மைசூர் நகர்புற மேம்பாட்டுக் குழுமம்

மைசூர் நகர்புற மேம்பாட்டு குழுமம் (Mysore Urban Development Authority (சுருக்கமாக:MUDA), இந்தியாவின் கர்நாடகம் மாநிலத்தின் மைசூர் நகர்புற கட்டமைப்பு வளர்ச்சிக்கான நிறுவனம் ஆகும்.[1]கர்நாடக அரசு 16 மே 1988 அன்று இந்நிறுவனத்தை நிறுவியது. [2][3]

மைசூர் நகர்புற மேம்பாட்டு குழுமம் (MUDA)
வகைநகர்புற மேம்பாட்டு நிறுவனம்
நிறுவுகை16 மே 1988
(36 ஆண்டுகள் முன்னர்)
 (1988-05-16)
தலைமையகம்மைசூர், கர்நாடகம், இந்தியா
சேவை வழங்கும் பகுதிமைசூர் மாவட்டத்திலுள்ள மைசூர், ஹூடஹள்ளி, சிறீராமபுரா, போகடி, கடகோலா, ரமணஹள்ளி பகுதிகள் மற்றும் மாண்டிய மாவட்டத்திலுள்ள நஞ்சன்கூடு & சிறீரங்கப்பட்டினப்பட்டினம் தாலுகா பகுதிகள்
முதன்மை நபர்கள்தலைவர் & ஆணையாளர்
இணையத்தளம்http://www.mudamysore.gov.in/

மைசூர் நகர்புற மேம்பாட்டு நிறுவனம், மைசூர் நகரத்துடன் ஹூட்டஹள்ளி, சிறீராமபுரா, போகாடி, கடக்கோலா, ரமணஹள்ளி மற்றும் சில புறநகர் பகுதிகளைக் கொண்டு, 1,060,120 மக்கள் தொகையுடன், 286 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு அளவிற்கு விரிவாக்கம் செய்தது.[4][5][6][7][8][9][10]மைசூர்-நஞ்சன்கூடு பெருநகரத்தை 509 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு அளவில், 2031ஆம் ஆண்டிற்குள் விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது

வளர்ச்சித் திட்டங்கள்

தொகு

மைசூர் நகர்புற மேம்பாட்டு நிறுவனம் (MUDA) பெருநகர மைசூர் கட்டமைப்பிற்கு கீழ் கண்ட திட்டங்களை செயல்படுத்த உள்ளது. [11]

  • வெளிப்புற சுற்றுச் சாலை
  • ஹிங்கல் பறக்கும் பாலம்
  • விஜயநகர்
  • ஜெ பி நகர்
  • தேவனூர் மனைத் திட்டம்
  • சத்ஹள்ளி மனைத் திட்டம்
  • கியாத்மாரன ஹள்ளி மனைத் திட்டம்
  • ஆர். டி. நகர்

துறைகள்

தொகு

மைசூர் நகர்புற மேம்பாட்டு நிறுவனத்திற்கு கீழ் கண்ட அரசுத் துறைகள் செயலாற்றுகிறது.[12]

  • நிலம் கையகப்படுத்தும் துறை
  • நகர திட்டமிடல் துறை
  • பொறியல் துறை
  • மனை ஒதுக்கீடு & பொது நிர்வாகத் துறை
  • நிதித் துறை
  • சட்டத் துறை
  • மக்கள் தொடர்புத் துறை

மைசூர் நகர்ப்புற ஒருங்கிணைப்பு மற்றும் பெருநகரப் பகுதி

தொகு

மைசூர் பெருநகரப் பகுதியில் மைசூர், நஞ்சன்கூடு மற்றும் மைசூர் மாவட்டத்தின் நஞ்சன்கூடு தாலுகா பகுதிகள் மற்றும் மண்டியா மாவட்டத்தின் சிறீரங்கப்பட்டினம் தாலுகாவின் பகுதிகள் ஒருங்கிணைக்கப்பட உள்ளது.

2031ஆம் ஆண்டிற்குள் மைசூர் நகர்புற மேம்பாட்டு பகுதி 509 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும்; 1,696,577 மக்கள் தொகையும் கொண்டிருக்கும்.[13]

படக்காட்சிகள்

தொகு

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Welcome to the Official Website of MUDA - Mysuru Urban Development Authority". www.mudamysore.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2020-12-12.
  2. "About MUDA - Mysuru Urban Development Authority". www.mudamysore.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2020-12-12.
  3. "Mysuru Urban Development Authority". www.mudamysore.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2020-12-12.
  4. "Hootagalli CMC and four Town Panchayats formed: Govt. issues Gazette notification". Star of Mysore (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-11-26. பார்க்கப்பட்ட நாள் 2020-12-06.
  5. Andolana (2020-12-05). "ವಿಸ್ತರಣೆಗೊಂಡಿತು ಮೈಸೂರು ನಗರ ವ್ಯಾಪ್ತಿಯ ಗಡಿ". ANDOLANA (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2021-01-22. பார்க்கப்பட்ட நாள் 2020-12-06.
  6. "Gazette Notification 1" (PDF). Archived from the original (PDF) on 2020-12-06.
  7. "Gazette Notification 2" (PDF). Archived from the original (PDF) on 2021-04-15.
  8. "Gazette Notification 3" (PDF). Archived from the original (PDF) on 2021-04-15.
  9. "Gazette Notification 4" (PDF). Archived from the original (PDF) on 2020-12-06.
  10. "Gazette Notification 5" (PDF). Archived from the original (PDF) on 2020-12-06.
  11. "MUDA Projects - Mysuru Urban Development Authority". www.mudamysore.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2020-12-12.
  12. "MUDA Departments". www.mudamysore.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2020-12-12.
  13. "MUDA Mysore Urban Development Authority Master Plan 2031". www.mudamysore.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2020-12-12.

வெளி இணைப்புகள்

தொகு