மொரோக்கோவின் வரலாறு

மொரோக்கோவின் வரலாறு, வரலாற்றுக்கு முந்திய செபல் இரூட்டு (Jebel Irhoud), தபோரால்ட்டு (Taforalt) நாகரிகங்களைத் தொடர்ந்து வந்த பல ஆயிரவாண்டுகளை உள்ளடக்கியது. இதன் காலம் மௌரித்தானியாவினதும் பிற பேர்பர் இராச்சியங்களினதும் தோற்றம் முதல், இத்ரிசிய மரபினரால் மொரோக்க அரசு நிறுவப்பட்ட காலத்தினூடாக[1] தொடர்ந்து வந்த இசுலாமிய மரபினரின் காலம், குடியேற்றவாதக் காலம், விடுதலை பெற்ற பின்னரான காலம் ஆகியவற்றை உள்ளடக்கியது.

400,000 ஆண்டுகளுக்கு முன்பே இப்பகுதியில் ஒமினிட்டுகள் வாழ்ந்ததற்கான தொல்லியல் சான்றுகள் உள்ளன.[2] கிமு 8 ஆம் நூற்றாண்டுக்கும் 6 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் மொரோக்கோவின் கரையோரப் பகுதிகளில் பினீசியக் குடியேற்றங்கள் உருவானதில் இருந்து மொரோக்கோவின் வரலாறு தொடங்குகின்றது.[3] எனினும், இதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே முதுகுடி மக்களான பேர்பர்கள் இப்பகுதியில் இருந்துள்ளனர். கிமு 5 ஆம் நூற்றாண்டில் கார்த்தேச் நகர அரசு தனது ஆதிக்கத்தை மொரோக்கோவின் கரையோரமாக விரிவாக்கியது.[4] அதன் ஆகிக்கம் அப்பகுதியில் கிமு 3 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை நிலைத்திருந்தது.[5] அதேவேளை, உட்பகுதி நிலங்களை உள்ளூர் அரசர்கள் ஆண்டுவந்தனர். மேற்படி உள்ளூர் அரசர்களின் ஆட்சிகள் கிமு 3 ஆம் நூற்றாண்டில் இருந்து கிபி 40 வரை இருந்தன. அதன் பின்னர் அவற்றின் ஆட்சிப் பகுதிகளை உரோமப் பேரரசு தன்னுடன் இணைத்துக்கொண்டது. கிபி 5 ஆம் நூற்றாண்டில் இப்பகுதிகளை வன்டல்கள் எனப்படும் கிழக்குச் செருமானிக் பழங்குடிகள் கைப்பற்றினர். ஆறாம் நூற்றாண்டில் பைசண்டியப் பேரரசு இப்பகுதிகளை மீண்டும் கைப்பற்றிக்கொண்டது.

8 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் இப்பகுதியை இசுலாமியர் கைப்பற்றிக்கொண்டனர். ஆனால், 740 ஆம் ஆண்டில் பேர்பர் புரட்சியைத் தொடர்ந்து இப்பகுதி உமய்யாத் கலீபகத்தில் இருந்து பிரிந்தது. அரை நூற்றாண்டுக்குப் பின்னர் இத்ரிசிய மரபினர் மொரோக்கோ அரசை நிறுவினர்.[6][7] அல்மோராவித், அல்மோகாத் மரபினரின் ஆட்சிக் காலத்தில் மக்ரெப், இசுலாமிய இசுப்பெயின் ஆகியவற்றின் மீது மொரோக்கோ ஆதிக்கம் செலுத்தியது. 1549 முதல் 1659 வரை சாதி (Saadi) மரபினர் நாட்டை ஆண்டனர். அதன் பின்னர் 1667 இலிருந்து இன்றுவரை அலாவிய (Alaouites) மரபினரே ஆட்சியாளராக உள்ளனர்.[8][9][10]

முதல் மொரோக்க நெருக்கடி, அகார்கிர் நெருக்கடி ஆகியவற்றுக்குப் பின்னர், 1912 இல் ஃபெசு (Fez) உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. இதன்படி மொரோக்கோவை இரண்டாகப் பிரித்து ஒரு பகுதி பிரெஞ்சுக் காப்பரசு ஆகவும், மறு பகுதி இசுப்பெயின் காப்பரசாகவும் ஆக்கப்பட்டது. 44 ஆண்டுகள் நீடித்த பிரெஞ்சு ஆட்சிக்குப் பின்னர் 1956 இல் மொரோக்கோ பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது. சிறிது காலத்தின் பின்னர் இசுப்பெயினின் ஆட்சியில் இருந்த பெரும்பாலான பகுதிகளும் மீட்கப்பட்டன.

