மே மஸ்க்

கனடாவில் பிறந்த அமெரிக்க உருமாதிரிக் கலைஞர்

மே மஸ்க் (Maye Musk, பிறப்பு : ஏப்ரல் 19, 1948) [1] என்பவர் கனடிய-தென்னாப்பிரிக்க மாதிரி உருவக் கலைஞர் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர் ஆவார். [2] [3] மேலும் இவர் எலோன் மஸ்க், கிம்பல் மஸ்க் மற்றும் டோஸ்கா மஸ்க் ஆகியோரின் தாயும் ஆவார். இவர் 50 ஆண்டுகளாக ஒரு உரு மாதிக் கலைஞராக இருந்து வருகிறார், டைம் உள்ளிட்ட இதழ்களின் அட்டைபடத்தில் இடம்பெற்றுள்ளார். [4]

மே மஸ்க்
Maye Musk at Elle Quebec photoshoot.jpg
எல்லே கியூபெக், 2012 க்கான "ICÔNES" போட்டோஷூட்டில் மேய் மஸ்க்
பிறப்புமே ஹால்டேமன்
ஏப்ரல் 19, 1948 (1948-04-19) (அகவை 72)
கனடா ரெஜைனா
தேசியம்கனடியர்
பணி
வாழ்க்கைத்
துணை
Errol Musk
(தி. 1970; ம.மு. 1979)
பிள்ளைகள்எலோன் மஸ்க், கிம்பல் மஸ்க் மற்றும் டோஸ்கா மஸ்க்
உறவினர்கள்லிண்டன் ரைவ் (மருமகன்)

வாழ்கைவரலாறுதொகு

தென்னாப்பிரிக்கா (1950-1989)தொகு

மேய் ஹால்டேமன் 1948 இல் கனடாவின் ரெஜைனாவில் இரட்டையர்களில் ஒருவராகவும் [5] ஐந்து பிள்ளைகளில் ஒருவராகவும் பிறந்தார். [2] இவரது குடும்பம் 1950 இல் தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவுக்கு குடிபெயர்ந்தது. அவரது பெற்றோர் வின்னிஃபிரட் ஜோசபின் "வின்" (பிளெட்சர்) மற்றும் டாக்டர் ஜோசுவா நார்மன் ஹால்டேமன் ஒரு மூட்டுப்பொருத்துனர் தொழில்முறை அல்லாத தொல்லியல் ஆய்வாளர் ஆவார் [6] டாக்டர் ஜோசுவா நார்மன் ஹால்டேமன் ஒரு சாகசக்காச விரும்பியாக இருந்தனர் மேலும் 1952 ஆம் ஆண்டில் ஒற்றை எஞ்சின் விமானத்தை செலுத்தி அதில் குடும்பத்துடன் உலகம் முழுவதும் சுற்றிவந்தார். பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, குடும்பம் கலகாரி பாலைவனத்தில் சுற்றித் திரிவதில் காலகாரியில் மறைந்துபோன நகரத்தைத் தேடும் முயற்சியிலும் ஈடுபட்டது. இவரின் பெற்றோர் படவில்லைக் காட்சிகள் மற்றும் அவர்களின் பயணங்களைப் பற்றி பேசினர், "என் பெற்றோர் மிகவும் பிரபலமானவர்கள், ஆனால் அவர்கள் ஒருபோதும் போலிப் பகட்டர் அல்ல," என்று இவர் குறிப்பட்டார்.

இவர் 1969 இல் மிஸ் தென்னாப்பிரிக்கா அழகிப் போட்டியில் இறுதிச் சுற்றில் இடம்பெற்றார். [2] 1970 ஆம் ஆண்டில், இவர் உயர்நிலைப் பள்ளியில் சந்தித்த தென்னாப்பிரிக்க பொறியியலாளர் எரோல் மஸ்க்கை மணந்தார். இந்த இணையருக்கு மூன்று குழந்தைகள் அவர்கள் எலோன் மஸ்க், கிம்பல் மஸ்க், டோஸ்கா மஸ்க் ஆகியோர் ஆவர். இவர் தென்னாப்பிரிக்காவில் உள்ள ஆரஞ்சு விடுதலை மாநில பல்கலைக்கழகத்தில் உணவியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர் அவர் டொராண்டோ பல்கலைக்கழகத்தில் ஊட்டச்சத்து அறிவியலில் மற்றொரு முதுகலைப் பட்டம் பெற்றார்.

1979 இல், இவர் எரோல் மஸ்க்கை விவாகரத்து செய்தார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, எலோன் தனது தந்தையுடன் வாழ முடிவு செய்தார். கிம்பல் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு எலோனிடம் சென்று சேர்ந்தார். [2] உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்ற பிறகு, எலோன் கனடாவுக்குச் செல்ல முடிவு செய்தார். இதனையடுத்து ஆறு மாதங்களுக்குப் பிறகு 1989 இல் மே தனது மற்ற குழந்தைகளுடன் எலோனைத் தொடர்ந்து கனடா சென்றனர். [4]

கனடா மற்றும் அமெரிக்கா (1989 - தற்போது வரை)தொகு

 
பிரைன் பாரில் மேய் மஸ்க் 2019

இவரது மாதிரி உருவக் கலைஞர் வாழ்க்கை கனடா மற்றும் அமெரிக்காவில் தொடர்ந்தது. [4] இவர் ஸ்பெசல் கே தானிய பெட்டிகளில், [2] ரெவ்லான் அழகுசாதனப் பொருள் விளம்பரங்களில், பியான்சே நோல்ஸ் கானொளி போன்றவற்றிலும் டைம் பத்திரிகையின் அட்டைப்படத்தில் நிர்வாணமாகவும் தோன்றினார்; 2011 ஆம் ஆண்டில் நியூயார்க் பத்திரிகையின் அட்டைப்படத்தில் கர்ப்பிணி போன்ற போலி வயிற்றுடன் நிர்வாணமாக இடம்பெற்றார்; இவர் 2012 இல் எல்லே கனடாவின் அட்டைப்படத்தில் இடம்பெற்றார்; மற்றும் டார்கெட் மற்றும் விர்ஜின் அமெரிக்கா போன்றவற்றுக்கான விளம்பரப் படங்களில் நடித்தார். 2015 ஆம் ஆண்டில், அவர் ஐஎம்ஜி மாடல் நிறுவனத்தின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். 2017 செப்டம்பரில் கவர் கேர்ள் என்ற அழகுப்பொருள் தயாரிப்பாளர்கள் இவரது 69 வயதில் தங்கள் மாதிரி உருவக் கலைஞராக நியமித்தனர். இந்த ஒரு செய்தியை "வரலாற்றை உருவாக்குகிறது" என்று பெருமிதத்துடன் அறிவித்தது. [7] [8]

மாதிரி உருவக் கலைஞர் தொழிலைத்தவிர, இவர் ஒரு ஊட்டச்சத்து நிபுணராக வணிகத்தை மேற்கொண்டுள்ளார். மேலும் உலகளவில் நிகழ்ச்சிகளை வழங்குகிறார். [4]

குறிப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மே_மஸ்க்&oldid=2887746" இருந்து மீள்விக்கப்பட்டது