மேதினிநகர்

மேதினி நகர் இந்திய மாநிலமான ஜார்க்கண்டில் உள்ள பலாமூ மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், ஒரு நகராட்சியாகும். இந்த நகரம் வடக்கு கோயல் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.

பெயரின் தோற்றம் தொகு

1861 ஆம் ஆண்டில் மானுடவியலாளரும் சோட்டா நாக்பூரின் ஆணையாளருமான கர்னல் எட்வர்ட் டுயிட் டால்டன் (1815–1880) என்பவரின் பெயரால் பிரித்தானிய ஆட்சியில் இந்த நகரம் போது டால்டன்கஞ்ச் என்று பெயரிடப்பட்டது.[1] 2018 ஆம் ஆண்டு ஏப்ரலில் நகராட்சியாக மாறிய பின்னர் பெயர் மாற்றப்பட்டது. இந்த நகரம் அதனை ஆட்சி செய்த மகாராஜா மதினி ரேவின் பெயரால் மெதினிநகர் என்று பெயரிடப்பட்டது.[சான்று தேவை]

வரலாறு தொகு

கி.பி 14 முதல் 15 ஆம் நூற்றாண்டு வரை இந்த பிராந்தியம் செரோ வம்சத்தினரால் ஆட்சி செய்யப்பட்டது. செரோ ஆட்சியாளர்களிடையே மிகவும் பிரபலமானவர் ராஜா மதினி ரே . பாலமு கோட்டை மற்றும் ஷாப்பூர் கோட்டை ஆகியவை இந்த பகுதியில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அடையாளங்கள் ஆகும்.

புவியியல் தொகு

மேதினிநகர் 24.03 ° வடக்கு 84.07 ° கிழக்கு என்ற புவியியல் இருப்பிடத்தில் அமைந்துள்ளது. [2]இது சராசரியாக 215 மீ (705 அடி) உயரத்தைக் கொண்டுள்ளது.

இந்த நகரத்தில் இருந்து பெட்லா தேசிய பூங்கா 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த பூங்கா புலிகளுக்கு பிரபலமானது. பெட்லா தேசியப் பூங்கா பாலமாவு புலி திட்டத்தின் கீழ் வருகிறது. அருகிலுள்ள மற்றொரு சுற்றுலாத் தளமான இடமான கெச்ச்கி, மெதினிநகரில் இருந்து 18 கி.மீ தொலைவில், கோயல் நதி மற்றும் அவுரங்கா நதியின் சங்கமத்தில் அமைந்துள்ளது. அடர்ந்த காடுகளால் மூடப்பட்ட பீடபூமியான நேதர்ஹாட் இந்த நகரத்தின் அருகே அமைந்துள்ளது.

காலநிலை தொகு

மேதினிநகர் கோப்பனின் காலநிலை வகைப்பாட்டின் கீழ் ஈரப்பதமான துணை வெப்பமண்டல காலநிலையைக் கொண்டுள்ளது.[3]

போக்குவரத்து தொகு

டால்டன்கஞ்ச் ரயில் நிலையம் மெதினிநகரில் உள்ள ரயில் நிலையம் ஆகும்.

டால்டன்கஞ்ச் புதுடில்லிக்கு தென்கிழக்கில் 1,036 கிலோமீட்டர் (644 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. லக்னோ, பாட்னா, ராஞ்சி, கோட்டா, போபால் சந்தி , அகமதாபாத், டெல்லி , ஜபல்பூர் , கொல்கத்தா, வாரணாசி மற்றும் கயாவிலிருந்து டால்டன்கஞ்ச் ரயில் நிலையத்திற்கு ரயில் மூலம் செல்லலாம் . அருகிலுள்ள விமான நிலையம் ராஞ்சியில் 165 கிலோமீட்டர் (103 மைல்) தொலைவில் உள்ளது.

பாட்னா, ராஞ்சி, ராய்ப்பூர் , அம்பிகாபூர், கொல்கத்தா, துர்காபூர் , வாரணாசி, ஜாம்ஷெட்பூர், தன்பாத் , டெல்லி, லக்னோ, அலகாபாத் , கோட்டா, கான்பூர் மற்றும் கயா போன்ற நகரங்களுடன் சாலை வழியாக மெதினிநகர் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.

மக்கள் தொகை பரம்பல் தொகு

2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 26 வார்டுகளும், 13,821 வீடுகளும் கொண்ட மேதினிநகர் நகராட்சியின் மொத்த மக்கள்தொகை 78,396 ஆகும். அதில் 41,430 ஆண்கள் மற்றும் 36,966 பெண்கள் உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 9362 (11.94%) ஆகவுள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 892 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 87.89% ஆகவுள்ளது. மக்கள்தொகையில் இந்துக்கள் 77.32%, முஸ்லீம்கள் 19.92%, சமணர்கள் , கிறித்தவர்கள் 1.13% மற்றும் பிறர் 1.63% ஆகவுள்ளனர்.[4]

சான்றுகள் தொகு

  1. "Service Record". www.swansea.ac.uk. Archived from the original on 2021-09-18. பார்க்கப்பட்ட நாள் 2019-12-05.
  2. "Maps, Weather, and Airports for Daltenganj, India". www.fallingrain.com. பார்க்கப்பட்ட நாள் 2019-12-05.
  3. "Climate". {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  4. Medininagar Population Census 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேதினிநகர்&oldid=3591301" இலிருந்து மீள்விக்கப்பட்டது