ஒடிசி (இலக்கியம்)

ஒடிசிஅல்லது ஆடிசி, இலியட் இரண்டும் ஹோமர் என்னும் கிரேக்கப் புலவரால் இயற்றப்பட்டதாக்க் கருதப்படும் பண்டை கிரேக்க இதிகாசங்கள் ஆகும்.கி.மு 900 ஆம் ஆண்டில் எழுதப்பட்டதாகக் எண்ணப்படுகிறது.

ஒடிசியின் துவக்கம்.

இக்கவிதைக் காவியம் ஓடிசஸ் என்னும் மாவீரன் டிரோஜான் போரின் முடிவில் இத்தாக்காவில் உள்ள தன் வீட்டிற்குப் பயணப்படும் பத்தாண்டு கால வழிப்பயணத்தை விவரிக்கிறது. டிரோஜான் போர் இலியட்டில் விவரிக்கப்பட்டுள்ளது. இதே நேரத்தில் அவனது மனைவி பெனிலோப் தன்னை பல மனிதர்களிடமிருந்து காத்துக் கொள்ள வேண்டியுள்ளது; அவனது மகன் டெலிமாச்சோசும் அவனைத் தேடுகிறான்.

வருகின்ற வழியில் ஓடிசசும் அவனது வீரர்களும் பல ஆபத்தான இடங்களையும் அச்சுறுத்தும் மிருகங்கள்,அரக்கர்களையும் எதிர்காண வேண்டியுள்ளது.இக்கதையில் வரும் ஒற்றைக்கண் அரக்கர்கள் (கைக்ளோப்கள்) ஆங்கில இலக்கியத்தில் மிகவும் பரவலாக அறியப்பட்டவர்கள்.

குறிப்புகள்தொகு

  • இந்த புத்தகத்தின் பின்னணியிலேயே நீண்ட பயணத்தைக் குறிக்கும் ஆங்கில சொல் ஓடிஸ்ஸி உருவானது.
  • ஒடிசஸ் என இக்கவிதையில் குறிப்பிடப்படுபவரின் உரோமானியப் பெயர் உலிசஸ் ஆகும்.
  • ஜேம்ஸ் ஜாய்ஸ் எழுதிய 1922ம் ஆண்டு புத்தகம் உலிசஸ் ஹோமரின் காவியத்தைத் தழுவியிருந்தாலும் வெகுவாக வேறானது.
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Odyssey
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒடிசி_(இலக்கியம்)&oldid=1830349" இருந்து மீள்விக்கப்பட்டது