மைக்ரோசாப்ட் சீக்குவல் வழங்கி

மைக்ரோசாப்ட் சீக்குவல் சர்வர் மைக்ரோசாப்ட்டினால் விருத்தி செய்யப்பட்ட தொடர்புடைய தரவுத் தள முகாமைத்துவ மென்பொருள் ஆகும். இதன் பிரதான வினவல் மொழியாவன டீ-சீக்குவல், எண்டிட்டி சீக்குவல், ஆன்சி சீக்குவல் ஆகும். ஓர் வாங்கிக் (கிளையண்ட்) இந்தான கட்டமைபுள்ள வினவல் மொழியில் விடுக்கப்படும் வினவலானது வாங்கிக் கணினிக்கு அனுப்பட்டு அங்கேயே வினவல்கள் கையாளப்படும். கணினியில் சீக்குவல் சர்வர் ஓர் வாங்கி வழங்கித் (சர்வர்) தத்துவத்தில் உருவாக்கப்பட ஓர் வழங்கி (சர்வர்) மென்பொருளாகும். இதற்கு மாறாக மைக்ரோசாப்ட் அக்ஸஸ் மென்பொருள் கோப்புமுறையில் அமைந்த தரவுத் தளமாகும்.

மைக்ரோசாப்ட் சீக்குவல் சர்வர்
உருவாக்குனர்மைக்ரோசாப்ட்
அண்மை வெளியீடுசீக்குவல் சர்வர் 2008 R2 (10.50.1600.1) / ஏப்ரல் 21 2010 (2010-04-21), 5355 நாட்களுக்கு முன்னதாக
மொழிசி, சி++
இயக்கு முறைமைமைக்ரோசாப்ட் விண்டோஸ்
மென்பொருள் வகைமைதொடர்புடைய தரவுத் தள முகாமைத்துவம்RDBMS
உரிமம்மைக்ரோசாப்ட் பயனர் உரிம ஒப்பந்தம்
இணையத்தளம்www.microsoft.com/sqlserver

வரலாறு

தொகு
சீக்குவல் சர்வர் வெளியீட்டுச் சரித்திரம்
பதிப்பு தேதி/வருடம் வெளியீட்டுப் பெயர் சூட்சுமப் பெயர்
1.0
(OS/2)
1989 சீக்குவல் சர்வர் 1.0 -
4.2
அக்டோபர் 1992 சீக்வல் சர்வர் 4.2 -
4.21
(WinNT)
1993 சீக்குவல் சர்வர் 4.21 -
6.0 1995 சீக்குவல் சர்வர் 6.0 SQL95
6.5 1996 சீக்குவல் சர்வர் 6.5 ஹைட்ரா (Hydra)
7.0 1998 சீக்குவல் சர்வர் 7.0 ஸ்பினிக்ஸ் (Sphinx)
- 1999 சீக்குவல் சர்வர் 7.0
OLAP Tools
பிளேட்டோ (Plato)
8.0 2000 சீக்குவல் சர்வர் 2000 Shiloh
8.0 2003 சீக்குவல் சர்வர் 2000
64-பிட் பதிப்பு
லிபேட்டி (Liberty)
9.0 2005 சீக்குவல் சர்வர் 2005 யுகொன் (Yukon)
10.0 2008 சீக்குவல் சர்வர் 2008 கட்மாய்

