மொரிசியசு வங்கி கோபுரம்
மொரிசியசு வங்கி கோபுரம் (Bank of Mauritius Tower) மொரிசியசு நாட்டின் தலைநகரமான போர்ட் லூயிசு நகரத்தில் அமைந்துள்ள ஒரு வானளாவிய கட்டடமாகும். 22 மாடி கட்டிடமான இது மொரிசியசு வங்கியின் தலைமையகமும் ஆகும். மொரியசு நாட்டின் மிக உயரமான கட்டடம் என்ற சிறப்புக்கு உரிய கட்டடம் ஆகவும் கருதப்படுகிறது. கட்டடத்தின் உயரம் 98 மீட்டர்கள் (321 அடி) ஆகும்.[4] ஆனால் இதன் கூரையை அளவிடும் போது 124 மீட்டர் (407 அடி) உயரம் கொண்டதாகவும் உள்ளது. 16,834 சதுரமீட்டர் அளவுடன் வலுவூட்டப்பட்ட இக்கற்காரை கட்டமைப்பு 2006 ஆம் ஆண்டு மே மாதத்தில் அதன் இறுதி உயரத்தை எட்டியது. போர்ட் லூயிசில் உள்ள மலை உச்சியில் உள்ள கோட்டையில் ஒரு காலத்தில் உயரங்கள் தடைசெய்யப்பட்ட பகுதியில் இக்கோபுரம் கட்டப்பட்டுள்ளது. 183 மீட்டர் (600 அடி} உயரமுள்ள வானூர்தித் துறையின் அலைபரப்பி கோபுரத்தை அடுத்து இதுவே நாட்டின் உயர்ந்த கோபுரமாகும்.
மொரிசியசு வங்கி கோபுரம் Bank of Mauritius Tower | |
---|---|
மொரிசியசு வங்கி கட்டடம் | |
பதிவு உயரம் | |
முந்தியது | மொரிசியசு தொலைதொடர்பு கோபுரம் |
பொதுவான தகவல்கள் | |
வகை | வர்த்தகம் (அலுவலகம்) |
கட்டிடக்கலை பாணி | நவீன கட்டிடக்கலை |
இடம் | போர்ட் லூயிசு, மொரிசியசு |
ஆள்கூற்று | 20°09′43″S 57°30′14″E / 20.1618405°S 57.5037520°E |
கட்டுமான ஆரம்பம் | 2004 |
நிறைவுற்றது | 2006 |
உயரம் | |
கட்டிடக்கலை | 124 m (407 அடி) |
முனை | 124 m (407 அடி) |
கூரை | 98 m (322 அடி) |
தொழில்நுட்ப விபரங்கள் | |
மூலப்பொருள் | கற்காரை |
தள எண்ணிக்கை | 22 |
தளப்பரப்பு | 16,834 m2 (181,200 sq ft) |
மேற்கோள்கள் | |
[1][2][3] |
மொரிசியசு வங்கி கோபுரத்தின் கட்டுமானம் கிட்டத்தட்ட 30 மாதங்கள் பிடித்தது. பருவகால சூறாவளிகளை எதிர்த்து நிற்கிறது. ப்புத் தெரிவிக்கிறது. இதன் செயல்பாட்டின் அடிப்படையில் மொரிசியசில் உள்ள மிகவும் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட கட்டிடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.[5]
101 மீட்டர் உயரம் கொண்ட தொலைதொடர்பு கோபுரம், 82 மீட்டர் உயரம் கொண்ட மாநில வங்கி கோபுரம், 79 மீட்டர் உயரம் கொண்ட மொரிசியசு வானூர்தி மையம் போன்றவை போர்ட் லூயிசில் உள்ள இதர உயரமான கட்டடங்களாகும். 72 மீட்டர் உயரம் கொண்ட எபீன் சைபர் கோபுரம் மற்றும் மல்லெர்ப்சு அலைபரப்பி கோபுரம் ஆகியன போர்ட்லூயிசுக்கு வெளியே அமைந்த கட்டடங்களாகும்.
காட்சியகம்
தொகு-
மொரிசியசு வங்கி கோபுரம் (வலது).
-
2005 சூலை மாதம் கட்டுமானத்தின் போது மொரிசியசு வங்கி கோபுரம்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Bank of Mauritius Building". Council on Tall Buildings and Urban Habitat. Archived from the original on 16 August 2019. பார்க்கப்பட்ட நாள் 16 August 2019.
- ↑ "Bank of Mauritius Building". Emporis. Archived from the original on 16 August 2019. பார்க்கப்பட்ட நாள் 16 August 2019.
- ↑ "Bank of Mauritius Headquarters". Skyscraper Page. Archived from the original on 16 August 2019. பார்க்கப்பட்ட நாள் 16 August 2019.
- ↑ Basant Roi, R. (G.C.S.K., Governor) (18 December 2006). "Inauguration of the new headquarters of the Bank of Mauritius" (PDF). Bank of Mauritius. Archived (PDF) from the original on 16 August 2019. பார்க்கப்பட்ட நாள் 18 February 2007.
{{cite web}}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ WSP Africa. "WSP goes from strength to strength in the Indian Ocean isles". wspgroup.co.za. Archived from the original on 10 February 2008. பார்க்கப்பட்ட நாள் 4 January 2008.
- SAMINADEN, Stéphane (2006-02-25). "La sécurité, priorité des futurs locaux de la Banque de Maurice" (in French). L'express (Mauritius) (La Sentinelle) இம் மூலத்தில் இருந்து 2007-09-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070927215915/http://www.lexpress.mu/display_archived_news.php?news_id=60021. பார்த்த நாள்: 2007-02-18.
- Le Mauricien (21 January 2006)