மேரி ஆண்டர்சன்

தொழில் வளர்ச்சியாளர் மற்றும் புதுமைப் புனைவாளர்

மேரி ஆண்டர்சன் (Mary Anderson) (1866–1953[1]) ஓர் அமெரிக்கர். நில புலன் தொழில் வளர்ச்சியாளரும புதுமைப்புனைவாளரும் பண்ணையாளரும் கொடிமுந்திரித் தோட்ட உரிமையாளரும் ஆவார். இவர் காற்றுக் கவசத் துடைப்பி அலகை உருவாக்கினார். இவருக்கு 1903இல் இதற்கான முதல் உரிமம் வழங்கப்பட்டது.[2] காற்றுக்கவசத் துடைப்பி எனும் இது சீருந்து சாளரக்கதவைத் துடைக்க உதவும் தன்னியக்கக் கருவியாகும். இது சீருந்துக்குள்ளிருந்தே கட்டுபடுத்தவல்ல கருவியாகும்.[3]

மேரி ஆண்டர்சன்
Mary Anderson
பிறப்பு1866
கிரீன் கவுண்டி, அலபாமா
இறப்பு1953|1866
மாண்டீகிள், டென்னசி
பணிபுதுமைப்புனைவாளர்

இளம்பருவம்

தொகு

மேரி ஆண்டர்சன் அமெரிக்க மீளாக்கக் காலகட்டத் தொடக்கத்தில் 1866இல் அலபாமாவில் உள்ள கிரீன் கவுண்டியில் பிறந்தார்.இவர் 1889இல் வளர்நிலை நகரமான அலபாமாவிலமைந்த பர்மிங்காமுக்கு தன் விதவைத் தாயுடனும் தங்கையுடனும் இடம்பெயர்ந்தார். அங்கு சென்று நிலைத்ததும் ஃஐலாந்து வளாகத்தில் ஃபேர்மவுண்ட் அடுக்க்கத்திக் கட்டினார். இவர் 1898இல் கலிஃபோனியாவில் உள்ள ஃபிரெசுனோவுக்கு நகர்ந்தார். அங்கு 1898 வரை கால்நடைப் பண்ணையையும் கொடிமுந்திரித் தோட்டத்தையும் நடத்தினார்.

காற்றுக்கவசத் துடைப்பியின் புனைவு

தொகு

நியூ யார்க் நகருக்கு 1902இல் பனிமிகுந்த மழைக்காலத்தில் சீருந்தில் போகும்போது, இவர் ஊர்தியோட்டி அவற்றின்மீது விழும் பனிக்கட்டிகளை அகற்றமுடியாத்தால் இரு கண்ணாடித் தட்டுகளையும் திறந்துவிட்டுச் செல்வதைக் கண்ணுற்றுள்ளார்.[4] பின் இவர் அலபாமா திரும்பியதும் ஒரு கைவினைக் காற்றுக்கவசத் துடைப்பி வடிவமைப்பாளரை வாடகைக்கு அமர்த்தி புதிய வடிவமைப்பை உருவாக்கி உள்ளூர்ப் பட்டறையில் அந்த வடிவமைப்புக்கான செய்முறைக் கருவியைச் செய்யச் செய்துள்ளார். உடனே 1903இல் அதற்கான உரிமத்துக்கு விண்ணப்பித்து 17 ஆண்டுகளுக்கான காற்றுக்கவசத் துடைப்பிக்கான உரிமத்தைப் பெற்றுள்ளார்.[1] இவரது கருவியில் ஊர்திக்குள் அமைந்த நெம்புகோல் காற்றுக்கவசத்தின்மேல் வெளியில் தடவும் தொய்வத்தாலான துடைப்பியை இயக்கியது. இந்த நெம்புகோலை இயக்கி விற்சுருள் பூட்டிய துடைப்பியின் கையை கண்ணாடித் தட்டின் இட்மும் வலதுமாக இயக்கலாம்.துடைப்பி, சாளரக் கண்ணாடித் தட்டின் மீதமர ஓர் சமனெடைபொருத்தப்பட்டது.[5][6] இதுபோன்ற கருவிகள் ஏற்கெனவே செய்யப்பட்டிருந்தாலும் முதன்முதலாகத் திறம்பட வேலைசெய்தது ஆண்டர்சனின் கருவியே ஆகும்.[6]

இவர் தனது புதுமைப்புனைவை 1905இல் ஒரு கனடியக் குழுமத்துக்கு விற்கமுனைந்தபோது அக்குழுமம் "வணிகவியலாக இதை விற்பது அவ்வளவு மதிப்புடையதாகக் கருதவில்லை" என வாங்க மறுத்துவிட்டது.

