மைசூர் பாகு

மைசூர் பாகு அல்லது மைசூர் பாக் என்னும் இனிப்பு பண்டம், தென்னிந்தியாவில் மைசூர் இராச்சியம் என
(மைசூர்பாகு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மைசூர் பாகு அல்லது மைசூர் பாக்கு (Mysore pak) என்னும் இனிப்பு பண்டம், தென்னிந்தியாவில் மைசூர் இராச்சியம் என முன்னர் அழைக்கப்பட்ட இன்றைய கர்நாடக மாநிலப் பகுதியில் தோன்றியது. இப்போது இது இந்தியாவின் பல பகுதிகளிலும், இந்தியர் வாழும் பிற இடங்களிலும் அறியப்பட்ட ஒரு இனிப்பு வகையாக உள்ளது.

மைசூர் பாக்கு
தொடங்கிய இடம்இந்தியா
பகுதிதென்னிந்தியா
முக்கிய சேர்பொருட்கள்நெய், சர்க்கரை, கடலை மாவு

வரலாறு

தொகு

காக்கசூரா மட்டப்பா என்பவர் மைசூர் அரசவையில் சமையல் கலைஞராக இருந்தார்.உணவு உண்டபின் அரசர் இனிப்பு எடுத்துக்கொள்வது வழக்கம். ஒரு முறை அரசவை உணவுக் கூடத்தில் இனிப்பு செய்ய பொருட்கள் இல்லாததால் முறையே சக்கரை,கடலை மாவு,நெய் ஆகியவற்றை பாகாக காய்ச்சினார்.அப்பண்டம் அரசரிடம் எடுத்துச் செல்வதற்குள் கட்டியாகிவிட்டது. அரசருக்கும் சுவை பிடித்து போய் இப்பண்டத்தின் பெயர் என்னவென்று கேட்க "நளபாக்"என்று சமையல் கலைஞர் பதில் அளித்தார்.மைசூர் அரண்மனையில் செய்யப்பட்டதால் இதற்கு மைசூர் பாகு என்று நான்காம் கிருஷ்ணராஜ உடையார் பெயர் சூட்டினார். [1]

சான்றுகள்

தொகு

இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மைசூர்_பாகு&oldid=3877055" இலிருந்து மீள்விக்கப்பட்டது