மேற்கு வங்கத்தின் முகமூடிகள்

மேற்கு வங்கத்தின் முகமூடிகள் அல்லது முகோஷ் (Masks of West Bengal) என்பது மேற்கு வங்கத்தின் நாட்டுப்புற நடனமான ”முகமூடிநடனத்திற்காக” பயன்படுத்தப்படும் முகமூடி ஆகும். பெரும்பாலும் இந்த முகமூடிகள் எளிதில் விளங்காத வரலாற்றைக் கொண்டுள்ளன. இந்த முகமூடிகளை அணிவது தொடக்கக் காலம் முதலே நாட்டுப்புறக் கதைகள் மற்றும் மதங்களுடன் தொடர்புப்படுத்தப்பட்டுள்ளது. களிமண், மரம், மென்மரம் அல்லது ஷோலா, தக்கை, காகிதம், உலோகம் போன்றவற்றால் ஆன பல்வேறு வகையான முகமூடிகள் உள்ளன. பொதுவாக, மரமுகமூடிகள், களிமண், தக்கை மற்றும் காகிதத்தால் ஆனவை மிகவும் அரிதானவை. சில முகமூடிகளை மேற்கு வங்காள பழங்குடியினர் பயன்படுத்தி வந்துள்ளனர். புவியியல் ரீதியாக, மேற்கு வங்கம் கலாச்சார வட்டத்திற்குள் வருவதற்கு இந்த முகமூடிகள் ஏதுவாகின்றன. மேற்கு வங்கத்தில் இம்முகமூடி பெரும்பாலும் நாட்டுப்புற நடனத்தில் பயன்படுத்தப்படுகிறது.[1][2] 2015 இல் யுனெஸ்கோ வங்காளத்தின் கிராமியக் கைவினை மையத்தைத் தேர்ந்தெடுத்து, பாரிஸில் தங்கள் கலைப்படைப்புகளைக் காட்சிப்படுத்த ஏற்பாடு செய்தது.[3]

வயல்வெளியில் சாவ் முகமூடி நடனம்
தினாஜ்பூரிலிருந்து பழங்குடி மக்கள் பயன்படுத்தும் மூங்கில் முகமூடி

வகைப்பாடு

தொகு
 
புரூலியா பகுதியிலிருந்து ஒரு முகமூடி

களிமண், மரம், மென்மரம் அல்லது ஷோலா, தக்கை, காகிதம், உலோகம் போன்றவற்றிலிருந்து முகமூடிக் கைவினைஞர் முகமூடிகளை வடிவமைக்கிறார். முகமூடிகளை வடிவமைத்த பிறகு, அதில் பல்வேறு வண்ணங்கள் தீட்டப்படுகிறது.

மர முகமூடி

தொகு
 
தெற்கு தினஜ்பூரின் மர கோமிரா முகமூடிகள்

வங்காளத்தின் முகமூடிகள் அவர்களின் கைவினைத்திறனுக்காகப் பாராட்டப்படுகின்றன. அதன் பல முகமூடிகள் மரத்தால் ஆனவை. வங்காளத்தின் முகமூடிகளில், கோமிரா முகமூடிகள், சிக்னிதால் முகமூடி, கம்பீரா நடன முகமூடிகள், குஷ்முண்டியின் முலாம் பூசப்பட்ட முகமூடிகள், பாக்பா நடன முகமூடிகள் ஆகியவை மரத்தால் ஆனவை.

பஞ்சு மர (சோலா) முகமூடிகள்

தொகு

வடக்கு தினஜ்பூரின் பண்டைய கோமிரா நடனத்தில் கடற்பஞ்சுமர முகமூடிகள் பயன்படுத்தப்படுகின்றன. முர்ஷிதாபாத்திலிருந்து தயாரிக்கப்படும் ஷோலா முகமூடிகளும் மிகவும் பிரபலமாக உள்ளன.

களிமண் முகமூடி

தொகு

குர்னி என்ற இடம் நீண்ட காலமாகக் களிமண் கலையின் குறிப்பிடத்தக்க மையமாக இருந்து வருகின்றன. இங்குத் தயாரிக்கப்படும் களிமண் முகமூடிகள் குறிப்பிடத்தக்கவை மேற்கு வங்காளத்தின் மிகவும் புகழ்பெற்ற நாட்டுப்புற நடனம் சாவ் நடனம், அதன் ஓர் அங்கமாக இந்த முகமூடிகள் பிரிக்க முடியாதபடி விளங்குகின்றன. முகமூடி பல நிலைகளில் உருவாக்கப்படுகிறது. முக அம்சங்கள் களிமண்ணால் ஆனவை. கொல்கத்தாவின் குமோர்டுலி என்ற இடம் அங்குத் தயாரிக்கப்படும் முகமூடிகளால் பெயர்பெற்று மிகவும் அறியப்பட்ட புகழுடையதாகவும் உள்ளது. நவத்வீப் என்ற இடத்தில் செய்யப்படும், ஷிபர் முகோஷ் எனப்படும் களிமண் முகமூடிகள் புகழ்பெற்றவையாகும்.

