மொரீசியா (Mauritia) என்பது கேம்பிரியன் என்ற புவி வரலாற்றுக் காலத்திற்கு முன்பு இருந்த குறுங்கண்டம் ஆகும். இது ரொடீனியா கண்டம், இந்தியா மற்றும் மடகாசுகர் என 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பிரிந்த போது தனியாகப் பிரிந்து, பின் சிதறி கடலுக்கடியில் சென்றுள்ளதாக அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்[1][2]. இதன் துண்டுகள் கடலுக்கு அடியில் 10 கிமீ ஆழத்தில் இருப்பதாக நம்பப்படுகிறது. மொரிசியசு தீவின் கடற்கரைகளில் சிர்க்கான் தாதுவின் தேய்வுப் படிவுகள் கண்டறியப்பட்டன. இதனை ஆய்வு செய்ததில், இது 660 முதல் 1970 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் உருவான தாது என கண்டறியப்பட்டது. ஆனால் மொரிசியசு தீவில் உள்ள பாறைகளின் வயது 8.9 மில்லியன் ஆண்டுகள் ஆகும். எனவே இந்த சிர்க்கான் தாது மொரீசியா குறுங்கண்டத்திலிருந்து வந்து கடற்கரைகளிலும் மற்ற பாறைகளிலும் பதிந்து புதிய சூழலை உருவாக்கியது என விளக்குகிறார்கள்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. Torsvik, Trond H.; Hans Amundsen; Ebbe H. Hartz; Fernando Corfu; Nick Kusznir; Carmen Gaina; Pavel V. Doubrovine; Bernhard Steinberger et al. (2013). "A Precambrian microcontinent in the Indian Ocean". Nature Geoscience. doi:10.1038/ngeo1736. பன்னாட்டுத் தர தொடர் எண்:1752-0894. 
  2. "Geoscientists Discover Continent Hidden Under Lava in Indian Ocean". Sci-News.com. 25 February 2013. http://www.sci-news.com/othersciences/geophysics/article00899.html. பார்த்த நாள்: 25 February 2013. 
  3. Perkins, Sid (24 February 2013). "Long-lost continent found under the Indian Ocean". நேச்சர். http://www.nature.com/news/long-lost-continent-found-under-the-indian-ocean-1.12487. பார்த்த நாள்: 25 பெப்ரவரி 2013. 


"https://ta.wikipedia.org/w/index.php?title=மொரீசியா&oldid=2746535" இலிருந்து மீள்விக்கப்பட்டது