மொரிசியசு அஞ்சல் அருங்காட்சியகம்

மொரிசியசு நாட்டில் உள்ள ஓர் அருங்காட்சியகம்

மொரிசியசு அஞ்சல் அருங்காட்சியகம் (Mauritius Postal Museum) மொரிசியசு நாட்டின் தலைநகரான போர்ட் லூயிசு நகரில் அமைந்துள்ளது.[1]

மொரிசியசு அஞ்சல் அருங்காட்சியகம்

கட்டடம்

தொகு
 
கட்டடத்தின் பின்புறம்
 
தந்தி நிலையம்

இன்றைய அருங்காட்சியகத்தின் கட்டிடம் 1865 மற்றும் 1870 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் பொது அஞ்சல் அலுவலகமாக கட்டப்பட்டது. நகரின் மையத்தில் உள்ள துறைமுகத்தில் சுங்கத்துறை கட்டத்திற்கு அருகில் அருங்காட்சியகம் அமைந்துள்ளது.[2]

1865 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் நில அளவர் மாரிசனின் மேற்பார்வையின் கீழ் கட்டுமானம் தொடங்கியது. 1868 ஆம் ஆண்டு கட்டடத்தின் முக்கால்வாசிப் பணிகள் நிறைவடைந்தன. மேலும் கட்டடத் திட்டத்தை முழுமையாகக் கட்டி முடிக்க மேலும் இரண்டு ஆண்டுகள் ஆனது. கட்டுமானத்திற்காக £10,000 முதல் £11,000 பவுண்டுகள் வரை பணம் செலவழிக்கப்பட்ட்டது. சுமார் 80 தொழிலாளர்கள் வேலை செய்தனர். அருங்காட்சியகம் அதிகாரப்பூர்வமாக டிசம்பர் 1870 ஆம் ஆண்டு திசம்பர் மாதத்தில் திறக்கப்பட்டது.[2]

விக்டோரியா மகாராணியின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட இந்தியா, இலங்கை, தென்னாப்பிரிக்கா, டிரினிடாட் மற்றும் கயானா போன்ற நாடுகளில் இன்னும் இருக்கும் பொது காலனித்துவ கட்டடங்களின் விக்டோரியன் கட்டிடக்கலைக்கு இந்த கட்டிடம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.[2]

1847 ஆம் ஆண்டு முதல் அஞ்சல் அலுவலகத் தலைமையிடமாக இருந்த அரசு தெருவில் அரசு மாளிகைக்கு அருகில் இருந்த முந்தைய பொது அஞ்சல் அலுவலகத்திற்கு மாற்றாக இது இருந்தது.[2]

21 டிசம்பர் 21 1870 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 21 ஆம் தேதி முதல் இது மொரிசியசின் பிரதான அஞ்சல் நிலையமாக மாறியது. 1877 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் மத்திய தந்தி அலுவலகமும் இக்கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது.[2]

தலைமை அஞ்சல் அலுவலரின் குடியிருப்பும் இக்கட்டத்தில் இருந்தது. 1870 மற்றும் 1890 ஆஅம் ஆண்டுகளில் கட்டப்பட்ட தீவின் 33 கிராமப்புற தபால் நிலையங்களில் இருந்து அஞ்சல் இங்கு வந்தது.[2]

1958 ஆம் ஆண்டில், பிரித்தானிய ஆளுநர் சர் ராபர்ட்டு இசுகாட்டின் கீழ், அரசாங்க அறிவிப்பு எண். 614 இன் படி பட்டியலிடப்பட்ட கட்டிடமாக இது மாறியது. பண்டைய நினைவுச் சின்னங்கள் வாரியம் இதற்கான பரிந்துரையை செய்தது. 2003 ஆம் ஆண்டின் தேசிய பாரம்பரிய நிதிச் சட்டத்தின்படி (சட்டம் எண். 40) மொரிசியசின் தேசிய நினைவுச்சின்னங்கள் இணைக்கப்பட்டதைப் போலவே, 1985 ஆம் ஆண்டின் மொரிசியசின் தேசிய நினைவுச் சின்னங்கள் சட்டமும் கட்டடத்தின் பாதுகாக்கப்பட்ட நிலையை உறுதிப்படுத்தியது.[2]

அருங்காட்சியகம்

தொகு
 
பிட்னி-போவ்சு நிறுவனத்தின் அஞ்சல் இரத்து செய்யும் கருவி

2001 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட அஞ்சல் அருங்காட்சியகம் மொரிசியசு தீவின் அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு வரலாற்றில் காட்சிப்படுத்துகிறது.[3] இருப்பினும், உலகப் புகழ்பெற்ற சிவப்பு மற்றும் நீல மொரீசியசு அஞ்சல் அலுவலக அஞ்சல்தலைகள் இங்கு காட்சிப்படுத்தப்படவில்லை. ஆனால் அருகிலுள்ள புளூ பென்னி அருங்காட்சியகம் இவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மேற்கோள்கள்

தொகு
  1. "Postal Museum". Mauritius Post. 2019-08-26. பார்க்கப்பட்ட நாள் 2022-06-22.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 Peerthum, Satyendra (2012-11-28). "Our Mauritian National Heritage: The Historical & Heritage Value of the General Post Office of Mauritius". Le Mauricien (in பிரெஞ்சு). பார்க்கப்பட்ட நாள் 2022-06-22.
  3. "Postal Museum (Mauritius)". Activities in Mauritius. 2017-11-05. Archived from the original on 2022-06-22. பார்க்கப்பட்ட நாள் 2020-06-22. {{cite web}}: |archive-date= / |archive-url= timestamp mismatch (help)

புற இணைப்புகள்

தொகு