மேருமந்திர புராணம்

மேருமந்திர புராணம் என்னும் நூல் 14-ஆம் நூற்றாண்டில் வாமன முனிவர் என்பவரால் தமிழில் எழுதப்பட்டது. 13 சருக்கங்கள், 1405 பாடல்கள் கொண்டது. மேரு, மந்தரர் என்னும் இரு அரச குமாரர்கள் முற்பிறவியில் பெற்ற முத்தி பற்றிய கதைகளைக் கூறுவது. இடையில் உலகியல் முறைமைகள் கூறப்பட்டுள்ளன. சமண மதக் கோட்பாடுகள் விளக்கமாக இதில் கூறப்பட்டுள்ளன.

நூலிலுள்ள பாடல் – எடுத்துக்காட்டு [1]

அறம் அலது உறுதி செய்வார்கள் தாம் இலை
மறம் அலது இடர் செய வருவதும் இலை
நெறி இவை இரண்டையும் நினைந்து நித்தமும்
குறுகுமின் அறநெறி குற்றம் நீங்கவே.
ஆக்குவதே எனில் அறத்தை ஆக்குக
போக்குவதே எனில் வெகுளி போக்குக
நோக்குவதே எனில் ஞானம் நோக்குக
காக்குவதே எனில் விரதம் காக்கவே. [2]

விதியினால் தானம் பூசை மெய்த்தவம் செய்து வீட்டைக் கதிகளைக் கடந்து செல்வர்; காரிகையார்கள் செல்லார்.

கருவிநூல்

தொகு

மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு, பதிப்பு 2005

அடிக்குறிப்பு

தொகு
  1. பாடல் விருத்தம் பொருள் புலப்படுமாறு சொற்பிரிப்பு செய்யப்பட்டுள்ளது
  2. இந்தப் பாடல் திருத்தக்க தேவர் இயற்றிய நரிவிருத்தம் என்னும் நூலின் இறுதிப் பாடலாகவும் உள்ளது. மகளிர்க்கு வீடுபேறு இல்லை என்னும் சமணர் கொள்கையை ஒரு பாடல் குறிப்பிடுகிறது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேருமந்திர_புராணம்&oldid=3305514" இலிருந்து மீள்விக்கப்பட்டது