மேட் சிட்டி (1997 திரைப்படம்)

மேட் சிட்டி 1997ம் ஆண்டு வெளியான திரைப்படம்.

மேட் சிட்டி
தியேட்டர்களில் வெளியீட்டு சுவரொட்டி
இயக்கம்கோஸ்டா கவ்ரஸ்
தயாரிப்புஅர்னால்ட் கோபெல்சன்
ஆன் கோபெல்சன்
திரைக்கதைடாம் மேத்யூஸஃ
இசைதாமஸ் நியூமேன்
நடிப்புடஸ்டின் ஹோப்மேன்
ஜான் ட்ராவோல்டா
ஒளிப்பதிவுபேட்ரிக் ப்ளோசியர்
வெளியீடுநவம்பர் 7, 1997 (1997-11-07)
ஓட்டம்114 நிமிடங்கள்
நாடுவார்ப்புரு:அமெரிக்க திரைப்படம்
மொழிஆங்கிலம்

மேக்ஸ், 24 மணி நேர செய்தி சானல் ஒன்றில் பணி புரியும் செய்தியாளன். முக்கிய செய்தியாளராக ஆக வேண்டும் என்ற லட்சியத்தைக் கொண்டவன்.

ஒரு நாள் மேக்ஸ் ஒரு பொருட்காட்சியைப் பற்றி செய்தி சேகரிக்க வருகிறான். செலவுகளைக் குறைக்க வேலை ஆட்களை குறைத்து வருவதாக அந்த பொருட்காட்சியின் முதலாளி திருமதி பாங்க்ஸ் சொல்கிறார். பேட்டி முடிந்து மேக்ஸ் கழிவறைக்கு செல்கிறான்.

சாம் அந்த பொருட்காட்சியில் காவலாளியாக இருந்தவன், சாமை வீட்டிற்கு அனுப்பி விட்டு க்ளி்ப் எனும் கருப்பரை மட்டும் வேலைக்கு அமர்த்துகிறார் திருமதி பேங்க்ஸ். அன்று பேங்க்ஸை காண சாம் வருகிறான். சாம் பேங்க்ஸை மிரட்ட, தன் துப்பாக்கியை காட்டுகிறான். பேங்க்ஸ் அவன் கையில் இருக்கும் துப்பாக்கியை பிடுங்க முயற்சிக்க, எதிர்பாரா விதமாக அது வெடித்து வெளியில் இருக்கும் காவலர் க்ளிஃபை காயப்படுத்துகிறது.

உள்ளே கழிவறையில் இருந்தபடி இதை பார்க்கும் மேக்ஸ் தன் சானலை தொடர்பு கொண்டு இங்கே ஒரு கடத்தல் சம்பவம் நடப்பதாகவும் இதை நம் சானலில் காட்ட வேண்டும் என்றும் சொல்கிறான். சானல் அதை ஏற்றுக் கொண்டு சிறுவர்கள் கடத்தப்பட்டதாக வேகமாக அறிவிக்கிறது.

தான் சாதாரணமாக அங்கு வந்ததாகவும், பேங்க்ஸிற்கு தன் உறுதியை காட்டவும், ஒரு ஐந்து நிமிடம் பேசவும் மாத்திரமே துப்பாக்கி மற்றும் கொஞ்சம் வெடிமருந்துடன் வந்ததாகவும் வேலை இழப்பால் அவன் குடும்பமும் குழந்தைகளும் பாதிக்கப்படுவார்கள் என்றும் தனக்கு இந்த வேலையை தவிர வேறு வேலை கிடைக்கவில்லை என்றும் அப்பாவியாக கூறுகிறான்.

நாடு முழுவதும் கடத்தல் சம்பவம் பரபரப்பாகிறது. இதுதான் தன் வாழ்நாளை மாற்றப் போகும் பரபரப்பான செய்தி, இதை கனகச்சிதமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மேக்ஸ் முடிவு செய்கிறான். சாமின் அப்பாவித் தனத்தையும், அந்தக் கடத்தல் முன்வைக்கும் கொடூரன் என்ற முரண்பாட்டையும் கலந்து ஒரு சுவாரசியமான செய்தியாக்க திட்டமிடுகிறான்.

போலிஸ் சாமை அணுகி குழந்தைகளை விடுவிக்க, பணயமாக என்ன வேண்டும் என்று கேட்கிறார்கள். அவனுக்கு எந்த கோரிக்கையும் இல்லை. ஆனால் வெளியே போனால் போலிஸ் கைது செய்துவிடும் நிலமையை சமாளிக்க மேக்ஸ் சொல்படி கேட்கிறான். மேக்ஸை தன் தூதுவராக நியமித்துவிடுகிறான். இதற்கு மேல் மேக்ஸ் தன் ஷோவை தொடங்குகிறான்.

சுடப்பட்ட கறுப்பினத்தவரை வைத்து ஒரு கறுப்பின செய்திச் சானல் இது இனவெறி என்கிறது. இன்னொரு டீவி சானலோ சாமின் நண்பர் என ஒருவரை பேட்டி எடுத்து அவர் 'சாம் ஒரு காட்டுமிராண்டி' என்று சொல்வதை ஒலிபரப்புகிறது.

சாமின் பேட்டி எக்ஸ்க்ளூசிவாக ஒளிபரப்பாகிறது. அவன் அப்பாவித் தனத்தை பார்க்கும் மக்கள் அவன் பக்கம் நிற்கிறார்கள். 59% பேர் சாம் விடுவிக்கப்பட வேண்டும் என்று கருதுகிறார்கள். ஒரே இரவில் மேக்ஸின் திட்டப்படி சாம் அமெரிக்க ஹீரோவாகிறான்.

ஆனால் அமெரிக்காவின் முக்கியச் செய்தியாளரான கெவின் இதை முட்டாள் தனம் என்கிறார். மேக்ஸ் உண்மையை திரிப்பதாகவும் சாம் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் இந்த செய்தி அறிக்கையை தான் செய்யப் போவதாகவும் கிளம்புகிறார். மேக்ஸ் ஒருபக்கம் சாமை அப்பாவியாக காட்ட, கெவினோ மேக்ஸும் சாமும் நாடகமாடுவதாகவும் சாம் குற்றவாளி எனவும் செய்தியை மாற்றி விடுகிறார்.

அதே நேரம் க்ளிஃப் இறந்துவிட சாம் அமெரிக்க மக்களால் வெறுக்கப்படுகிறான். அனைத்து செய்திச் சானல்களும் சாமிற்கு எதிராக செய்திகளை வெளியிடுகின்றன. சாம் தன் கட்டுப்பாட்டை இழக்கிறான், குழந்தைகளையும் மேக்ஸையும் வெளியே விட்டுவிட்டு வெடிமருந்தை கொண்டு தற்கொலை செய்து கொள்கிறான்..

நடிகர்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு