மேனார்டு நாடா எரியூட்டி

மேனார்டு நாடா எரியூட்டி(Maynard tape primer) என்பது, மசுகெத்துகளின் விரைவான மீள்குண்டேற்றத்திற்கு வித்திட்ட, எட்வர்டு மேனார்டால் வடிவமைக்கப்பட்ட ஒரு அமைப்பு ஆகும்.

மேனார்டு நாடா எரியூட்டி அமைப்பு 

கண்டுபிடிப்பு 

தொகு

தட்டும் மூடி அமைப்புகள், பாதரச(II) பல்மினேட்டால் நிரப்பப்பட்ட சிறிய செப்பு மூடிகளை சார்ந்திருந்தன. இதனால், ஈரமான வானிலைகளில், மசுகெத்தின் நம்பகத்தன்மையும், செயல்திறனும் மேம்பட்டன. ஆனால், மசுகெத்தின் மெதுவான சுடும் வீகிதம் ஆனது, இன்னும் களையப்பட வேண்டிய ஒரு பிரச்சையாகவே இருந்தது. சுடுகலன்களில் ஆர்வம் கொண்ட, பல் மருத்துவரான திரு. எட்வர்டு மேனார்டு, எரியூட்டும் பொருளை சிறு உருண்டைகளாக்கி, மெல்லிய காகிதப்பட்டைகளில் வைத்து, இன்னொரு காகிதப்பட்டையை அதன்மீது வைத்து பசையால் ஒட்டி, எரியூட்டி "நாடா"-வை உருவாக்கினார். மசுகெத்தின் சுத்தியல் இழுக்கப்பட்ட நிலையில், நாடாவை முன் நகர்த்தும் தானியக்க உள்ளீட்டு அமைப்பையும், மேனார்டு வடிவமைத்தார். சுத்தியல் எரியூட்டியை வெடிக்க வைப்பது மட்டுமல்லாது, நாடாவின் ஏற்கனவே சுட்ட பகுதிகளை வெட்டி அகற்றவும் செய்தது.

ஆரம்பகட்ட வரவேற்பு 

தொகு

மேனார்டின் புதிய அமைப்பினால், தட்டும் மூடியின் முளையில். தட்டும் மூடியை கையால் ஏற்றுவது, இனி தேவையில்லை என்றாயிற்று. இது துப்பாக்கியின் மீள்குண்டேற்ற செயற்படிகளில், ஒரு படியை சுடுநருக்காக குறைத்து, சுடுநரின் ஒட்டுமொத்த சுடும் விகிதத்தை அதிகரித்தது. 

களத்தில் கண்ட செயல்பாடு 

தொகு

இந்த மேனார்டு நாடா சில கட்டுப்படுத்தப்பட்ட சூழல்களில் நன்றாக வேலை செய்தது, ஆனால் போர்க்களத்தில் நம்பகத்தன்மை இல்லாததாக நிரூபணம் ஆனது. இந்த இயக்கமுறை பலமில்லாமல், மிகவும் மென்மையாக இருப்பதால், மண் மற்றும் தூசியால் எளிதில் மாசு அடைந்துவிடும். இந்த நாடா நீர்புகாதது என்று தான் விளம்பரப் படுத்தப்பட்டது, ஆனால் ஈரப்பதம் தான் இதன் மோசமான பிரச்சனையாக இருந்தது. காகிதப் பட்டைகள் அதீத ஈரப்பதத்திற்கு கூட பாதிப்படைந்தது.

இன்னமும், மேனார்டு நாடா அமைப்பு தான், தற்கால (தீபாவளி) பொம்மை துப்பாக்கிகளில் பயன்படுத்தப் படுகிறது.

மேலும் பார்க்க

தொகு

மேற்கோள்கள் 

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேனார்டு_நாடா_எரியூட்டி&oldid=3812957" இலிருந்து மீள்விக்கப்பட்டது