horror Series" (in ஆங்கிலம்). 2023-01-11. பார்க்கப்பட்ட நாள் 2023-01-11.
  6. . 2016-10-17. {{cite web}}: Missing or empty |title= (help); Missing or empty |url= (help)
  7. . 2018-03-15. {{cite web}}: Missing or empty |title= (help); Missing or empty |url= (help)
  8. "Feyi Fay and the case of the mysterious Madam Koi Koi".
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேடம்_கோயி_கோயி&oldid=3881966" இலிருந்து மீள்விக்கப்பட்டது