மேல் மாகாண சபையின் கொடி
மேல் மாகாண சபையின் கொடி என்பது, இலங்கையின் ஒன்பது மாகாண சபைகளுள் ஒன்றான மேல் மாகாண சபைக்கான கொடி ஆகும். இது 1987ம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
பயன்பாட்டு முறை | Civil and state கொடி |
---|---|
அளவு | 8:17 |
ஏற்கப்பட்டது | 1987 |
வடிவம் | மூன்றுதலை நாகம், வாளேந்திய சிங்கம், அன்னப்பறவை என்பன கடுஞ்சிவப்புப் பின்னணியிலான செவ்வகத்தினுள் மூன்று வட்டங்களுக்குள் உள்ளன. சுற்றிலும் பல நிற அலங்காரப் பட்டிகள் உள்ளன. |
அமைப்பு
தொகுமேல் மாகாணக் கொடி ஒன்றினுள் ஒன்றாக அடுக்கப்பட்ட மூன்று செவ்வக வடிவங்களைக் கொண்டது. வெளிச் செவ்வகம் பச்சை நிறத்தினான கரைபோல் அமைந்துள்ளது. அதற்குள் அடுத்ததாக அமைந்திருப்பது வெள்ளைப் பின்னணியில் பச்சை, மஞ்சள், சிவப்பு ஆகிய நிறங்களாலான அலங்கார வடிவங்களைக் கொண்ட ஒரு பட்டையாகும். நடுவில் அமைந்திருப்பது கடும் சிவப்பு நிறம்கொண்ட செவ்வகம் ஆகும். இதன் நான்கு மூலைகளிலும் வெண்ணிற அரசிலைச் சின்னங்கள் உள்ளன. மேற்படி செவ்வகத்தின் நடுவில் கிடையாக வரிசையாக அமைந்த மூன்று வெள்ளை நிறத்தில் கோட்டுருவங்களாக வரையப்பட்ட வட்டங்கள் காணப்படுகின்றன. இவற்றின் நடுவில் கடுஞ் சிவப்புப் பின்னணியில், பொன்னிறத்திலான சின்னங்கள் வரையப்பட்டுள்ளன. இடப்பக்க வட்டம் மூன்று தலை நாகத்தையும், நடு வட்டம் வாளேந்திய சிங்கத்தையும், வலப்பக்க வட்டம் அன்னப்பறவையையும் கொண்டுள்ளன.