மைக்ரோசாப்ட் மேப்பாயிண்ட்
மைக்ரொசாப்ட் மேப்பாயிண்ட் மென்பொருளானது மைக்ரோசாப்டினால் தேசப்படங்களை பார்த்து மாற்றங்களைச் செய்து மற்றும் தேசப்படங்களை ஒருங்கிணைக்கும் மென்பொருளாகும். இந்த புவியியற் தகவற் தொழில் நுட்ப மென்பொருளானது ஏற்கனவே இருக்கின்ற தேசப்படங்களுடன் புவியியல் ரீதியாக ஏற்கனவே இருக்கின்ற தகவல்களைச் சேர்த்துக் கொள்ளவும் இயலும்,
வர்தகப் பாவனையாளரையே இந்த மென்பொருளானது இலக்கு வைத்தபோதும் போட்டியில் மிகவும் குறைந்தளவே இம்மென்பொருளானது பாவிக்கப் படுகின்றது. மைக்ரோசாப்ட் மேப்பாயிண்ட் மைக்ரோசாப்ட் ஆபிஸ் மென்பொருளுடன் குறிப்பாக எக்ஸ்ஸெல்லுடன் ஒருங்கிணைந்து வேலைசெய்கின்றது. அத்துடன் பிரயோகங்களுக்கான விஷ்வல் பேசிக்கும் பாவிக்கப்படுகின்றது.
மேப்பாயிண்ட் தொழில்நுட்பமானது
- இறுதிப் பாவனையாளருக்கு
- மேப்பாயிண்ட் வட அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பா விற்கு,
- தானகவே (ஆட்டோ) வழிகாட்டுதல் (ரூட்) (மேற்கு ஐரோப்பாவிற்கு)
- மைக்ரோசாப்ட் பாதைகளும் பயணங்களும்
- என்காற்றா கலைக்களஞ்சியம்
- இணையமூடான சேவைகள்
- மேப்பாயீண்ட் இணையசேவை
- மைக்ரோசாப் தேசப்படச் சேவை
- எம் எஸ் என் மாய உலக சேவை
மைக்ரோசாப்ட் மேப்பாயிண்ட் ஆண்டுதோறும் மேம்படுத்தப்பட்டு வருக்கின்றது. இதன் பிந்தைய பதிப்பு மேப்பாயிண்ட் 2006. இம்மென்பொருளானது மைக்ரோசாப்ட் விண்டோஸ் இயங்குதளத்திற்கு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் வசதி குறைவான பதிப்பு விண்டோஸ் CE மற்றும் பாக்கட் கணினி, ஸ்மாட்போன் (Smart phone) மற்றும் விண்டோஸ் ஆட்டோமேட்டிவ் போன்றவற்றிலும் பயன் படுத்தப் படுகின்றது.
இவற்றையும் பார்க்கவும்
தொகு
வெளியிணைப்புக்கள்
தொகு- Microsoft MapPoint Review பரணிடப்பட்டது 2016-11-15 at the வந்தவழி இயந்திரம்
- MP2K Magazine, மேப்பாயிண்ட் தொழில்நுட்பத்திற்கான சுயாதீன சஞ்சிகை
- GpsPasSion Forums, mes பயனர்களின் அனுபவங்களைப் பகிரும், செய்திகளை வழங்கும் தேசப்பட மென்பொருட்களை மதிப்பீடு பூமியில் இடத்தைக் காட்டும் கருவிகள் போன்றவிடயங்களை அலசும் இணையம்.