மோகினி அமீது
மோகினி அமீது (Mohini Hameed) பாக்கித்தான் நாட்டைச் சேர்ந்த முதல் வானொலி ஒலிபரப்பாளர் ஆவார். 1922 ஆம் ஆண்டில் இவர் பிறந்தார். அபா சமீம் அல்லது சமீம் அபா என்ற பெயர்களால் நன்கு அறியப்பட்டார். தொகுப்பாளராகவும் ஒரு நடிகையாகவும் இவர் மேலும் அறியப்படுகிறார்.[1] 1947 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 14 ஆம் தேதியன்று பாக்கித்தான் நாடு சுதந்திரம் பெற்றபோது, மோகினி பாக்கித்தானின் முதல் பெண் ஒலிபரப்பாளராக ஆனார்.[2] 2009 ஆம் ஆண்டு மே மாதம் இவர் இறந்தபோது, பாக்கித்தான் வானொலியின் லாகூர் புகைப்பட நிலையம் 'மோகினி அமீது புகைப்பட நிலையம் என்று மறுபெயரிடப்பட்டது.[3] மோகினி அமீது பத்திரிகையாளர் கன்வால் நசீரின் தாயார் ஆவார்.[3][3]
மோகினி அமீது Mohini Hameed | |
---|---|
பிறப்பு | மோகினி தாசு 15 மார்ச்சு 1922 பட்டாலா, பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் |
இறப்பு | 16 மே 2009 சியாட்டில், வாசிங்டன் | (அகவை 87)
தேசியம் | பாக்கித்தானியர் |
மற்ற பெயர்கள் | அபா சமீம் |
குடியுரிமை | பாக்கித்தான் |
பிள்ளைகள் | கன்வல் நசீர் (மகள்) |
விருதுகள் | தம்கா-இ-இம்தியாசு (1965) |
ஆரம்பகால வாழ்க்கை.
தொகுமோகினி தாசு என்ற இயற்பெயருடன் 1922 ஆம் ஆண்டில் பிரித்தானிய இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலிருந்த பட்டாலா நகரத்தில் பிறந்தார்.[3]
தொழில் வாழ்க்கை
தொகுமோகினி 1939 ஆம் ஆண்டில் தனது 17 வயதில் அகில இந்திய வானொலி லாகூரில் சேர்ந்தார்.[3] விரைவில் மோகினி உருது மொழியின் முக்கிய பெண் குரலாக ஆனார். அகில இந்திய வானொலி லாகூரில் இவர் இருந்த காலத்தில் கிட்டத்தட்ட ஒவ்வொரு பெரிய வானொலி நாடகத்திற்கும் அல்லது சிறப்பு அறிவிப்புக்கும் மோகினி குரல் கொடுத்தார். ஆங்கிலேயர்களிடமிருந்து பாக்கித்தான் சுதந்திரம் பெற்றபோது, மோகினி பாக்கித்தானை தனது தாயகமாக தேர்வு செய்தார். மோகினி அமீது பாக்கித்தான் வானொலியில் 35 ஆண்டுகள் பணியாற்றினார்.[4]
தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் மரணம்
தொகு1954 ஆம் ஆண்டில், மோகினி தாசு திருமணம் செய்து கொண்டு மோகினி அமீதாக மாறினார். மோகினி அமீது 2009 ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் தேதியன்று வாசிங்டனின் சியாட்டிலில் இறந்தார்.[5][3][1][4]
விருதுகள்
தொகுமோகினி அமீது பல தேசிய விருதுகளை வென்றார், அவற்றுள் பின்வருவன அடங்கும்:
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "(Broadcaster Mohini Hameed passed away) - فن فنکار - براڈ کاسٹر موہنی حمید چل بسیں". BBC (in உருது). பார்க்கப்பட்ட நாள் 2021-05-23."(Broadcaster Mohini Hameed passed away) - فن فنکار - براڈ کاسٹر موہنی حمید چل بسیں". BBC (in Urdu). Retrieved 2021-05-23.
- ↑ "Mohini Hameed passes away in USA after a brief illness. - Free Online Library". The Free Library. பார்க்கப்பட்ட நாள் 2021-05-23.
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 3.7 Sheikh, Majid (2016-09-18). "Remembering Pakistan's finest radio women, Mohini Hameed and Satnam Mahmood". Dawn (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-23.Sheikh, Majid (2016-09-18). "Remembering Pakistan's finest radio women, Mohini Hameed and Satnam Mahmood". Dawn. Retrieved 2021-05-23.
- ↑ 4.0 4.1 "یومِ وفات: معروف صدا کارہ موہنی حمید کو بلبلِ نشریات بھی کہا جاتا تھا - (Death anniversary of Mohni Hameed/)". ARY News | Urdu - Har Lamha Bakhabar (in உருது). 2021-05-15. பார்க்கப்பட்ட நாள் 2021-05-23."یومِ وفات: معروف صدا کارہ موہنی حمید کو بلبلِ نشریات بھی کہا جاتا تھا - (Death anniversary of Mohni Hameed/)". ARY News | Urdu - Har Lamha Bakhabar (in Urdu). 2021-05-15. Retrieved 2021-05-23.
- ↑ "Legendary Radio voice 'Apa Shamim' is no more". The Nation (in ஆங்கிலம்). 2009-05-18. பார்க்கப்பட்ட நாள் 2021-05-23.