மேரி ஐகென்ஹெட்

அன்னை மேரி பிரான்சிஸ் ஐகென்ஹெட் ( Mother Mary Frances Aikenhead ) (19 ஜனவரி 1787 – 22 ஜூலை 1858) அயர்லாந்தைச் சேர்ந்த செவிலியராவார்.[1] மேலும், இவர் கத்தோலிக்க திருச்சபையின் துறவற சபை, மத சகோதரிகளின் அறக்கட்டளை, டப்லினில் உள்ள செயின்ட் வின்சென்ட் மருத்துவமனை ஆகியவற்றின் நிறுவனரும் ஆவார்.

அன்னை மேரி பிரான்சிஸ்
மேரி ஐகென்ஹெட் (சுமார் 1807)
பிறப்பு19 ஜனவரி 1787
கார்க் நகரம், அயர்லாந்து
இறப்பு22 ஜூலை 1858
டப்லின், அயர்லாந்து
கல்லறைடப்லின், அயர்லாந்து
அறியப்படுவதுமத சகோதரிகளின் அறக்கட்டளை
பெற்றோர்டேவிட் ஐகென்ஹெட்
மேரி இசுடாக்போல்

சுயசரிதை

தொகு

மேரி, மருத்துவரும் மற்றும் அயர்லாந்தின் ஆங்கிலிகன் தேவாலயத்தின் உறுப்பினருமான டேவிட் ஐக்கன்ஹெட், கத்தோலிக்க திருச்சபையைச் சேர்ந்த அவரது மனைவி மேரி ஸ்டாக்போல் ஆகியோரின் மகளாகப் பிறந்தார்.[2] ஏறக்குறைய தனது ஒன்பது வயதில், மேரி தனது தாய்வழி பாட்டியுடன் அதிக நேரத்தைச் செலவிடடத் தொடங்கினார். அங்கு இவரது அத்தை திருமதி கோர்மன் கத்தோலிக்க நம்பிக்கைகள் இவருக்கு கற்றுத்தரப்பட்டது. நோய்வாய்ப்பட்டிருந்த இவரது தந்தை 15 டிசம்பர் 1801 இல் இறக்கும் முன் கத்தோலிக்க திருச்சபை தேவாலயத்தில் சேர்த்துக் கொள்ளப்படிருந்தார். ஆறு மாதங்களுக்குப் பிறகு, பதினைந்து வயதில், மேரி 6 ஜூன் 1802 இல் கத்தோலிக்கராக ஞானஸ்நானம் பெற்றார்.[3]

தொண்டுப் பணிகள்

தொகு

1807 ஆம் ஆண்டில் கார்க்கில் இருந்த செவிலியரான அன்னா மரியா பால் என்பவருடன் நட்பு கொண்டார்.[4] மவுண்ட்ஜாய் சதுக்கத்தில் உள்ள அன்னாவின் வீட்டிற்கு ஐகென்கெட் அடிக்கடி சென்று அவரைச் சந்தித்தார். மேலும் இவர்கள் இருவரும் டப்லின் ஏழைகளுக்கு உதவ திட்டமிட்டனர். அன்னா மரியா, டப்லினின் வருங்கால பேராயர் டேனியல் முர்ரேயின் நெருங்கிய நண்பராகவும் இருந்தார். அவர் தனது மத சகோதரிகள் அறக்கட்டளை மூலம் ஐக்கென்கெட்டிற்கு உதவினார். டப்லினில் பரவலான வேலையின்மை மற்றும் வறுமை இருந்தது. விரைவில் தன்னுடைய தோழியுடன் சேர்ந்து ஏழைகள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்களை அவர்களது வீடுகளுக்குச் சென்று உதவ ஆரம்பித்தார்.[5]

1834 ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் தேதி பேராயர் டேனியல் முர்ரே மற்றும் மேரி ஐகென்ஹெட் ஆகிய இருவரும் செயின்ட் வின்சென்ட் மருத்துவமனையை நிறுவினர்.[6]

இறப்பு

தொகு

இவர் தனது 71 வயதில் டப்ளினில் இறந்தார். எண்ணற்ற பணிகள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் கிளைகள் தவிர, பத்து நிறுவனங்களின் பொறுப்பாளராக இருந்தார்.[7] டோனிபுரூக், செயின்ட் மேரி மாக்டலனுடன் இணைக்கப்பட்ட கல்லறையில் இவர் அடக்கம் செய்யப்பட்டார்.[8]

புனிதர் பட்டம்

தொகு

ஐகென்ஹெட்டின் ஆன்மீக எழுத்துக்கள் இறையியலாளர்களால் 8 மே 1918 இல் அங்கீகரிக்கப்பட்டன.[9] 20 மார்ச் 1921 அன்று இவருக்கு முறையாக “கடவுளின் வேலைக்காரி” என்ற பட்டம் வழங்கப்பட்டது.[9] 18 மார்ச் 2015 அன்று, இவரது நற்பண்புகளை அறிவிக்கும் ஆணை வெளியிடப்பட்டது. இது இவரை வணக்கத்திற்குரிய மேரி ஐகென்ஹெட் என்று குறிப்பிடும் உரிமையை அளிக்கிறது. [10]

மேற்கோள்கள்

தொகு
  1. David AnthonyForrester, David Anthony (2016). Cleetor, Deborah (ed.). Nursing's Greatest Leaders. New York: Springer Publishing Company.
  2. "Twohig RSC, Miriam. "A Short Synopsis of the Life of Mother Mary Aikenhead"" (PDF). Archived from the original (PDF) on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் 18 September 2014.
  3. ""Religious Sisters of Charity", Nigeria Conference of Women Religious". Archived from the original on 7 February 2020. பார்க்கப்பட்ட நாள் 28 January 2020.
  4. Matthew, H. C. G.; Harrison, B., eds. (2004-09-23), "The Oxford Dictionary of National Biography", The Oxford Dictionary of National Biography, Oxford: Oxford University Press, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1093/ref:odnb/56306, பார்க்கப்பட்ட நாள் 2023-07-02
  5. "Mary Aikenhead", Mary Aikenhead Ministries
  6. Meagher, William. The Life of Rev. Daniel Murray, Dublin, Gerald Bellew, 1856  இந்தக் கட்டுரை பொது உரிமையில் உள்ள மூலத்திலிருந்து உரையைக் கொண்டுள்ளது.
  7.   Rudge, Florence Marie (1913). "Mary Aikenhead". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம். 
  8. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; masofp என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  9. 9.0 9.1 Index ac status causarum beatificationis servorum dei et canonizationis beatorum (in Latin). Typis polyglottis vaticanis. January 1953. p. 147.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  10. "On her way to sainthood, Cork-born venerable Mary Aikenhead born on this day in 1787", Irish Central, January 19, 2020
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேரி_ஐகென்ஹெட்&oldid=3898986" இலிருந்து மீள்விக்கப்பட்டது