மைக்ரோசாப்ட் சீக்குவல் சர்வரின் 7.0 இற்கு முந்தைய பதிப்பானது சைபேசு சீக்குவல் சர்வரினைப் பின்பற்றியதாகும். ஆரம்பத்தில் எண்டபிறைஸ் தரவுத் தளங்களை உருவாக்கிய ஆரக்கிள், ஐபிஎம் உடன் போட்டியிட வேண்டிய நிர்பந்திக்கப்பட்டதால் மைக்ரோசாப்ட் சைபேசுவுடன் கூட்டமைப்பு வைத்துக்கொண்டது. பின்னர் சைபேசு உடனும் போட்டியிடும் வண்ணம் மைக்ரோசாப்ட் சீக்குவல் சர்வர் வளர்ச்சியடைந்தது. ஏறத்தாழ 1989 இல் சைபேசு ஆஷன்-டேட் மைக்ரோசாப்ட் ஆகிய மூன்று நிறுவனங்களும் இணைந்து ஓஎஸ்/2 இயங்குதளத்திற்கான முதலாவது தரவுத்தளமான சீக்குவல் சர்வர் 1.0 இனை உருவாக்கினர். இது யுனிக்ஸ் விஎம்எஸ் இயங்குதளத்திற்கான சைபேசுவின் சீக்குவல் சர்வரினை ஒத்திருந்தது. 1992 இல் மைக்ரோசாப்ட் சீக்குவல் சர்வர் 4.21 வெளிவந்தது. மைக்ரோசாப்ட் சீக்குவல் சர்வர் 4.21 யுனிக்ஸ் இயங்குதளத்திற்கான சைபேசு சீக்குவல் சர்வர் 4 ஐ ஒத்ததாகும். இது மைக்ரோசாப்ட் ஓஎஸ்/2 இயங்குதளத்தில் 1.3 ஆம் பதிப்புடன் சேர்த்து விநியோகிக்கப்பட்டது. பின்னர் மைக்ரோசாப்ட் விண்டோஸ் எண்டி 3.1 இற்கான சீக்குவல் சர்வர் 4.1 ஐ வெளிவிட்டது. மைக்ரோசாப்ட் சீக்குவல் சர்வர் 6.0 முதன்முதலாக சைபேசுவின் எந்த வழிகாட்டலும் இன்றி தனியே மைக்ரோசாப்ட்டினால் வடிவமைக்கப்பட்டிருந்தது. மைக்ரோசாப்ட் சீக்குவல் சர்வர் 6 ஆம் பதிப்பில் இருந்தே Replication என்ற வசதி அறிமுகம் செய்யப்பட்டது.

மைக்ரோசாப்ட் சீக்குவல் சர்வர் 6.5 இல் பல புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்படது. வினைத்திறன் காண் சோதனைகளில் (Benchmark) இப்பதிப்பானது குறைவாகவே மதிப்பிடப்பட்டது. இப்பதிப்பானது விண்டோஸ் எண்டி 4.0 ஐ ஆதரிக்கும் வகையில் வெளியிடப்பட்டது.

விண்டோஸ் எண்டி வெளிவந்த காலப்பகுதியில் சைபேசுவும் மைக்ரோசாப்டும் தனித்தனியே தமக்கான பாணியில் வடிவமைப்பு மற்றும் சந்தைப்படுத்தலை மேற்கொண்டிருந்தனர். மைக்ரோசாப்ட் விண்டோஸ் எண்டி இயங்குதளங்களிற்கான சீக்குவல் சர்வரின் முழு உரிமையையும் பெற்றுக்கொள்ள முயன்றது. இதனால் ஏற்பட்ட குழப்பத்தைத் தவிர்க்கும் முகமாக சைபேசு அவர்களது தரவுத் தளத்திற்கு அடப்டிவ் சர்வர் எண்டபிறைஸ் என்றவாறு பெயர்மாற்றிக் கொண்டனர். 1994 ஆம் ஆண்டுவரை மைக்ரோசாப்டின் சீக்குவல் சர்வரின் நிறுவலானது மூன்று சைபேசுவின் பதிப்புரிமைக் குறிப்புக்களைக் கொண்டிந்தது.

