மைனகுரி தொடருந்து விபத்து
மைனகுரி தொடருந்து விபத்து (Maynaguri train derailment) 2022 ஆம் ஆண்டு சனவரி மாதம் 13 ஆம் நாள் இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் நிகழ்ந்தது.[1][2] அசாம் மாநிலம் நோக்கி சென்று கொண்டிருந்த கவுகாத்தி - பிகானீர் விரைவுத் தொடருந்து தடம் புரண்டு ஏற்பட்ட விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர் 50 பேர் வரை காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகின.[3][4][5] 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பீகாரில் நடந்த சீமாச்சல் விரைவுத் தொடருந்து விபத்திற்குப் பிறகு 2022 ஆம் ஆண்டில் நடந்துள்ள முதல் தொடருந்து தடம் புரண்ட விபத்து மைனகுரி விபத்தாகும்.[6]
நாள் | 13 சனவரி 2022 |
---|---|
நேரம் | மாலை 5 மணி (இ.சீ.நே) |
அமைவிடம் | தோமாகானி, மைனகுரி, சல்பைகுரி, மேற்கு வங்காளம் |
புவியியல் ஆள்கூற்று | 26°33′58″N 88°48′32″E / 26.566226°N 88.8089273°E |
வகை | தடம் புரளல் |
இறப்புகள் | 9 |
காயமுற்றோர் | 50 |
விபத்து
தொகுஇராசத்தானில் இருந்து அசாம் மாநிலத்திற்கு கவுகாத்தி - பிகானீர் இடையே செல்லும் விரைவுத் தொடருந்து சென்று கொண்டிருந்தபோது[4] மாலை 5 மணியளவில் மேற்கு வங்காளம் தோமாகானி பகுதிக்கு அருகே எதிர்பாராதவிதமாக தொடருந்தின் 12 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.[4][7][8]
நடவடிக்கை
தொகுவிபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு தலா ₹5 லட்சமும், பலத்த காயமடைந்த பயணிகளுக்கு தலா ₹1 லட்சமும் வழங்கப்படும் என இந்திய இரயில்வே அமைச்சர் அசுவினி வைசுணவ் அறிவித்தார்.[9] மேலும் சிறிய காயங்கள் ஏற்பட்ட பயணிகளுக்கு ₹25,000 வழங்குவதாகவும் இவர் அறிவித்தார்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Bikaner-Guwahati Express train derails in Bengal, 3 dead". The Indian Express. indianexpress.com. 13 January 2022. https://indianexpress.com/article/cities/kolkata/guwahati-bikaner-express-derails-domohani-7721542/.
- ↑ "மேற்கு வங்கத்தில் ரயில் தடம் புரண்ட சம்பவத்தில் 5 பேர் பலி - தமிழில் செய்திகள்". BBC News தமிழ். பார்க்கப்பட்ட நாள் 2022-01-14.
- ↑ "Death toll rises to 5 in Bikaner-Guwahati train accident". Times of India. timesofindia.indiatimes.com. 13 January 2022. https://timesofindia.indiatimes.com/india/bikaner-guwahati-express-derailed/liveblog/88866497.cms.
- ↑ 4.0 4.1 4.2 4.3 "Five dead as Guwahati-bound Bikaner Express derails in WB's Jalpaiguri; rescue ops on". India Today. www.indiatoday.in. 13 January 2022. https://www.indiatoday.in/india/story/guwahati-patna-bikaner-express-derails-jalpaiguri-1899696-2022-01-13.
- ↑ "Bikaner-Guwahati Express derails: 5 dead, NDRF teams rushed to spot". Hindustan Times. www.hindustantimes.com. 13 January 2022. https://www.hindustantimes.com/india-news/bikanerguwahati-express-gets-derailed-in-bengal-casualty-feared-101642076460572.html.
- ↑ Sweety Kumari; Atri Mitra; Tora Agarwala (January 14, 2022). "7 killed, over 40 injured as train to Guwahati derails in north Bengal". indianexpresss.com. Guwahati, Assam; Kolkata, West Bengal: இந்தியன் எக்சுபிரசு. பார்க்கப்பட்ட நாள் January 14, 2022.
- ↑ "লাইনেই কি ফাটল! ময়নাগুড়িতে উল্টে গেল বিকানের এক্সপ্রেস, বহু হতাহতের আশঙ্কা". www.anandabazar.com. 13 January 2022. https://www.anandabazar.com/west-bengal/guhahati-express-derailed-at-maynaguri-dgtld/cid/1323379.
- ↑ "15631/Barmer - Guwahati Express (PT)". பார்க்கப்பட்ட நாள் 13 January 2022.
- ↑ "மே. வங்கத்தில் ரயில் விபத்து 5 பேர் பலி; 45 பேர் காயம்". Dinamalar. 2022-01-13. பார்க்கப்பட்ட நாள் 2022-01-14.