மோஜ்தபா காமெனி


மோஜ்தபா காமெனி (Mojtaba Khamenei பிறப்பு: 8 செப்டம்பர் 1969) நடப்பு ஈரானின் அதியுயர் தலைவரான அலி காமெனியின் மகனும், சியா இசுலாமிய அறிஞரும் ஆவார். இவர் பன்னிருவர் இசுலாமியப் பிரிவைச் சேர்ந்த இசுலாமிய மத குருவுமாவார். 1987-1988-களில் ஈரான்-ஈராக் போரின் போது இவர் ஓர் இராணுவப் பிரிவிற்குக் கட்டளை அதிகாரியாகப் போரிட்டுள்ளார்.[1] 2009 ஈரானிய அதிபர் தேர்தலின் போது ஏற்பட்ட எதிர்ப்பலைகளால் [2][3] நிறுவப்பட்ட இசுலாமிய பச்சை இயக்கத்தில் [4] மோஜ்தபா காமெனி பங்காற்றியவர் ஆவார்.

மோஜ்தபா காமெனி
مجتبی خامنهای
2019ல் மோஜ்தபா கமேனி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
மோஜ்தபா உசைனி கமேனி

8 செப்டம்பர் 1969 (1969-09-08) (அகவை 55)
மஸ்சாத், கொராசான் மாகாணம், ஈரான்
துணைவர்
சக்ரா அதாத்-அதெல் (தி. 2004)
பிள்ளைகள்3
பெற்றோர்
  • அலி காமெனி (தந்தை)
  • மன்சௌரே கோஜஸ்தே பெக்கெர்சதெக் (தாய்)
கல்விகுவாம் இசுலாமிய மதக் கல்வி நிறுவனம்
Military service
பற்றிணைப்புஈரான்
கிளை/சேவைபாசிஜ்
சேவை ஆண்டுகள்1987–2010
தரம்இராணுவக் கட்டளை அதிகாரி
போர்கள்/யுத்தங்கள்ஈரான் – ஈராக் போர்
மோஜ்தபா காமெனி
பதவிஅயதுல்லா
சுய தரவுகள்
சமயம்சியா இசுலாம்
சமயப் பிரிவுபன்னிருவர்

30 ஆண்டுகளுக்கு மேல் பதவியில் உள்ள நடப்பு ஈரானின் அதியுயர் தலைவரான அலி காமெனிக்குப் பின்னர் மோஜ்தபா காமெனி, ஈரானிய உச்சத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளவராகக் கருதப்படுகிறார்.[5][6]

மேற்கோள்கள்

தொகு
  1. "Mojtaba Khamenei and Mahdi Hashemi" இம் மூலத்தில் இருந்து 5 September 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090905201044/http://www.tabnak.ir/fa/pages/?cid=1033. 
  2. Sahimi, Mohammad (20 August 2009). "Nepotism & the Larijani Dynasty". Los Angeles: PBS இம் மூலத்தில் இருந்து 1 May 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190501030945/https://www.pbs.org/wgbh/pages/frontline/tehranbureau/2009/08/nepotism-the-larijani-dynasty.html. 
  3. [https://en.wikipedia.org/wiki/2009_Iranian_presidential_election_protests 2009 Iranian presidential election protests
  4. Iranian Green Movement
  5. Fleishman, Jeffrey (25 June 2009). "Iran supreme leader's son seen as power broker with big ambitions". Los Angeles Times. Archived from the original on 8 November 2016. பார்க்கப்பட்ட நாள் 2 February 2017.
  6. Staff. "IRAN: EXPAT SOURCE'S INFORMATION AND VIEWS ON MOJTABA KHAMENEI, AND THIS SOURCE'S PITCH FOR USG FUNDS". The Telegraph. WikiLeaks இம் மூலத்தில் இருந்து 22 June 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180622222036/https://www.telegraph.co.uk/news/wikileaks-files/london-wikileaks/8304719/IRAN-EXPAT-SOURCES-INFORMATION-AND-VIEWS-ON-MOJTABA-KHAMENEI-AND-THIS-SOURCES-PITCH-FOR-USG-FUNDS.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மோஜ்தபா_காமெனி&oldid=4153054" இலிருந்து மீள்விக்கப்பட்டது