மைன்றீ லிமிட்டெடு (ஒலிப்பு மைன்ட்ரீ லிமிட்டெட், முன்பு மைன்றீ கன்சல்டிங் லிமிட்டெடு (முபச532819 ) என்பது ஒரு நடுத்தர அளவான அனைத்துலகத் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த ஆலோசனை வழங்குதலுக்கும் செயல்படுத்துதலுக்குமான நிறுவனம் ஆகும். இது இரண்டு பிரிவுகளை செயல்படுத்துகிறது: 1. தயாரிப்பு பொறியியல் சேவைகள் 2. தகவல் தொழில்நுட்ப சேவைகள்.

மைன்றீ லிமிட்.
வகைபொது
நிறுவுகைஆகத்து 18, 1999
தலைமையகம்பெங்களூர், இந்தியா
முதன்மை நபர்கள்சுப்ரோடோ பக்சி
(Chairman)
தொழில்துறைதகவல் தொழில்நுட்பம்
வருமானம்$ 402.6 மில்லியன் USD(2012)
நிகர வருமானம்$ 45.9 மில்லியன் USD(2012)
பணியாளர்11,000 (31 மார்ச் 2012)
இணையத்தளம்www.mindtree.com

தொடக்கம்

தொகு
 
பழைய சின்னம்

1999ல் கேம்ப்ரிட்சு டெக்னாலச்சி பார்ட்னர்சு, இலுசென்ட்டு டெக்னாலச்சீசு மற்றும் விப்ரோ ஆகிய நிறுவனங்களில் பணியாற்றிய 10 தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களால் தொடங்கப்பட்டது. இது தற்போது வாரன், நியூ செர்சி மற்றும் பெங்களூர், இந்தியா ஆகிய இடங்களில் இரட்டை தலைமையகங்களைக் கொண்டுள்ளது. இது இந்தியாவில் மூன்று மேம்பாட்டு மையங்களையும் ஆசியா, ஐரோப்பா மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகிய இடங்களில் 15 அலுவலகங்களையும் கொண்டுள்ளது.

சிறப்பு

தொகு

மைன்றீ ஆனது இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் 18வது இடத்திலும், மொத்தமாக 445வது இடத்திலும் பார்ச்சூன் இந்தியா 500 -இன் 2011ஆம் ஆண்டு பட்டியலில் பட்டியலிடப்பட்டுள்ளது.[1]

குறிப்பிடத்தக்க திட்டம்

தொகு

2010–11 நிதியாண்டில் இந்நிறுவனம், இந்திய அரசின் ஆதர் எனப்படும் பொது அடையாள அட்டைத் திட்டத்திற்கு (UID) மென்பொருள் உருவாக்கம், பராமரிப்பு, ஆதரவு சேவைகள் ஆகியவற்றை வழங்குதலை திட்டமிட்டு பணிபுரிந்து வருகிறது.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "Fortune India 500 complete list" (PDF). Archived from the original (PDF) on 2012-01-03. பார்க்கப்பட்ட நாள் 2012-05-07.
  2. "MindTree News". http://finance.yahoo.com/news/MindTrees-Consolidated-Q1-iw-1096554024.html?x=0&.v=1. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மைன்றீ&oldid=3830113" இலிருந்து மீள்விக்கப்பட்டது