மேடை ஒளியமைப்பு
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
மேடை ஒளியமைப்பு என்பது. மேடையில் நடைபெறக்கூடிய நாடகம், நடனம் போன்ற நிகழ்த்து கலைகளின் தேவைக்காக அமைக்கப்படும் ஒளியமைப்பைக் குறிக்கும். இதற்காகப் பலவகையான செயற்கை ஒளிமுதல்களும், கருவிகளும் புழக்கத்தில் உள்ளன. ஒளியமைப்புத் திட்டமொன்றின் கொள்கை அல்லது நோக்கங்களை அடைவதற்காக ஒளியியலாளர்கள் இவற்றைப் பயன்படுத்தி வடிவமைப்புச் செய்கிறார்கள்.
ஒளியமைப்பின் குறிக்கோள்கள்
தொகுமேடை ஒளியமைப்பில் பல பொதுவான குறிக்கோள்கள் உள்ளன. அழகியல் ஒரு முக்கிய நோக்கமாக இருப்பினும் அதனை அடைவதற்கு இது தான் வழி என்ற நிலை கிடையாது. மேடை ஒளியமைப்பின் சில குறிக்கோள்களாவன:
- ஒளியூட்டல் (Illumination)
- வடிவ வெளிப்பாடு (Revelation of form)
- குவிய உருவாக்கம் (Focus)
- சூழ்நிலை உருவாக்கம் (Mood)
- அமைவிடம் மற்றும் நேரச்சூழல் உருவாக்கம்
- காட்சி வீழ்ப்பு (Projection)
- நிகழ்ச்சித் திட்டங்களுக்கு வலுச் சேர்த்தல் (Plot)
- பகுதி ஒளியூட்டல் (Selective visibility)
ஒளியமைப்பின் பண்புகள்
தொகுமேற்படி குறிக்கோள்களை அடைவதில் நான்கு பண்புகள் முக்கியமானவை.
- ஒளிச்செறிவு
- நிறம்
- வடிவுரு (Pattern)
- திசை/இடம்