சீக்குவல் சர்வர் 7.0 முதன்முதலாக சைபேசுவின் நிரலாக்கம் இன்றி மீளவும் மைரோசாப்டினால் உருவாகப்பட்ட மூலநிரல்களைக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது. இதுவே முதலாவது வரைகலை இடைமுகத் தரவுத் தளமும் ஆகும். இதே பாணியை சீக்குவல் சர்வர் 2000 பிந்தொடர்ந்தது. சீக்குவல் சர்வர் 2000 முதன்முதலாக இண்டெல் ஐடானியம் 64பிட் பதிப்பினை ஆதரிக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டது.

8 வருடங்களாக இதன் முன்னைய பதிப்புக்களை (சீக்குவல் சர்வர் 2000) விட வினைத்திறனாக, ஒருங்கிணைந்த விருத்திச் சூழல் உள்ளதாக சீக்குவல் சர்வர் 2005 உருவாக்கப்பட்டது.

சீக்குவல் சர்வர் 2005

தொகு

சீக்குவல் சர்வர் 2000 இன் வழிவந்த சீக்வல் சர்வர் 2005 அக்டோபர் 2005 இல் வெளிவந்தது. இது நேரடியாகவே எக்ஸ் எம் எல் தரவுகளைக் கையாளும் வசதியைக் கொண்டிருந்தது.

நிறுவல் மேம்படுத்தல்கள்

தொகு

இதன் நிறுவலானது மைக்ரோசாப்ட் நிறுவல்களூடாக (msi) ஒவ்வொரு பாகத்தினையும் தனித்தனியே நிறுவும் வண்ணம் முன்னைய பதிப்புக்களை விட சிறப்பாக வடிவமைக்கப்படுள்ளது. அத்துடன் ஒவ்வொரு பாகங்களும் தனித்தனியே வழுவை பதிவுசெய்துகொள்ளும் (error log) வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு கணினிகளுக்கும் இலகுவாக நிறுவலை மேற்கொள்ளும் வண்ணம் தானியங்கி நிறுவல்கள் (Remote Installation) உம் உள்ளடக்கப்பட்டுள்ளது. தேவையான கணினியின் மென்பொருட் பாகங்களை தனித்தனியே அலசி ஆராய்ந்த பின்னரே நிறுவலை ஆரம்பிக்கின்றது.

பல்வேறுபட்ட பதிப்புக்கள்

தொகு

இதன் எண்டபிறைஸ் பதிப்பில் செயலிகளுக்கோ(Processor) நினைவகத்திற்கோ (Memory) எந்தவொரு கட்டுப்பாடும் கிடையாது அதாவது நீங்கள் விரும்பும் எத்தனை செயலிகள் உள்ள கணினியிலும் எவ்வளவு தேவையான நினைவகத்திலும் நிறுவிப் பாவித்துக் கொள்ளலாம். நியமப் பதிப்பு எனப்பொருள்படும் ஸ்டாண்டர் எடிசன் பதிப்பானது ஆகக்கூடியதாக 4 செயலிகளை ஆதரிக்கும் இதற்கு நினைவகத்தைக் கையாளுவதில் எந்த வொரு கட்டுப்பாடும் கிடையாது. விண்டோஸ் 64 பிட் இயங்குதளத்திற்கெனவே உருவாகபப்ட்ட மைக்ரோசாப்ட் சீக்குவல் 64பிட் பதிப்பானது எண்டர்பிறைஸ் மற்றும் ஸ்டாண்டட் பதிப்புக்களில் கிடைக்கின்றது.வேர்க்குறூப் பதிப்பில் பிஸ்னஸ் இண்டெலிஜன்ஸ் டெவலொப்மெண்ட் ஸ்ரூடியோ உள்ளடக்கப்படவில்லை. வேர்க்குறூப் பதிப்பு 2 செயலிகளையும் ஆகக்கூடுதலாக 3 ஜிகாபைட் (முன்னைய வெளியீடுகளை விடக்கூடுதலாக 1 ஜிகாபைட்) அளவிலான நினைவகத்தையும் ஆதரிக்கின்றது. விரைவான பதிப்பு எனப்பொருள்படும் எக்ஸ்பிரஸ் எடிசன் பதிப்பானது முன்னைய மைக்ரோசாப்ட்டின் தரவுத்தள எந்திரம் எனப்பொருள்படும் மைக்ரோசாப்ட் டேட்ட பேஸ் என்ஜினை ஒத்ததாகும். வேர்க்குறூப் பதிப்பு, எஸ்பிரஸ் பதிப்புக்கள் 32பிட் ஆதலினால் 64பிட் இயங்குதளத்திற்கான ஆதரவானது விண்டோஸில் இருக்கும் விண்டோஸ் தொழில்நுட்பத்துக்கூடாகவே ஆதரவளிக்கப்படுகின்றது. எக்ஸ்பிரஸ் பதிப்பில் சீக்குவல் சர்வர் மனேஜ்மண்ட் ஸ்ரூடியோ உள்ளடக்கபடவில்லை. இது இலவசான சீக்குவல் பதிப்பாதலினால் கற்பதற்கு ஏற்புடையதாகும்.

