மைசூர் உமாதேவி
உமாதேவி (Umadevi) சாளுக்கியர் ஆட்சிக் காலத்தில் மைசூர் படைத்தலைவராக இருந்த இரண்டாம் வீரபல்லாலரின் மனைவிகளில் ஒருவராவார். [1] இவருடைய காலம் கி.பி 1150 முதல் 1218 வரையுள்ள காலமாகும்.
1150 ஆம் ஆண்டில் பிறந்த உமாதேவி இருபத்தி இரண்டு வயதில் இரண்டாம் வீரபல்லாலரின் மனைவிகளில் ஒருவரானார்.[2]. சோழமகாதேவி இரண்டாம் வீரபல்லாலரின் முதல் மனைவியாக இருந்தார். குறைந்தபட்சம் இரண்டு சந்தர்ப்பங்களில் எதிரிகளான சாளுக்கியர்களுக்கு எதிராக மைசூர் படைகளுக்கு உமாதேவி தலைமை தாங்கியுள்ளார். [3] நாட்டின் நிர்வாக செயல்பாடுகளில் உமாதேவி பங்கேற்பதை பல்லாலர் அனுமதித்தார். 1190 ஆம் ஆண்டில் கல்யாணியில் (இன்றைய பீதர் நகருக்கு அருகில்) சாளுக்கியர்களுக்கு எதிராக ஒய்சாளர்கள் போரிட்டபோது ஒய்சாளர்களின் வெற்றியில் உமாதேவி பெரும்பங்கு வகித்தார். [4] 1218 ஆம் ஆண்டு தனது கணவர் இறந்ததைத் தொடர்ந்து இந்திய நாட்டின் பாரம்பரியமான சதி என்ற உடன்கட்டை ஏறும் சடங்கிற்காக தற்கொலை செய்து கொண்டார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Women in power
- ↑ peoplepill.com. "About Veera Ballala II: Hoysala king". peoplepill.com. பார்க்கப்பட்ட நாள் 2021-06-10.
{{cite web}}
: Text "Biography, Facts, Career, Wiki, Life" ignored (help) - ↑ Shek Ali, Dr. B., ed., The Hoysala Dynasty, Mysore, 1977.
- ↑ Derrett, J. D. M., The Hoysalas, London, 1957.