மேற்குலகின் பெரும் நூல்கள்
மேற்குலகின் பெரும் நூல்கள் என்பது அமெரிக்காவில் 1952 ஆம் ஆண்டு பிரித்தானிக்கா கலைக்களஞ்சிய நிறுவனத்தால் வெளியிடப்பட்ட 54 நூல் தொகுதிகளைக் குறிக்கிறது. இதன் இரண்டாம் பதிப்பு 60 தொகுதிகளைக் கொண்டது. மேற்குலகில் பல மொழிகளில் தொன்று தொட்டு வெளிவந்த பல நூல்களில் இருந்து இந்த தொகுப்புக்களுக்கு நூல்கள் தெரிவு செய்யப்பட்டன.
முதற் பதிப்பு
தொகுமுதற்பதிப்பின் தொகுதி 1 பேருடையாடல் என்பதாகும்.
இரண்டாம் மூன்றாம் தொகுதிகள் மேற்குலகின் முக்கிய 102 எண்ணக்கருக்களைப் பற்றியதாக அமைந்தன.. ஆனால் இவை பல விமர்சனத்து உள்ளாகி உள்ளன. வியாபார நோக்கில் இவை பரிந்துரைக்கப்பட்டதாகவும், உடலுறவு, புகழ் போன்ற முக்கியமான கருத்துக்கள் இடம்பெறவில்லை என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தொகுதி 4 கோமர் எழுதிய இலியட், ஒடிசி ஆகியவற்றைக் கொண்டிருந்தது. தொகுதி 7 பிளேட்டோவின் ஆக்கங்களையும் தொகுதி 8 அரிசுடாட்டிலின் ஆக்கங்களையும் கொண்டிருந்தது.