மோகித்து கமல்
மோகித்து கமல் (Mohit Kamal) வங்காளதேச நாட்டைச் சேர்ந்த ஒரு மனநல மருத்துவர் ஆவார். புனைகதை எழுத்தாளராகவும் இவர் அறியப்படுகிறார். குழந்தை இலக்கியத்திற்கான பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், 2011 ஆம் ஆண்டு அக்ரானி வங்கி சிசு அகாடமியின் குழந்தை இலக்கிய விருது இவருக்கு வழங்கப்பட்டது. புனைகதை பிரிவில் வங்காளதேச அகாடமியின் இலக்கிய விருதும் 2018 ஆம் ஆண்டு மோகித்து கமலுக்கு வழங்கப்பட்டது.[1][2][3]
மோகித்து கமல் Mohit Kamal | |
---|---|
பிறப்பு | சனவரி 2, 1960 சிட்டகொங் |
தேசியம் | வங்காளதேசி |
பணி | உளவியலாளர், எழுத்தாளர் |
விருதுகள் | அக்ரானி வங்கி சிசு அகாடமி குழந்தை இலக்கிய விருது (2011) வங்காளதேச அகாடமி இலக்கிய விருது (2018) |
இளமைப் பருவம்
தொகுமோகித்து கமல் 2 ஜனவரி 1960 ஆம் ஆண்டு சனவரி மாதம் 2 ஆம் தேதியன்று சிட்டகாங்கின் சாண்ட்விப் துணை மாவட்டத்தில் அசாதுல் அக் மற்றும் மசூதா காதுன் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். சிட்டகாங் கல்லூரிப் பள்ளி மற்றும் கல்லூரியில் இடைநிலைக் கல்வியையும், சிட்டகாங் கல்லூரியில் உயர்நிலைக் கல்வியையும் முடித்தார். சில்கெட்டு ஒசுமானி மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் பட்டம் பெற்றார்.
விருதுகள்
தொகு- அக்ரானி வங்கி சிசு அகாடமி குழந்தை இலக்கிய விருது (2011)
- வங்காளதேச அகாடமி இலக்கிய விருது (2018)
மேற்கோள்கள்
தொகு- ↑ "Afsan Chowdhury, three others win Bangla Academy Prize". bdnews24.com. https://bdnews24.com/bangladesh/2019/01/28/afsan-chowdhury-three-others-win-bangla-academy-prize.
- ↑ "Bangla Academy Lit Award announced" (in en). New Age. http://www.newagebd.net/article/63127/bangla-academy-lit-award-announced.
- ↑ "Four win Bangla Academy Sahitya Purashkar" (in en). The Daily Star. 29 January 2019. https://www.thedailystar.net/country/news/four-writers-researchers-win-bangla-academy-award-1694044.