மேற்கு சைபீரியச் சமவெளி

மேற்கு சைபீரியச் சமவெளி பட்னோ-சைபீர்ஸ்காயா ராவ்னினா என்றும் அழைக்கப்படுகிறது (உருசியம்: За́падно-Сиби́рская равни́на) இச்சமவெளியானது சைபீரியாவின் மேற்குப் பகுதியை பெருமளவிற்கு ஆக்கிரமித்துள்ள ஒரு பெரும் சமவெளியாகும்.மேற்கில் உரால் மலைகள்  கிழக்கில் எனிசி ஆறு தென்இகிழக்கில் அல்த்தாய் மலைத்தொடர்கள் இவற்றுக்கு இடையே இச்சமவெளி பரந்து கிடக்கிறது. இந்தச் சமவெளியின் பெரும்பகுதி பெரும்பாலான சமவெளிப் பகுதி வறண்டு காணப்படுகிறது. மேலும், உலகின் மிகப்பெரிய சதுப்பு நிலங்களும் வெள்ளப்பெருக்குச் சமவெளிகளும் இந்தச் சமவெளிக்குள் உள்ளடங்கும். ஓம்ஸ்க், நோவோசிபிர்ஸ்க், டொம்ஸ்க் மற்றும் செல்யாபின்ஸ்க் ஆகிய முக்கிய நகரங்கள் இச்சமவெளிப் பகுதியைச் சார்ந்தவையாகும்.

டாடார்ஸ்காயாவிற்கு வெளிப்புறத்திலிருந்து சைபீரிய இருப்புப்பாதைப் பயணத்தின் போது காணப்பட்ட மேற்கு சைபீரியச் சமவெளி
வடக்கு ஆசியாவின் செயற்கைக்கோள் புகைப்படத்தில் காணப்படும் மேற்கு சைபீரியச் சமவெளி

புவியியல் தொகு

மேற்கு சைபீரியச் சமவெளியானது உரால் மலைகளுக்கு கிழக்கில் பெரும்பாலும் உருசியாவின் பிரதேசத்தில் அமைந்துள்ளது. உலகின் மிகப்பெரிய உடையாத தாழ்நிலப்பகுதியாக குறிப்பிடப்படுகிறது.—மேலும் விட 50 சதவீதத்திற்கும் அதிகமான நிலப்பகுதியானது, கடல் மட்டத்திலிருந்து 100 மீட்டருக்குக் (330 அடி) குறைவான உயரத்திலேயே அமைந்துள்ளது.[1]—மற்றும் பரப்பளவில் சுமார் 2.6–2.7 மில்லியன் சதுர கிலோமீட்டர்கள் அல்லது (1.0 மில்லியன் சதுர மைல்கள்) அளவிற்கு அதாவது சைபீரியாவின் மூன்றில் ஒரு பகுதியை உள்ளடக்கியதாக உள்ளது.[2] இச்சமவெளியானது, வடக்கில் இருந்து தெற்காக 2,400 கி. மீ (1,490 மைல்கள்), ஆர்க்டிக் பெருங்கடலிலிருந்து அல்த்தாய் மலைத்தொடர் வரையிலும், மற்றும் கிழக்கில் இருந்து மேற்காக 1,900 கிமீ (1,180 மைல்) உரால் மலைகளிலிருந்து யெனிசி ஆறு வரையிலும் பரவியுள்ளன.

இந்த சமவெளி நிலப்பகுதிகளில் எட்டு தனித்த தாவர வகைப்பாடுகள் உள்ளன. அவை: தூந்திரா, துாந்திரா காடு, வடக்கு தைகா, மத்திய தைகா, தெற்கு தைகா, துணை தைகா காடுகள், வன-புல்வெளி மற்றும் ஸ்டெப்பி புல்வெளிகள். மேற்கு சைபீரியச் சமவெளியில் துாந்திராவில் குறைந்தபட்சம் 107 அல்லது வன ஸ்டெப்பி-புல்வெளிகளில் 278 அல்லது அதற்கு அதிகமான விலங்கின வகைகளும் காணப்படுகின்றன. நீண்ட யெனிசி ஆறு தெற்கிலிருந்து வடக்காக பாய்கிறது. இது ஆர்க்டிக் பெருங்கடலிலிருந்து 3,530 கிமீ (2,195 மைல்) தொலைவில் உள்ளது. கடலுடன் கலக்குமிடத்தில், 20 மில்லியன் லிட்டருக்கும் அதிகமான (5 மில்லியன் கேலன்கள்) நீர் வெளியேற்றப்படுகிறது. யெனிசி ஆறு அதன் கிளை ஆறான அங்காராவுடன் சேர்த்து 5,530 கிமீ (3,435 மைல்) பாய்கிறது.

யெனிசியால் உருவாக்கப்பட்ட பள்ளத்தாக்கு மேற்கு சைபீரியச் சமவெளி மற்றும் மத்திய சைபீரிய பீடபூமி இவற்றுக்கிடையே ஒரு கடினமான பிரிவாக செயல்படுகிறது. பனிக்கட்டி குவிப்புகள் தெற்கே ஓப்-இர்த்திஷ் சங்கமிக்கும் வரையிலும் தென்பகுதியில் பரவிக்கிடக்கின்றன. ஆங்காங்கே ஒரு சில குன்றுகள் மற்றும் முகடுகளை உருவாக்குகின்றன. இவைதவிர, மற்றபடி சமவெளிப் பகுதியானது வேறு எந்த சிறப்பம்சங்களும் இல்லாத சமவெளியாகவே உள்ளது.

மண்ணியல் தொகு

மேற்கு சைபீரியச் சமவெளியானது புத்துயிர் ஊழிக்கால வண்டல் மண்ணைக் கொண்டுள்ள வியக்கத்தக்க வகையிலான சமவெளிப்பிரதேசமாகும். கடல் மட்டமானது 50 மீட்டர்கள் அளவுக்கு உயருமானால், ஆர்க்டிக் பெருங்கடலுக்கும் நோவோசிபிர்ஸ்கிற்கும் இடையிலான அனைத்து நிலப்பகுதிகளும் மூழ்கடிக்கப்பட்டு விடும். பூமியின் மேலோட்டின் ஒரு பகுதியாக விளங்கும் இது 65,000,000 ஆண்டுகளுக்கு முன்னாலிருந்து தொடங்கி நீண்ட கால அழுத்தத்திற்குட்பட்ட கிடைமட்டப் படிவுகளின் தொகுப்பாகும். இந்தப் படிவுகளில் பெரும்பான்மையானவை, பனித்தடுப்புகளின் காரணமாக திசைமாற்றம் செய்யப்பட்டு காசுப்பியன் கடல் மற்றும் ஏரல் கடல் ஆகியவற்றில் கலக்கமாறு செய்யப்ட்ட ஓப் மற்றும் யெனிசி ஆறுகளின் பாய்ச்சலினால் ஏற்பட்டவையாகும். இந்த சமவெளியில் குறைவான மரங்களைக் கொண்ட மண்ணானது மிகவும் சதுப்பு நிறைந்ததாகவும், குழைச்சேற்றினைக் கொண்ட கரிம ஈர மண்ணாகவும் உள்ளது.

மேற்கோள்கள் தொகு

  1. "Russia". Encyclopædia Britannica. பார்க்கப்பட்ட நாள் 2006-10-24.
  2. "Western Siberian Plain". Columbia Encyclopedia. Archived from the original on 2008-05-28. பார்க்கப்பட்ட நாள் 2006-10-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேற்கு_சைபீரியச்_சமவெளி&oldid=3568890" இலிருந்து மீள்விக்கப்பட்டது