மொர்மனியம்

(மொர்மனிசம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மொர்மனியம்[1][2] (Mormonism) என்பது பின்னாள் புனிதர் இயக்க மரபினை சேர்ந்த கிறித்தவ மறுசீரமைப்பு இயக்கமாகும். இதனை 1820 களில் இரண்டாம் யோசப்பு இசுமித்து நிறுவினார். 1830 களிலும் 1840 களிலும் இவ்வியக்கம் தன்னை சீர்திருத்தத் திருச்சபையிலிருந்து பிரித்துக்காட்டத்துவங்கியது. சிமித்தின் இறப்புக்குப் பின்பு பெருவாரியான மொர்மனியர்கள் பிற்கால பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபை (The Church of Jesus Christ of Latter-day Saints) என்னும் பெயரில் பிரிகாம் யங் (Brigham Young) என்பவரின் தலைமையின் கீழ் செயல்படத்துவங்கினர். இவர்கள் விவிலியத்தையும் தமது சமய நூற்களில் ஒன்றாகக் கருதுகின்றனர். மோர்மொன் நூல் இவர்களின் மற்றுமொரு மறைநூலாகும். இதனை ஜோசஃப் ஸ்மித் தனக்கு ஒரு தேவதை மூலம் கிடைத்த தங்கத் தகடுகளில் இருந்த மறைமொழிகளை மொழிபெயர்த்து உருவாக்கினார் என்பர். இவரை இச்சமயத்தினர் பழைய ஏற்பாட்டில் குறிப்பிட்டுள்ளவர்களைப் போன்ற ஒரு இறைவாக்கினர் எனவும் இரத்த சாட்சியாகவும் கருதுகின்றனர்.

மொர்மனிய நூல்

மொர்மனியம் ஏனைய கிறித்தவ சமயப் பிரிவுகளின் அடிப்படை நம்பிக்கை முதலாக ஒத்த கருத்து கொண்டதாக இல்லை. பல வேறுபாடான சமயக் கொள்கைகள் மொர்மனியத்திடம் உண்டு.

மேற்கோள்கள்

தொகு
  1. Terms used in the LDS Restorationist movement பரணிடப்பட்டது 2017-11-14 at the வந்தவழி இயந்திரம் ReligiousTolerance.org
  2. M. Russell Ballard (October 2011), The Importance of a Name
"https://ta.wikipedia.org/w/index.php?title=மொர்மனியம்&oldid=4041072" இலிருந்து மீள்விக்கப்பட்டது