மோகித் குப்தா
மோகித் குப்தா (Mohit Gupta) இந்தியாவின் புது தில்லியில் உள்ள கோ.ப. மருத்துவமனை மற்றும் மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரியில் இருதயவியல் பேராசிரியராக உள்ளார். பிரம்மா குமாரிகள் இயக்கத்துடன் குப்தா தொடர்பு கொண்டிருந்தார். [1]
மோகித் குப்தா Mohit Gupta | |
---|---|
பிறப்பு | 1-09-1974 |
பணி | மருத்துவர் மற்றும் பேராசிரியர் |
தில்லியிலுள்ள இந்திரபிரசுத்தா தொழில்நுட்ப நிறுவனமும் தில்லி கோ.ப மருத்துவமனை மற்றும் ஆர்வர்டு மருத்துவப் பள்ளியின் இருதயநோய் நிபுணர்கள் இணைந்து உருவாக்கிய செயற்கை நுண்ணறிவு மாதிரி. திட்டத்தின் முதன்மை ஆய்வாளராக குப்தா இருந்தார். [2] மாரடைப்புக்குப் பிந்தைய தோல்வியைத் தடுக்க தில்லி மருத்துவர்கள் ஓர் அமைப்பை உருவாக்கினர். மாரடைப்பால் பாதிக்கப்பட்ட 30 நாட்களுக்குள் நோயாளி இறக்கும் வாய்ப்பு அல்லது உயிர் பிழைக்கும் வாய்ப்புகளை கணிப்பதற்காக இந்த மாதிரி சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. [3] 2018 ஆம் ஆண்டில், மருத்துவத் துறையில் இவர் ஆற்றிய பணிக்காக இந்திய அரசாங்கம் இருதயவியல் துறையில் சிறந்த மருத்துவர் என்ற பெருமையை இவருக்கு வழங்கியது. குப்தா இந்தியாவின் புது தில்லியில் வசிக்கிறார். [4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Focus on alternative methods of teaching: Minister to varsities". The Pioneer (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-08-27.
- ↑ Nandan Jha, Durgesh (May 28, 2022). "AI model to predict mortality of heart attack survivors". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-07-08.
- ↑ "Delhi doctors develop a system to prevent post-heart attack fatalities". Moneycontrol (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-07-08.
- ↑ Pandey, Devasheesh (2022-01-25). "COVID-19 infection can cause heart damage, claim experts". www.indiatvnews.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-31.
புற இணைப்புகள்
தொகு- Facebook இல் Mohit Gupta