மேம்படுத்தல்கள்

தொகு

எதிந்திர மேம்படுத்தல்கள்

தொகு

சீக்குவல் சர்வர் 2000 சேவைப் பொதி 3 உம் சீக்குவல் சர்வர் 7 சேவைப் பொதி 4 உம் இருந்தால் இருந்தால் தரவுத் தளத்தை நேரடியாக மேம்படுத்தலாம். சீக்குவல் சர்வர் 6.5 இருந்தால் முதலில் சீக்குவல் சர்வர் 7 ஆக மேம்படுத்திவிட்டு பின்னர் சீக்குவல் சர்வர் 2005 ஆக மேம்படுத்திக் கொள்ளலாம். சீக்குவல் சர்வர் 2005 மேம்படுத்தல் ஆலோசகரை (Upgrade Advisor)மைக்ரோசாப்ட் இணையத்தளத்தில் இருந்து பதிவிறக்கிப் பாவிக்கலாம்.[1]. இந்த மேம்படுத்தல்கள் விரைவாகச் செய்யக்கூடியதாதலின் (ஏறத்தாழ 15 நிமிடங்கள் வரை எடுக்கலாம்) வணிகச்சூழலில் நேரவிரையம் மிகவும் குறைவானதாகும்.

மென்பொருட் பகுதிகளை மேம்படுத்தல்=

தொகு

பகுப்பாய்வுச் சேவைகள் பகுப்பாய்வுச் சேவைகள் மேம்படுத்தல்கள் மூலம் நிறுவிக் கொள்ளலாம்.

மென்பொருட்தேவைகள்

தொகு

இயங்குதளத் தேவைகள்

தொகு
  1. விண்டோஸ் சர்வர் 2003 (ஸ்ராண்டட், எண்டபிறைஸ், டேட்டா சென்டர், எம்பெடட்).
  2. விண்டோஸ் சர்வர் 2003 வெப் எடிசன்
  3. விண்டோஸ் எக்ஸ்பி ஹோம், புரொபெஷனல், மீடியா செண்டர் மற்றும் எம்பெடட் சேவைப் பொதி 1 உம் அதற்கு மேற்பட்டதும்.
  4. விண்டோஸ் 2000 புரொபெஷனல், சர்வர், அட்வான்ஸ் சர்வர், டேட்டா செண்டர் சேவைப் பொதி 4.

ஏனைய மென்பொருட்கள்

தொகு
  1. இண்டநெட் எக்ஸ்புளோளர் 6 சேவைப் பொதி 1 உம் அதற்கு மேலும்.
  2. இண்டநெட் இன்பமேஷன் சர்வீசஸ் உம் அதற்கு மேற்பட்டதும்.
  3. மைக்ரோசாப்ட் டாட்.நெட் 2.0 சட்டம் (framework)
  1. http://www.microsoft.com/downloads/details.aspx?familyid=1470e86b-7e05-4322-a677-95ab44f12d75&displaylang=en