வரலாற்றுக்கு முந்திய மொரோக்கோ

தொகு

மொரோக்கோவில், ஓமோ சப்பியென்சுகளின் முன்னோர்களும், தொடக்க மனித இனங்களும் வாழ்ந்ததைத் தொல்லியல் ஆய்வுகள் வெளிக்காட்டியுள்ளன. 400,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தொடக்க மனித மூதாதையின் புதைபடிவ எலும்புகள் சாலே என்னும் இடத்தில் 1971 இல் கண்டுபிடிக்கப்பட்டன.[2] பல ஓமோ சப்பியன்களின் எலும்புகள் 1991 இல் செபல் இரூட்டில் அகழ்ந்தெடுக்கப்பட்டன. 2017 ஆம் ஆண்டில் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திச் செய்யப்பட்ட காலக் கணிப்பின்படி மேற்படி எலும்புகள் குறைந்தது 300,000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை. இதன்படி இங்கே கண்டுபிடிக்கப்பட்ட ஓமோ சப்பியன்கள், உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட ஓமோ சப்பியன்களிலும் முற்பட்ட காலத்தைச் சேர்ந்தவை.[11] 2007 இல் 82,000 ஆண்டுகள் பழமையானவை எனக் கணிக்கப்பட்டுள்ள சிறிய துளையிடப்பட்ட கடற்சிப்பிகளிலாலான மணிகள் தபோரால்ட் என்னும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டவற்றுள் மிகப் பழைய அணிகலன் இதுவே.[12]

மேற்கோள்கள்

தொகு
  1. Per:
    • Mahjoob Zweiria & Christoph Königb, Are Shias rising in the western part of the Arab world? The case of Morocco, in: Journal of North African Studies, Volume 13, Issue 4, 2008, pages 513–529
    • Ch.-A. Julien, Histoire de l'Afrique du Nord, de la conquête arabe à 1830 - Tome II, p.44 (éd. Payot, 1961) : "Idriss Il n'était pas seulement un fondateur de villes, il fut le fondateur du premier État marocain"
    • G Joffe, Morocco: Monarchy, legitimacy and succession, in : Third World Quarterly, 1988 : "tradition (...) reaches back to the origins of the modern Moroccan state in the ninth century Idrisid dynasty which founded the venerable city of. Fes"
    • Moroccan dynastic shurfa’‐hood in two historical contexts: idrisid cult and ‘Alawid power in : The Journal of North African Studies Volume 6, Issue 2, 2001 [1] : "The Idrisids, the founder dynasty of Fas and, ideally at least, of the modern Moroccan state (...)"
    • Ruth Cyr, Twentieth Century Africa, iUniverse, 2001 (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780595189823), p.345: "In 788 Idris, the first Arab ruler of the whole of Morocco, united the Berbers and Arabs under his rule, creating the first Moroccan state. He founded the Idrisid dynasty that reigned for almost two hundred years."
  2. 2.0 2.1 Hublin, Jean Jacques (2010). "Northwestern African middle Pleistocene hominids and their bearing on the emergence of Homo Sapiens". Human Roots: Africa and Asia in the middle Pleistocene. Bristol, England: Western Academic and Specialist Press. அணுகப்பட்டது 14 January 2014.  பரணிடப்பட்டது 2018-12-25 at the வந்தவழி இயந்திரம்
  3. Pennell 2003, p.5
  4. Pennell 2003, pp.7-9
  5. Pennell 2003, pp.9-11
  6. "tradition (...) reaches back to the origins of the modern Moroccan state in the ninth century Idrisid dynasty which founded the venerable city of. Fes", G Joffe, Morocco: Monarchy, legitimacy and succession, in : Third World Quarterly, 1988
  7. "The Idrisids, the founder dynasty of Fas and, ideally at least, of the modern Moroccan state (...)", Moroccan dynastic shurfa’‐hood in two historical contexts: idrisid cult and ‘Alawid power in : The Journal of North African Studies Volume 6, Issue 2, 2001 [2]
  8. "The CBS News Almanac", Hammond Almanac Inc., 1976, p.783: "The Alaouite dynasty (Filali) has ruled Morocco since the 17th century"
  9. Hans Groth & Alfonso Sousa-Poza, "Population Dynamics in Muslim Countries: Assembling the Jigsaw", Springer, 2012 (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783642278815). p.229: "The Alaouite dynasty has ruled Morocco since the days of Mulai ar-Rashid (1664–1672)"
  10. Joseph L. Derdzinski, "Internal Security Services in Liberalizing States: Transitions, Turmoil, and (In)Security", Ashgate Publishing Ltd., 2013 (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781409499015). p.47: "Hassan in 1961, after the death of his father Mohammed V, continued the succession of Alaouite rule in Morocco since the seventeenth century"
  11. http://www.bbc.co.uk/news/science-environment-40194150
  12. "World's Oldest Manufactured Beads Are Older Than Previously Thought". Sciencedaily.com. 2009-05-07. பார்க்கப்பட்ட நாள் 2013-11-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மொரோக்கோவின்_வரலாறு&oldid=3256022" இலிருந்து மீள்விக்கப்பட்டது