பிறகு 1920இல் உரிமம் காலாவதியனதும் தானியங்கியாக்கத் தொழில்வணிகம் பலபடியாக வளரவே ஆண்டர்சனின் அடிப்படை வடிவமைப்பிலான காற்றுக்கவசத் துடைப்பி செந்தரக் கருவியாகப் பயன்படலானது.[சான்று தேவை]இதை 1922இல் கேடில்லாக் எனும் சீருந்தாக்கக் குழுமம் முதன்முதலாகப் பயன்படுத்திச் சீருந்துகளைச் செய்யத் தொடங்கியது.[5]

பின்னாள் வாழ்க்கை

தொகு

ஆண்டர்சன் 87 அகவை வரை அதாவது தன் இறப்புவரை பர்மிங்காமில் வாழ்ந்துவந்தார். அதுவரை ஃபேர்மவுண்ட் அடுக்ககத்தையும் நன்றாகப் பேணிக் காத்துவந்தார். இறப்பின்போது இவர்தான் தென்ஃஐலாந்து பிரிசுபைட்டீரியன் திருச்சபையில் மிக மூத்த உறுப்பினராவார்.இவர் டென்னசியில் இருந்த மாண்டீகிளில் உள்ள தன் விட்டில் இறந்தார். இவரது இறுதிச்சடங்கை முனைவர் ஃபிரான்க் ஏ. எசு என்பவர் தென்ஃஐலாந்தில் நிறைவேற்றினார். இவர் எல்ம்வுட் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார் .[1]

மக்கள் பண்பாட்டில்

தொகு

ஆண்டர்சனின் காற்றுக்கவசத் துடைப்பியைப் பருவம்17, விவரணை 19: "இளம்பெண்களும் பணமீட்ட விரும்புகின்றனர்," என, The Simpsons' ' எனும் கேலிச் சித்திரத்தில் மார்கெ சிம்சனும் கணவரும் மகனும் பாலின நிகர்மையைப் பற்றிப் பேசும்போது குறிப்பிடுகின்றனர்:

மார்கெ: "நல்லது, ஒரு பெண் சீருந்தின் காற்றுக்கவசத் துடைப்பியைப் புதிதாகப் புனைந்துள்ளாரே!"
ஃஓமர்: " ஆமாம், அது ஆணின் புனைவான சீருந்துடன் இணைந்து செல்கிறதாம்!"[7]

ஆண்டர்சனின் காற்றுக்கவசத் துடைப்பி புனைவு சுருக்கமாகப் பிரித்தானிய புனைவு நிரலிலும் விவரிக்கப்பட்டுள்ளது/ வினாக்காட்சி; QI (மிக ஆர்வமானவை); பருவம் 10, விவரணை 16 - "வேலையைப் பற்றி மட்டும்".

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Obituary பரணிடப்பட்டது 2011-07-08 at the வந்தவழி இயந்திரம், Birmingham Post-Herald, June 29, 1953
  2. United States Patent 743,801, Issue Date: November 10, 1903
  3. Women Hold Patents on Important Inventions; USPTO recognizes inventive women during Women's History Month பரணிடப்பட்டது 2009-05-11 at the வந்தவழி இயந்திரம், United States Patent and Trademark Office press release #02-16, March 1, 2002, accessed March 3, 2009
  4. Slater, Dashka, Who made that? Windshield Wiper, New York Times Magazine, September 14, 2014, p.22
  5. 5.0 5.1 "Hall of Fame Inventor Profile: Mary Anderson". Invent Now Hall of Fame. Archived from the original on 2013-05-07. பார்க்கப்பட்ட நாள் 2015-08-23.
  6. 6.0 6.1 Mary Anderson: Windshield Wipers, September 2001, Inventor of the Week Archive, Massachusetts Institute of Technology School of Engineering website, accessed March 3, 2009
  7. "Girls Just Want to Have Sums". The Simpsons. Fox. April 30, 2006.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேரி_ஆண்டர்சன்&oldid=3639334" இலிருந்து மீள்விக்கப்பட்டது