மேரி அக்ராமி

ஆப்கானிய பெண்ணிய செயற்பாட்டாளர்

மேரி அக்ராமி (Mary Akrami) ஆப்கானித்தான் நாட்டு பெண்கள் திறன் மேம்பாட்டு மையத்தின் நிர்வாக இயக்குநராகவும், ஆப்கானியப் பெண்கள் வலையமைப்பின் இயக்குநராகவும் உள்ளார். 1975 அல்லது 1976 ஆம் ஆண்டில் பிறந்த இவருக்கு 44 அல்லது 45 வயது இருக்கலாம்.[1][2] 2001 ஆம் ஆண்டு செருமனியின் பான் நகரில் நடைபெற்ற மாநாட்டில் ஆப்கானிய குடிமக்கள் சமூகத்தை இவர் பிரதிநிதித்துவப்படுத்தினார்.[3] 2003 ஆம் ஆண்டில் ஆப்கானித்தான் மகளிர் திறன் மேம்பாட்டு மையம் ஆப்கானித்தானின் காபூல் நகரில் முதலாவது பெண்கள் பாதுகாப்பிடத்தை திறந்தது.[4] இங்கு அவர்களுக்குத் தேவையான சட்ட ஆலோசனை, கல்வியறிவு வகுப்புகள், உளவியல் ஆலோசனை மற்றும் அடிப்படை திறன் பயிற்சி ஆகியவை வழங்கப்படுகின்றன. அக்ராமி ஒரு நாளின் 24 மணிநேரமும் பாதுகாப்பிடத்திற்கு அழைக்கப்படுகிறார். இவரது தலைமையின் கீழ் அங்குள்ள பெண்கள் சிலர் தங்களைக் கொடுமைப்படுத்தியவர்களை பகிரங்கமாகக் கண்டித்து, அவர்கள் மீது நீதிமன்ற வழக்குகளைத் தாக்கல் செய்ய உதவுகிறார்.[5] தனது பணிக்காக அக்ராமி பல அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்கிறார்.

2012 இல் மேரி அக்ராமி

ஒரு சமமான மற்றும் அமைதியான சமுதாயத்தை கற்பனை செய்து இவர் இயங்குகிறார். ஆப்கானித்தானின் பல்வேறு மாகாணங்களில் சமூக அடிப்படையிலான அமைதி சபைகளைத் தொடங்கினார். இவை உள்ளூர் மட்டங்களில் மோதல் தீர்க்கும் வழிமுறைகளில் ஈடுபட்டன. இவரது முன்னெடுப்புகள் சமூக அடிப்படையிலான அமைதி கட்டமைப்பில் பெண்கள் சேர்க்கப்படுவதற்கான தொடக்கமாகும்.

2007 ஆம் ஆண்டில் பன்னாட்டு வீரப் பெண்மணி விருதைப் பெற்றார் [2] பிபிசியின் 2016 ஆம் ஆன்டுக்கான சிறந்த 100 பெண்கள் பட்டியலில் ஆண்டின் மிகவும் உத்வேகம் அளிக்கும் மற்றும் செல்வாக்கு மிக்க பெண்களில் ஒருவராகப் பெயர் பெற்றார்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "BBC 100 Women 2016: Who is on the list?". பார்க்கப்பட்ட நாள் 21 November 2016.
  2. 2.0 2.1 Honorees
  3. What's an American lawyer doing in Afghanistan? - CSMonitor.com
  4. Afghan Women Slowly Gaining Protection, NYTimes, Retrieved 14 July 2016
  5. AWIU » 2007 WOC – Mary Akrami பரணிடப்பட்டது 2014-12-13 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேரி_அக்ராமி&oldid=3857659" இலிருந்து மீள்விக்கப்பட்டது