மோகன் நாயக்கு
மோகன் நாயக்கு (Mohan Nayak) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். அக்லிட்சா நாயக்கு மற்றும் சந்திரமா நாயக்கு தம்பதியருக்கு மகனாக 1921 ஆம் ஆண்டு சூலை மாதம் 3 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். ஒடிசா சட்டப் பேரவையில் நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராகவும், மக்களவையில் இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இவர் பணியாற்றினார். 1952 ஆம் ஆண்டு நடைபெற்ற பெர்காம்பூர் இடைத்தேர்தல், 1967, 1971 மற்றும் 1974 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பெர்காம்பூர், துரா மற்றும் கோபால்பூர் சட்டமன்றத் தொகுதிகளிலிருந்து முறையே 1, 4, 5 மற்றும் 6 ஆவது ஒடிசா சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கஞ்சம் மற்றும் பஞ்ச்நகர் மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்டு 2ஆவது மற்றும் 3ஆவது மக்களவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். மோகன் நாயக்கு ஒடிசா அரசியலில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் அரசியல்வாதியாக பணியாற்றினார்.[1][2][3]
மோகன் நாயக்கு Mohan Nayak | |
---|---|
இந்திய மக்களவை உறுப்பினர் | |
பதவியில் 1962–1967 | |
பின்னவர் | அனந்த திரிபாதி சர்மா |
தொகுதி | Bhanjanagar, ஒடிசா |
பதவியில் 1957–1962 | |
தொகுதி | கஞ்சம் தொகுதி, ஒடிசா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பெர்காம்பூர், கஞ்சாம் மாவட்டம், ஒடிசா, பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் | 3 சூலை 1921
இறப்பு | 26 செப்டம்பர் 1983 பெர்காம்பூர், ஒடிசா, இந்தியா | (அகவை 62)
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | சந்திரமா |
மூலம்: [1] |
1940 மற்றும் 1941 ஆம் ஆண்டுகளில் சத்தியாக்கிரகத்திற்காகவும், மீண்டும் 1942 ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கத்திலும் மோகன் நாயக்கு சிறையில் அடைக்கப்பட்டார்.[1]
மோகன் நாயக்கு 1983 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26 ஆம் தேதியன்று தனது 62 ஆவது வயதில் இறந்தார்
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Nayak,Shri Mohan — Members Bioprofile". Lok Sabha. பார்க்கப்பட்ட நாள் 14 September 2020.
- ↑ Sir Stanley Reed (1958). The Times of India Directory and Year Book Including Who's who. Bennett, Coleman & Company. p. 1121. பார்க்கப்பட்ட நாள் 16 May 2020.
- ↑ India. Parliament. Lok Sabha (1966). Lok Sabha Debates. Lok Sabha Secretariat. p. 8391. பார்க்கப்பட்ட நாள் 16 May 2020.