மூங்கில் முகமூடி

தொகு
 
தினஜ்பூரின் மூங்கில் முகமூடி, மேற்கு வங்கம்

மூங்கில் முகமூடி என்பது மேற்கு வங்கத்தின் தினஜ்பூர் மாவட்டத்தில் உருவான ஒரு புகழ்பெற்ற நாட்டுப்புற முகமூடி ஆகும். இது ஒரு மூங்கில் குச்சியால் ஆனது. முகமூடியின் அமைப்பு ஒரு பழங்குடியின முகமூடி போன்றது.

உலோக முகமூடிகள்

தொகு

தோக்ரா முகமூடிகள் [4] என்பவை உலோக முகமூடிகள் ஆகும். இது மேற்கு வங்கத்தின் ஒரு தனித்துவமான நாட்டுப்புறக் கலை வடிவமாகும்.

சாவ் நடன முகமூடிகள்

தொகு
பாக்மண்டியில் ஒரு சாவ் நடனக்கலைஞர்
சாவ் முகமூடி
சாவ் நடனத்தில் இசைக்கருவி, முகமூடி
மேற்கு வங்கத்தின் சாவ் நடனக்கலை

மிகவும் சுவையான உண்மை என்னவென்றால், புருலியா சாவ் நடனம் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய நடனங்களின் பட்டியலில் பட்டியலிடப்பட்டுள்ளது. புருலியா சாவு நடனத்திற்கும் ஒடிசா சாவு நடனத்திற்கும் இடையேயுள்ள முக்கிய வேறுபாடு நடனத்தில் பயன்படுத்தப்படும் முகமூடிகள் ஆகும். புருலியா சாவ் நடனத்தில் முகமூடியைப் பயன்படுத்துகின்றனர், ஆனால் ஒடிசா சாவு நடனத்திற்கு முகமூடி இல்லை, இதனால் உடல் இயக்கம் மற்றும் சைகையுடன் முகபாவனைச் சேர்த்து ஒடிசா சாவு ஆடப்படுகிறது.[5] பாரம்பரியமாக, ஒரு விவசாய அறுவடை முடிவடைந்து ஒரு புதிய விவசாயம் தொடங்கும் போது மார்ச் மாதத்தின் நடுப்பகுதியில் சாவ் நடனம் நடைபெறும்.[6] புருலியா சாவ் நடனக் கலைஞர் புராணக் கதாபாத்திரங்களைக் குறிக்கும் வகையில் முகமூடிகளை அணிந்து நாடகத்தில் பங்கேற்பர். களிமண்ணால் முகமூடியின் வடிவத்தை உருவாக்கிய பிறகு, ஏற்ற வண்ணங்கள் தீட்டப்படுகிறது. மேலும் பிற பொருட்களால் அலங்கரிக்கப்படுகிறது.

இந்த சாவ் முகமூடிகள் சூத்திரதார் எனப்படும் விஸ்வகர்மா [7] சமூகத்தைச் சேர்ந்த கலைஞர்களால் தயாரிக்கப்படுகின்றன. முகமூடிகள் பல்வேறு நிலைகளில் உருவாக்கப்படுகிறது. மென்மையான காகிதத்தின் 8-10 அடுக்குகள், நீர்த்த பசைகளில் நன்கு முக்கியெடுக்கப்படுகிறது; மண் அச்சுக்குள் வார்க்கும் முன்னர் இவை ஒன்றன்பின் ஒன்றாக அச்சுக்கு ஒட்டப்படுகின்றன. மண் அச்சு வார்க்கப்பட்ட பின் சாம்பல் தூள் கொண்டு தூவப்படுகின்றன.

முக அம்சங்கள் களிமண்ணால் ஆனவை. மண் அச்சுக்கு மேல் சாம்பல் பூசப்படுகிறது அதன் மேல் மண் மற்றும் துணியின் ஒரு சிறப்பு அடுக்கு பயன்படுத்தப்பட்டு, முகமூடி பின்னர் வெயிலில் காயவைக்கப்படுகிறது. இதற்குப் பிறகு, அச்சு மெருகூட்டப்பட்டு, துணி மற்றும் காகித அடுக்குகளையும் அச்சுகளையும் பிரிக்கும் முன் மீண்டும் இரண்டாவது முறை சூரிய உலர்த்தல் செய்யப்படுகிறது. மூக்கு மற்றும் கண்களுக்குத் துளையிட்ட பிறகு, முகமூடி வண்ணங்கள் மற்றும் அணிகளால் அலங்கரிக்கப்படுகின்றன.[8]

மேற்கோள்கள்

தொகு
  1. Masks of West Bengal_Publisher:Indian Museum_kolkata_Author: Sabita Ranjan Sarkar
  2. Masks of West Bengal.
  3. "West Bengal rural craft hubs help artisans double their incomes". https://economictimes.indiatimes.com/small-biz/sme-sector/west-bengal-rural-craft-hubs-help-artisans-double-their-incomes/articleshow/50862490.cms. 
  4. "Dhokra craft". india9.com. பார்க்கப்பட்ட நாள் 2009-03-12.
  5. "The Official Website of Purulia District". purulia.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2018-02-12.
  6. ":::::: Daricha Foundation ::::::". www.daricha.org. பார்க்கப்பட்ட நாள் 2018-02-12.
  7. Atal, Yogesh. Sociology: A Study of the Social Sphere. Pearson Education India. p. 242. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8-13179-759-4.
  8. "The Masks of Bengal" (PDF). Archived from the original (PDF) on 2018-02-13. பார்க்கப்பட்ட நாள் 2020-01-31.