மொசாம்பிக் கால்வாய்

மொசாம்பிக் கால்வாய் (Mozambique Channel) என்பது கை போலத் தோற்றமளிக்கும் இந்தியப்பெருங்கடலின் சிறுபகுதியாகும். மடகாசுக்கருக்கும், மொசாம்பிக்குக்கும் இடையில் 1000 மைல்கள் (1600 கிமீ) நீளமும், குறுக்காக 260 மைல்கள் (419 கிமீ) உடன் விரிந்து செல்கிறது. மொசாம்பிக் கடற்கரையோரத்தில் இதன் அதிகபட்ச ஆழம் 3292 மீட்டர்கள் (10,800 அடிகள்) ஆழத்துடன் சுமார் 143 மைல்கள் (230 கிமீ) தூரம் வரைக்கும் நீண்டிருக்கிறது. இக்கால்வாயின் வடக்குப் பகுதியில் ஒரு வெப்ப நீரோட்டம், தென்னாப்பிரிக்காவின் கிழக்குக் கடற்கரையில் உள்ள அகுலாசு நீரோட்டத்தை நோக்கி பாய்கிறது.

மொசாம்பிக் கால்வாயின் இருப்பிடம்

பரப்புபெல்லைதொகு

பன்னாட்டு நீரியல் வரைவு நிறுவனம் (IHO) மொசாம்பிக் கால்வாயின் பரப்பெல்லையை பின்வருமாறு விவரிக்கிறது:[1]வடக்கு: உரோவுமா ஆற்று முகத்துவாரத்தில் தொடங்கி (10°28′தெ 40°26′கி) கிராண்ட் கொமோர் தீவின் வடமுனை நோக்கி ஒரு கோடாகவும், கொமோரோ தீவின் வடக்கில் இருந்து மடகாசுகரின் வடமுனையான (11°57′தெ 49°17′கி) கேப்டி ஆம்பர் வரையிலும் மொசாம்பிக் கால்வாயின் வடக்கு எல்லை விரிந்து கிடக்கிறது.

கிழக்கு: மடகாசுகரின் மேற்கு கடற்கரை

தெற்கு: கேப் செயிண்ட் மேரி நகரில் தொடங்கி மடகாசுகரின் தென்பகுதி வழியாக பொண்டொ தொ அவுரா (26°53′தெ 32°56′கி). மொசாம்ப்பிக் நாட்டின் தெற்கு பெருநிலப்பகுதி

மேற்கு: தென்னாப்பிரிக்காவின் பெருநிலப்பகுதி என்று சர்வதேச நீரியல் வரைவு நிறுவனம் வரையறை செய்திருந்தாலும் மொசாம்பிக் கால்வாயின் மிகச்சரியான மேற்கு எல்லையாகக் தென்னாப்பிரிக்கக் கடற்கரை கருதப்படுகிறது.

கால்வாயில் உள்ள தீவுகள்தொகு

பிரான்சுதொகு

மொசாம்பிக்தொகு

வரலாறுதொகு

இரண்டாம் உலகப்போரின் மடகாசுகர் போரின் மோதல் மொசாம்பிக் கால்வாய்ப் பகுதியில் நிகழ்ந்தது.

மேற்கோள்கள்தொகு

  1. "Limits of Oceans and Seas, 3rd edition" (PDF). International Hydrographic Organization. 1953. 8 அக்டோபர் 2011 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 7 February 2010 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மொசாம்பிக்_கால்வாய்&oldid=3569024" இருந்து மீள்விக்கப்பட்டது