மைக்கேல் ஸ்கிரிவென்

மைக்கேல் ஸ்கிரிவென் 1928 ல் இங்கிலாந்தில் பிறந்த ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்தவர். இவர் பல்துறை நிபுணராகவும் கல்வியியல் நிபுணராகவும் விளங்கினார். இவருடைய மிகச் சிறந்த பங்களிப்பு மதிப்பீட்டின் கோட்பாடு மற்றும் நடைமுறைகள் ஆகும்.[1]

அறிவார்ந்த பங்களிப்புத் துறைகள் தொகு

  • தத்துவம்
  • உளவியல்
  • ஆய்வு சிந்தனை
  • கணிதம்
  • மதிப்பீடு

நிரல் மதிப்பீட்டிற்கான பட்டியலுக்கான பங்களிப்பு தொகு

மைக்கேல் ஸ்கிரிவென் நிரல் மதிப்பீட்டிற்கான பட்டியலைக் கண்டுபிடித்தார்.அதை வைத்து இன்று தர ஆய்வுகளிலும் தரவு கள ஆய்வுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

தமிழ்நாட்டில் முழுமையான மற்றும் தொடர்ச்சியான மதிப்பீடு தொகு

தமிழ்நாட்டில் அரசாணை 143 நாள்:19.09.2011 ன் படி 2012-13 ஆம் கல்வியாண்டில் முப்பருவ முறையில் முழுமையான மற்றும் தொடர்ச்சியான மதிப்பீடு ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை செயல்படுத்தப்படும். 2013-14 ஆம் கல்வியாண்டில் ஒன்பதாம் வகுப்பில் செயல்படுத்தப்படும். 2015ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பில் செயல்படுத்தப்படும் என்று அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை முப்பருவமுறையில் இந்த கற்பித்தல் மதிப்பீட்டு முறை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த முறையில் வளரறி மதிப்பீடு மற்றும் தொகுத்தறி மதிப்பீட்டு முறைகள் உள்ளன. இந்த மதிப்பீட்டு முறைகளை உலகுக்கு வெளிக் கொண்டு வந்தவர் மைக்கேல் ஸ்கிரிவென் ஆவார்.

இடைநிலை ஆய்வு தொகு

மைக்கேல் ஸ்கிரிவென் இடைநிலை ஆய்வில் குறிப்பிடத்தக்க வெளியீடுகளைச் செய்துள்ளார். இடைநிலை ஆய்வில் மதிப்பீட்டில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். கணினி ஆய்வுகள், தொழில்நுட்பம் மற்றும் மதிப்பீடு போன்ற பல்வேறு துறைகளில் 400 க்கும் மேற்பட்ட வெளியீடுகளை முடித்துள்ளார்.

மேற்கோள்கள் தொகு

  1. E. Jane Davidson (2005). Evaluation Methodology Basics. Sage. பக். xiii. https://archive.org/details/evaluationmethod0000davi. "...the pioneering work of Scriven on the conceptualization of evaluation's unique logic and methodology has provided a solid theoretical foundation for what I have attempted here..." 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மைக்கேல்_ஸ்கிரிவென்&oldid=3739670" இலிருந்து மீள்விக்கப்பட்டது